பெரிய திருமொழி
ஆறாம் பத்து
இரண்டாம் திருமொழி
பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில் பொருளின்பமென இரண்டும்
இறுத்தேன் * ஐம்புலன்கட் கிடனாயின வாயிலொட்டி
அறுத்தேன் * ஆர்வச் செற்றமவை தம்மை மனத்தகற்றி
வெறுத்தேன் * நின்னடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே ! 6.2.1 திருவிண்ணகர்
மறந்தேன் உன்னை முன்னம் மறந்தமதியில் மனத்தால் *
இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பைக் குழியில் *
பிறந்தே எய்த்தொழிந்தேன் பெருமான் ! திருமார்பா ! *
சிறந்தேன் நின்னடிக்கே திருவிண்ணகர் மேயவனே ! 6.2.2 திருவிண்ணகர்
மானேய் நோக்கியர் தம் வயிற்றுக் குழியிலுழைக்கும் *
ஊனேராக்கை தன்னை உதவாமை உணர்ந்துணர்ந்து *
வானே ! மாநிலமே! வந்து வந்து என்மனத்திருந்த
தேனே ! * நின்னடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே! 6.2.3 திருவிண்ணகர்
பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிரென்றிவர் பின்னுதவாது
அறிந்தேன் * நீ பணித்த அருளென்னும் ஒள்வாளுருவி
எறிந்தேன் * ஐம்புலன்கள் இடர்தீர எறிந்து வந்து
செறிந்தேன் * நின்னடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே ! 6.2.4 திருவிண்ணகர்
பாண்தேன் வண்டறையும் குழலார்கள் பல்லாண்டிசைப்ப
ஆண்டார் * வையமெல்லாம் அரசாகி முன்னாண்டவரே
மாண்டாரென்று வந்தார் அந்தோ ! * மனைவாழ்க்கை தன்னை
வேண்டேன் * நின்னடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே! 6.2.5 திருவிண்ணகர்
கல்லா ஐம்புலன்களவை கண்டவாறு செய்யகில்லேன் *
மல்லா ! மல்லமருள் மல்லர் மாள, மல்லடர்த்த
மல்லா ! * மல்லலம் சீர், மதிள் நீரிலங்கை யழித்த
வில்லா ! * நின்னடைந்தேன், திருவிண்ணகர் மேயவனே! 6.2.6 திருவிண்ணகர்
வேறா யானிரந்தேன், வெகுளாது மனக்கொள் எந்தாய் ! *
ஆறா வெந்நரகத்து, அடியேனை யிடக்கருதிக் *
கூறா ஐவர் வந்து, குமைக்கக் குடிவிட்டவரைத் *
தேறாது உன்னடைந்தேன், திருவிண்ணகர் மேயவனே ! 6.2.7 திருவிண்ணகர்
தீவாய் வல்வினையார், உடன் நின்று சிறந்தவர் போல் *
மேவா வெந்நரகத்து, இடவுற்று விரைந்து வந்தார் *
மூவா வானவர் தம் முதல்வா ! மதிகோள் விடுத்த
தேவா ! * நின்னடைந்தேன், திருவிண்ணகர் மேயவனே ! 6.2.8 திருவிண்ணகர்
போதார் தாமரையாள் புலவிக், குலவானவர் தம்
கோதா ! * கோதில் செங்கோல், குடை மன்னரிடை நடந்த
தூதா ! * தூமொழியாய்! சுடர் போலென் மனத்திருந்த
வேதா ! * நின்னடைந்தேன், திருவிண்ணகர் மேயவனே ! 6.2.9 திருவிண்ணகர்
தேனார் பூம்புறவில், திருவிண்ணகர் மேயவனை *
வானாரும் மதிள்சூழ், வயல் மங்கையர் கோன் * மருவார்
ஊனார் வேற்கலியன், ஒலிசெய் தமிழ் மாலை வல்லார் *
கோனாய், வானவர்தம் கொடிமாநகர் கூடுவரே. 6.2.10 திருவிண்ணகர்