[highlight_content]

Thirumozhi 5-1

பெரிய திருமொழி

ஐந்தாம் பத்து

முதல் திருமொழி

அறிவதரியான் அனைத்துலகுமுடையான்

என்னை யாளுடையான் *

குறிய மாணுருவாகிய கூத்தன் மன்னி யமருமிடம் *

நறிய மலர் மேல் சுரும்பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாடப் *

பொறிகொள் சிறைவண்டு இசை பாடும் புள்ளம்பூதங்குடி தானே.      5.1.1                புள்ளம்பூதங்குடி

கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்துப் *

பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம் *

பள்ளச் செருவில் கயலுகளப் பழனக் கழனி யதனுள் போய் *

புள்ளுப் பிள்ளைக் கிரை தேடும் புள்ளம்பூதங்குடி தானே.           5.1.2      புள்ளம்பூதங்குடி

மேவா அரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச், சரம் துரந்து *

மாவாய் பிளந்து மல்லடர்த்து மருதம் சாய்த்த மாலதிடம் *

காவார் தெங்கின் பழம் வீழக் கயல்கள் பாயக் குருகிரியும் *

பூவார் கழனி எழிலாரும் புள்ளம்பூதங்குடி தானே.   5.1.3      புள்ளம்பூதங்குடி

வெற்பால் மாரி பழுதாக்கி விறல் வாளரக்கர் தலைவன் தன் *

வற்பார் திரள் தோள் ஐந்நான்கும் துணித்த, வல்விலி ராமனிடம் *

கற்பார் புரிசை செய்குன்றம் கவினார் கூடம் மாளிகைகள் *

பொற்பார் மாடம் எழிலாரும் புள்ளம்பூதங்குடி தானே.      5.1.4      புள்ளம்பூதங்குடி

மையார் தடங்கண் கருங்கூந்தல் ஆய்ச்சி, மறைய வைத்த* தயிர்

நெய்யார் பாலொடு அமுது செய்த நேமியங்கை மாயனிடம் *

செய்யார் ஆரல் இரை கருதிச் செங்கால் நாறை சென்றணையும் *

பொய்யா நாவின் மறையாளர் புள்ளம்பூதங்குடி தானே.   5.1.5      புள்ளம்பூதங்குடி

மின்னினன்ன நுண்மருங்குல் வேயேய் தடந்தோள்மெல்லியற்கா*

மன்னு சினத்த மழவிடைகள் ஏழன்றடர்த்த மாலதிடம் *

மன்னு முதுநீரரவிந்த மலர்மேல் வரிவண்டிசை பாடப் *

புன்னை பொன்னேய் தாதுதிர்க்கும் புள்ளம்பூதங்குடி தானே.        5.1.6      புள்ளம்பூதங்குடி

குடையா விலங்கல் கொண்டேந்தி மாரி பழுதாநிரை காத்துச் *

சடையான் ஓட அடல் வாணன் தடந்தோள் துணித்த தலைவனிடம் *

குடியா வண்டு கள்ளுண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும் *

புடையார் கழனி எழிலாரும் புள்ளம்பூதங்குடி தானே.      5.1.7      புள்ளம்பூதங்குடி

கறையார் நெடுவேல் மறமன்னர் வீய விசயன் தேர் கடவி, *

இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைத்த எந்தையிடம் *

மறையால் முத்தீயவை வளர்க்கும் மன்னு புகழால் வண்மையால் *

பொறையால் மிக்க அந்தணர் வாழ் புள்ளம்பூதங்குடி தானே.    5.1.8      புள்ளம்பூதங்குடி

துன்னிமண்ணும் விண்ணாடும் தோன்றாது, இருளாய் மூடியநாள்*

அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த அமலனிடம் *

மின்னு சோதி நவமணியும் வேயின் முத்தும் சாமரையும் *

பொன்னும் பொன்னி கொணர்ந்தலைக்கும் புள்ளம்பூதங்குடி தானே.      5.1.9                புள்ளம்பூதங்குடி

கற்றா மறித்து காளியன்தன் சென்னி நடுங்க நடம் பயின்ற *

பொற்றாமரையாள் தன் கேள்வன் புள்ளம்பூதங்குடி தன் மேல் *

கற்றார் பரவும் மங்கையர் கோன் காரார் புயற்கைக் கலிகன்றி *

சொல் தான் ஈரைந்திவை பாடச் சோர நில்லா துயர் தாமே.    5.1.10    புள்ளம்பூதங்குடி

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.