[highlight_content]

Thirumozhi 6-5

பெரிய திருமொழி

ஆறாம் பத்து

ஐந்தாம் திருமொழி

கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு, * இமையோர்

துளங்கல் தீர நல்கு சோதிச் சுடராய *

வலங்கை யாழி, இடங்கைச் சங்கம் உடையானூர் *

நலங்கொள் வாய்மை, அந்தணர் வாழும் நறையூரே.          6.5.1      திருநறையூர்

முனையார் சீயமாகி, அவுணன் முரண் மார்வம் *

புனை வாளுகிரால், போழ்பட ஈர்ந்த புனிதனூர் *

சினையார் தேமாஞ், செந்தளிர் கோதிக் குயில் கூவும் *

நனையார் சோலை சூழ்ந்து, அழகாய நறையூரே.          6.5.2      திருநறையூர்

ஆனைப் புரவி, தேரொடு காலாளணி கொண்ட *

சேனைத் தொகையைச் சாடி, இலங்கை செற்றானூர் *

மீனைத் தழுவி, வீழ்ந்தெழும் மள்ளர்க்கு அலமந்து *

நானப் புதலில், ஆமை யொளிக்கும் நறையூரே.     6.5.3      திருநறையூர்

உறியார் வெண்ணெயுண்டு, உரலோடும் கட்டுண்டு *

வெறியார் கூந்தல் பின்னை பொருட்டு, ஆன் வென்றானூர் *

பொறியார் மஞ்ஞை, பூம்பொழில் தோறும் நடமாட *

நறு நாண்மலர் மேல், வண்டு இசைபாடும் நறையூரே.         6.5.4      திருநறையூர்

விடையேழ் வென்று, மென் தோளாய்ச்சிக்கு அன்பனாய் *

நடையால், நின்ற மருதம் சாய்த்த நாதனூர் *

பெடையோடு அன்னம், பெய்வளையார் தம் பின்சென்று *

நடையோடியலி, நாணி யொளிக்கும் நறையூரே.         6.5.5      திருநறையூர்

பகுவாய் வன்பேய் கொங்கை சுவைத்து, ஆருயிருண்டு *

புகுவாய் நின்ற, போதகம் வீழப் பொருதானூர் *

நெகுவாய் நெய்தல், பூமது மாந்திக் * கமலத்தின்

நகுவாய் மலர்மேல், அன்ன முறங்கும் நறையூரே.    6.5.6      திருநறையூர்

முந்து நூலும் முப்புரி நூலும், முன்னீந்த *

அந்தணாளன் பிள்ளையை, அஞ்ஞான்று அளித்தானூர் *

பொந்தில் வாழும் பிள்ளைக்காகிப், புள்ளோடித் *

நந்துவாரும், பைம்புனல் வாவி நறையூரே.       6.5.7      திருநறையூர்

வெள்ளைப் புரவித்தேர் விசயற்காய், விறல் வியூகம்

விள்ள * சிந்துக்கோன் விழ, ஊர்ந்த விமலனூர் *

கொள்ளைக் கொழுமீன், உண்குருகு ஓடிப் பெடையோடும் *

நள்ளக் கமலத் தேறலுகுக்கும் நறையூரே.        6.5.8      திருநறையூர்

பாரை யூரும், பாரம் தீரப் பார்த்தன் தன் *

தேரை யூரும், தேவ தேவன் சேருமூர்

தாரை யூரும் * தண்தளிர் வேலி புடை சூழ *

நாரை யூரும், நல்வயல் சூழ்ந்த நறையூரே.     6.5.9      திருநறையூர்

தாமத் துளப, நீள்முடி மாயன் தான் நின்ற *

நாமத்திரள், மாமாளிகை சூழ்ந்த நறையூர் மேல் *

காமக்கதிர் வேல் வல்லான், கலியனொலி மாலை *

சேமத் துணையாம், செப்புமவர்க்குத் திருமாலே.      6.5.10    திருநறையூர்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.