[highlight_content]

Thirumozhi 6-9

பெரிய திருமொழி

ஆறாம் பத்து

ஒன்பதாம் திருமொழி

பெடையடர்த்த மடவன்னம் பிரியாது * மலர்க்கமலம்

மடலெடுத்து மது நுகரும் வயலுடுத்த திருநறையூர் *

முடை யடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலி திரிவோன் *

இடர் கெடுத்த திருவாளன் இணையடியே அடை நெஞ்சே !         6.9.1      திருநறையூர்

கழியாரும் கனசங்கம் கலந்து எங்கும் நிறைந்தேறி *

வழியார முத்தீன்று வளங் கொடுக்கும் திருநறையூர் *

பழியாரும் விறலரக்கன் பரு முடிகளவை சிதற *

அழலாரும் சரம் துரந்தான் அடியிணையே அடை நெஞ்சே !        6.9.2      திருநறையூர்

சுளை கொண்ட பலங்கனிகள் தேன் பாயக் * கதலிகளின்

திளை கொண்ட பழம் கெழுமு திகழ்சோலைத் திருநறையூர் *

வளை கொண்ட வண்ணத்தன் பின்தோன்றல் * மூவுலகோடு

அளை வெண்ணெ யுண்டான்தன் அடியிணையே அடை நெஞ்சே !        6.9.3                திருநறையூர்

துன்று ஓளித்துகில் படலம் துன்னி எங்கும் மாளிகை மேல் *

நின்றார வான் மூடும் நீள்செல்வத் திருநறையூர் *

மன்றாரக் குடமாடி வரை யெடுத்து மழை தடுத்த *

குன்றாரும் திரள் தோளன் குரைகழலே அடை நெஞ்சே !           6.9.4      திருநறையூர்

அகிற் குறடும் சந்தனமும் அம்பொன்னும் அணி முத்தும் *

மிகக் கொணர்ந்து திரை யுந்தும் வியன் பொன்னித் திருநறையூர் *

பகல் கரந்த, சுடராழிப் படையான் * இவ்வுலகேழும்

புகக் கரந்த திருவயிற்றன் பொன்னடியே அடை நெஞ்சே !         6.9.5      திருநறையூர்

பொன் முத்தும் அரியுகிரும் புழைக்கைம்மா கரிக்கோடும் *

மின்னத் தண்திரையுந்தும் வியன் பொன்னித் திருநறையூர் *

மின்னொத்த நுண்மருங்குல் மெல் இயலைத் திருமார்பில்

மன்னத் * தான் வைத்துகந்தான் மலரடியே அடை நெஞ்சே !      6.9.6      திருநறையூர்

சீர் தழைத்த கதிர்ச் செந்நெல் செங்கமலத் திடையிடையின் *

பார் தழைத்துக் கரும்போங்கிப் பயன் விளைக்கும் திருநறையூர் *

கார் தழைத்த திருவுருவன் கண்ணபிரான் விண்ணவர் கோன் *

தார் தழைத்த துழாய் முடியன் தளிரடியே அடை நெஞ்சே !         6.9.7      திருநறையூர்

குலையார்ந்த பழுக்காயும் பசுங்காயும் பாளை முத்தும் *

தலையார்ந்த இளங்கமுகின் தடஞ்சோலைத் திருநறையூர் *

மலையார்ந்த கோலம் சேர் மணிமாடம் மிக மன்னி *

நிலையார நின்றான் தன் நீள்கழலே அடை நெஞ்சே !       6.9.8      திருநறையூர்

மறையாரும்பெருவேள்விக் கொழும்புகைபோய்வளர்ந்து* எங்கும்

நிறையார வான் மூடும் நீள்செல்வத் திருநறையூர் *

பிறையாரும் சடையானும் பிரமனும் முன்தொழுதேத்த *

இறையாகி நின்றான் தன் இணையடியே அடை நெஞ்சே !             6.9.9      திருநறையூர்

திண்களகம் மதிள் புடை சூழ் திருநறையூர் நின்றானை *

வண்களகம் நிலவெறிக்கும் வயல் மங்கை நகராளன் *

பண்கள் அகம் பயின்ற சீர்ப் பாடலிவை பத்தும் வல்லார் *

விண்களகத்து இமையவராய் வீற்றிருந்து வாழ்வாரே.   6.9.10    திருநறையூர்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.