[highlight_content]

Thirumozhi 6-4

பெரிய திருமொழி

ஆறாம் பத்து

நான்காம் திருமொழி

கண்ணும் சுழன்று, பீளையோடு ஈளை வந்தேங்கினால் *

பண்ணின் மொழியார், பைய நடமி னென்னாத முன் *

விண்ணும் மலையும், வேதமும் வேள்வியு மாயினான் *

நண்ணு நறையூர் நாம் தொழுதும், எழு நெஞ்சமே !  6.4.1      திருநறையூர்

கொங்குண் குழலார், கூடியிருந்து சிரித்து * நீர்

இங்கென் ? இருமி எம்பால் வந்ததென்றிகழாத முன் *

திங்களெரிகால், செஞ்சுடராயவன் தேசுடை *

நங்கள் நறையூர் நாம் தொழுதும், எழு நெஞ்சமே !    6.4.2      திருநறையூர்

கொங்கார் குழலார், கூடியிருந்து சிரித்து * எம்மை

எங்கோலம் ஐயா ! என் ? இனிக் காண்பது என்னாத முன் *

செங்கோல் வலவன் தான், பணிந்தேத்தித் திகழுமூர் *

நங்கோன் நறையூர் நாம் தொழுதும், எழு நெஞ்சமே !            6.4.3      திருநறையூர்

கொம்பும் அரவமும், வல்லியும் வென்ற நுண்ணேரிடை *

வம்புண் குழலார், வாசலடைத்து இகழாத முன் *

செம்பொன் கமுகினம், தான் கனியும் செழுஞ் சோலைசூழ் *

நம்பன் நறையூர் நாம் தொழுதும், எழு நெஞ்சமே !   6.4.4      திருநறையூர்

விலங்கும் கயலும் வேலும், ஒண்காவியும் வென்ற கண் *

சலங்கொண்ட சொல்லார், தாங்கள் சிரித்து இகழாத முன் *

மலங்கும் வராலும், வாளையும் பாய் வயல் சூழ்தரு *

நலங்கொள் நறையூர் நாம் தொழுதும், எழு நெஞ்சமே !       6.4.5      திருநறையூர்

மின்னேரிடையார் வேட்கையை மாற்றி யிருந்து *

என் நீர் இருமி எம்பால் வந்தது ? என்று இகழாத முன் *

தொன்னீர் இலங்கை மலங்க, விலங்கெரி ஊட்டினான் *

நன்னீர் நறையூர் நாம் தொழுதும், எழு நெஞ்சமே !   6.4.6      திருநறையூர்

வில்லேர் நுதலார் வேட்கையை, மாற்றிச் சிரித்து * இவன்

பொல்லான் திரைந்தானென்னும், புறனுரை கேட்பதன் முன் *

சொல்லார் மறை நான்கோதி, உலகில் நிலாயவர் *

நல்லார் நறையூர் நாம் தொழுதும், எழு நெஞ்சமே !            6.4.7      திருநறையூர்

வாளொண் கண் நல்லார் தாங்கள், மதனன் என்றார் தம்மைக் *

கேண்மின்கள் ஈளையோடு ஏங்கு, கிழவன் என்னாத முன் *

வேள்வும் விழவும் வீதியில், என்றும் அறாத ஊர் *

நாளும் நறையூர் நாம் தொழுதும், எழு நெஞ்சமே !   6.4.8      திருநறையூர்

கனிசேர்ந்திலங்கு நல்வாயவர், காதன்மை விட்டிடக் *

குனிசேர்ந் துடலம், கோலில் தளர்ந்து இளையாத முன் *

பனிசேர் விசும்பில், பால்மதி கோள் விடுத்தானிடம் *

நனிசேர் நறையூர் நாம் தொழுதும், எழு நெஞ்சமே !          6.4.9      திருநறையூர்

பிறைசேர் நுதலார், பேணுதல் நம்மை யிலாத முன் *

நறைசேர் பொழில் சூழ் நறையூர் தொழு, நெஞ்சமே என்ற *

கறையார் நெடுவேல் மங்கையர் கோன், கலிகன்றி சொல் *

மறவாது உரைப்பவர், வானவர்க்கு இன்னரசாவரே.  6.4.10    திருநறையூர்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.