[highlight_content]

Thirumozhi 6-2

பெரிய திருமொழி

ஆறாம் பத்து

இரண்டாம் திருமொழி

பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில் பொருளின்பமென இரண்டும்

இறுத்தேன் * ஐம்புலன்கட் கிடனாயின வாயிலொட்டி

அறுத்தேன் * ஆர்வச் செற்றமவை தம்மை மனத்தகற்றி

வெறுத்தேன் * நின்னடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே !     6.2.1      திருவிண்ணகர்

மறந்தேன் உன்னை முன்னம் மறந்தமதியில் மனத்தால் *

இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பைக் குழியில் *

பிறந்தே எய்த்தொழிந்தேன் பெருமான் ! திருமார்பா ! *

சிறந்தேன் நின்னடிக்கே திருவிண்ணகர் மேயவனே !      6.2.2      திருவிண்ணகர்

மானேய் நோக்கியர் தம் வயிற்றுக் குழியிலுழைக்கும் *

ஊனேராக்கை தன்னை உதவாமை உணர்ந்துணர்ந்து *

வானே ! மாநிலமே! வந்து வந்து என்மனத்திருந்த

தேனே ! * நின்னடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே!   6.2.3      திருவிண்ணகர்

பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிரென்றிவர் பின்னுதவாது

அறிந்தேன் * நீ பணித்த அருளென்னும் ஒள்வாளுருவி

எறிந்தேன் * ஐம்புலன்கள் இடர்தீர எறிந்து வந்து

செறிந்தேன் * நின்னடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே !       6.2.4      திருவிண்ணகர்

பாண்தேன் வண்டறையும் குழலார்கள் பல்லாண்டிசைப்ப

ஆண்டார் * வையமெல்லாம் அரசாகி முன்னாண்டவரே

மாண்டாரென்று வந்தார் அந்தோ ! * மனைவாழ்க்கை தன்னை

வேண்டேன் * நின்னடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே!          6.2.5      திருவிண்ணகர்

கல்லா ஐம்புலன்களவை கண்டவாறு செய்யகில்லேன் *

மல்லா ! மல்லமருள் மல்லர் மாள, மல்லடர்த்த

மல்லா ! * மல்லலம் சீர், மதிள் நீரிலங்கை யழித்த

வில்லா ! * நின்னடைந்தேன், திருவிண்ணகர் மேயவனே!             6.2.6      திருவிண்ணகர்

வேறா யானிரந்தேன், வெகுளாது மனக்கொள் எந்தாய் ! *

ஆறா வெந்நரகத்து, அடியேனை யிடக்கருதிக் *

கூறா ஐவர் வந்து, குமைக்கக் குடிவிட்டவரைத் *

தேறாது உன்னடைந்தேன், திருவிண்ணகர் மேயவனே !    6.2.7      திருவிண்ணகர்

தீவாய் வல்வினையார், உடன் நின்று சிறந்தவர் போல் *

மேவா வெந்நரகத்து, இடவுற்று விரைந்து வந்தார் *

மூவா வானவர் தம் முதல்வா ! மதிகோள் விடுத்த

தேவா ! * நின்னடைந்தேன், திருவிண்ணகர் மேயவனே !  6.2.8      திருவிண்ணகர்

போதார் தாமரையாள் புலவிக், குலவானவர் தம்

கோதா ! * கோதில் செங்கோல், குடை மன்னரிடை நடந்த

தூதா ! * தூமொழியாய்! சுடர் போலென் மனத்திருந்த

வேதா ! * நின்னடைந்தேன், திருவிண்ணகர் மேயவனே !  6.2.9      திருவிண்ணகர்

தேனார் பூம்புறவில், திருவிண்ணகர் மேயவனை *

வானாரும் மதிள்சூழ், வயல் மங்கையர் கோன் * மருவார்

ஊனார் வேற்கலியன், ஒலிசெய் தமிழ் மாலை வல்லார் *

கோனாய், வானவர்தம் கொடிமாநகர் கூடுவரே.       6.2.10    திருவிண்ணகர்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.