[highlight_content]

Thirumozhi 5-10

பெரிய திருமொழி

ஐந்தாம் பத்து

பத்தாம் திருமொழி

தீதறு நிலத்தொடு எரிகாலினொடு

நீர்கெழு விசும்பு மவையாய் *

மாசறு மனத்தினொடு உறக்கமொடிறக்கை

யவையாய பெருமான் *

தாய் செற உளைந்து தயிருண்டு குடமாடு

தடமார்வர் தகைசேர் *

நாதன் உறைகின்ற நகர்

நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே !  5.10.1    நந்திபுரவிண்ணகரம்

உய்யும் வகையுண்டு சொனசெய்யில்

உலகேழும் ஒழியாமை முனநாள் *

மெய்யினளவே அமுது செய்யவல,

ஐயனவன் மேவு நகர்தான் *

மைய வரிவண்டு மதுவுண்டு கிளையோடு

மலர் கிண்டி, அதன்மேல் *

நைவளம் நவிற்று பொழில்

நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே!    5.10.2    நந்திபுரவிண்ணகரம்

உம்பருலகேழு கடலேழு மலையேழும்,

ஒழியாமை முன நாள் *

தம்பொன் வயிறாரளவுமுண்டு அவையுமிழ்ந்த

தடமார்வர் * தகை சேர்

வம்பு மலர்கின்ற பொழில் பைம்பொன் வரு

தும்பி மணி, கங்குல் வயல்சூழ் *

நம்பன் உறைகின்ற நகர்

நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே !  5.10.3    நந்திபுரவிண்ணகரம்

பிறையினொளி யெயிறிலகமுறுகி

யெதிர் பொருதுமென வந்த அசுரர் *

இறைகளவை நெறுநெறென வெறிய, அவர்

வயிறழல நின்ற பெருமான் *

சிறைகொள் மயில் குயில் பயில மலர்களுக,

அளிமுரல அடிகொள் நெடுமால்

நறை செய் பொழில் மழை தவழும்,

நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே !  5.10.4    நந்திபுரவிண்ணகரம்

மூள எரி சிந்தி முனிவெய்தி

அமர் செய்துமென வந்த அசுரர் *

தோளும் அவர் தாளும் முடியோடு

பொடியாக, நொடியாமள வெய்தான் *

வாளும் வரிவில்லும் வளையாழி

கதை சங்கமிவை அங்கை யுடையான் *

நாளும் உறைகின்ற நகர்

நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே!    5.10.5    நந்திபுரவிண்ணகரம்

தம்பியொடு தாமொருவர் தன்துணைவி

காதல் துணையாக, முனநாள் *

வெம்பியெரி கானகம் உலாவுமவர் தாம்

இனிது மேவு நகர் தான் *

கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயிலாலும்

எழிலார் புறவுசேர் *

நம்பி உறைகின்ற நகர்

நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே !  5.10.6    நந்திபுரவிண்ணகரம்

தந்தை மனமுந்து துயர் நந்த

இருள் வந்த விறல் நந்தன் மதலை *

எந்தை யிவனென்று அமரர் கந்தமலர் கொண்டு

தொழ நின்ற நகர் தான் *

மந்த முழவோசை மழையாக வெழுகார்

மயில்களாடு பொழில் சூழ் *

நந்தி பணி செய்த நகர்

நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே!    5.10.7    நந்திபுரவிண்ணகரம்

எண்ணில் நினைவெய்தி யினியில்லை

யிறையென்று, முனியாளர் * திருவார்

பண்ணில் மலிகீத மொடுபாடி

அவராடலொடுகூட எழிலார் *

மண்ணிலிது போல நகரில்லையென

வானவர்கள் தாம் மலர்கள் தூய் *

நண்ணி யுறைகின்ற நகர்

நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே !  5.10.8    நந்திபுரவிண்ணகரம்

வங்கமலி பெளவமது மாமுகடி

னுச்சிபுக, மிக்க பெருநீர் *

அங்கமழியாரவனதாணை தலை சூடும்

அடியார் அறிதியேல் *

பொங்கு புனலுந்து மணி கங்குலிருள்

சீறுமொளி எங்குமுளதால் *

நங்கள் பெருமானுறையும்

நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே!   5.10.9    நந்திபுரவிண்ணகரம்

நறைசெய் பொழில் மழை தவழும்

நந்திபுர விண்ணகரம் நண்ணியுறையும் *

உறைகொள் புகராழி சுரிசங்கமவை

அங்கை யுடையானை * ஒளிசேர்

கறை வளரும் வேல்வல்ல கலியன்

ஒலிமாலை இவை ஐந்துமைந்தும் *

முறையில் இவை பயிலவல அடியவர்கள்

கொடுவினைகள் முழுதகலுமே.   5.10.10  நந்திபுரவிண்ணகரம்

**************

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.