[highlight_content]

Thirumozhi 6-10

பெரிய திருமொழி

ஆறாம் பத்து

பத்தாம் திருமொழி

கிடந்த நம்பி குடந்தை மேவிக், கேழலாய் உலகை

இடந்த நம்பி * எங்கள் நம்பி, எறிஞரரணழியக்

கடந்த நம்பி கடியாரிலங்கை * உலகை ஈரடியால்

நடந்த நம்பி * நாமம் சொல்லில், நமோநாராயணமே.        6.10.1    திருக்குடந்தை (கும்பகோணம்),

திருநறையூர்

விடந்தானுடைய அரவம் வெருவச் செருவில் முனநாள் * முன்

தடந்தாமரை நீர்ப் பொய்கை புக்கு, மிக்க தாடாளன் *

இடந்தான் வையம் கேழலாகி, உலகை ஈரடியால்

நடந்தானுடைய * நாமம் சொல்லில், நமோநாராயணமே.    6.10.2    திருநறையூர்

பூணாதனலும் தறுகண் வேழம் மறுக, வளைமருப்பைப்

பேணான் வாங்கி * அமுதம் கொண்ட பெருமான், திருமார்வன் *

பாணா வண்டு முரலும் கூந்தல், ஆய்ச்சி தயிர் வெண்ணெய்

நாணாதுண்டான் * நாமம் சொல்லில், நமோநாராயணமே.   6.10.3    திருநறையூர்

கல்லார் மதிள்சூழ், கச்சி நகருள் நச்சி * பாடகத்துள்

எல்லாவுலகும் வணங்க, இருந்த வம்மான் * இலங்கைக் கோன்

வல்லாளாகம் வில்லால் முனிந்த எந்தை, விபீடணற்கு

நல்லானுடைய * நாமம் சொல்லில், நமோநாராயணமே.      6.10.4    திருநறையூர்,

திருக்கச்சி (அத்திகிரி),

பாடகம்

குடையா வரையால், நிரை முன் காத்த பெருமான் * மருவாத

விடை தானேழும் வென்றான் கோவல் நின்றான் * தென்னிலங்கை

அடையா அரக்கர் வீயப் பொருது, மேவி வெங்கூற்றம்

நடையா வுண்ணக் கண்டான் * நாமம், நமோநாராயணமே.            6.10.5    திருநறையூர்,

திருக்கோவலூர்

கான எண்கும் குரங்கும், முசுவும் படையா * அடலரக்கர்

மானமழித்து நின்ற, வென்றியம்மான் * எனக்கு என்றும்

தேனும் பாலும் அமுதுமாய, திருமால் திருநாமம் *

நானும் சொன்னேன் நமரும் உரைமின், நமோநாராயணமே.         6.10.6    திருநறையூர்

நின்ற வரையும் கிடந்த கடலும், திசையும் இருநிலனும் *

ஒன்றும் ஒழியா வண்ணம், எண்ணி நின்ற அம்மானார் *

குன்று குடையா எடுத்த அடிகளுடைய திருநாமம் *

நன்று காண்மின் தொண்டீர் சொன்னேன், நமோநாராயணமே.         6.10.7    திருநறையூர்

கடுங்கால் மாரி கல்லேபொழிய, அல்லே எமக்கென்று

படுங்கால் * நீயே சரணென்று, ஆயரஞ்ச அஞ்சா முன் *

நெடுங்காற் குன்றம் குடை யொன் றேந்தி நிரையைச் சிரமத்தால் *

நடுங்கா வண்ணம் காத்தான் நாமம், நமோநாராயணமே.      6.10.8    திருநறையூர்

பொங்கு புணரிக்கடல் சூழாடை, நிலமாமகள் மலர்மா

மங்கை * பிரமன் சிவன் இந்திரன், வானவர் நாயகராய *

எங்களடிகள், இமையோர் தலைவருடைய திருநாமம் *

நங்கள் வினைகள் தவிர உரைமின், நமோநாராயணமே.      6.10.9    திருநறையூர்

வாவித் தடம் சூழ் மணிமுத்தாற்று, நறையூர் நெடுமாலை *

நாவில் பரவி நெஞ்சில் கொண்டு, நம்பி நாமத்தைக் *

காவித் தடங்கண் மடவார் கேள்வன், கலியனொலி மாலை *

மேவிச் சொல்ல வல்லார் பாவம், நில்லா வீயுமே.  6.10.10  திருநறையூர்

**************

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.