[highlight_content]

Thirumozhi 5-4

பெரிய திருமொழி

ஐந்தாம் பத்து

நான்காம் திருமொழி

உந்தி மேல் நான்முகனைப் படைத்தான், உலகுண்டவன்

எந்தை பெம்மான் * இமையோர்கள் தாதைக்கு, இடம் என்பரால் *

சந்தினோடு மணியும் கொழிக்கும் புனல், காவிரி *

அந்தி போலும் நிறத்தார் வயல் சூழ், தென்னரங்கமே.        5.4.1      திருவரங்கம்

வையமுண்டு, ஆலிலை மேவும் மாயன் * மணிநீள்முடிப்

பைகொள் நாகத்தணையான் பயிலும், இடமென்பரால் *

தையல் நல்லார் குழல் மாலையும், மற்றவர் தடமுலைச்

செய்ய சாந்தும் * கலந்திழி புனல் சூழ், தென்னரங்கமே.     5.4.2      திருவரங்கம்,

திருப்பாற்கடல்

பண்டு இவ்வைய மளப்பான் சென்று, மாவலி கையில் நீர்

கொண்ட * ஆழித்தடக்கைக் குறளன், இடமென்பரால் *

வண்டு பாடும் மதுவார் புனல், வந்திழி காவிரி *

அண்டநாறும் பொழில் சூழ்ந்து அழகார், தென்னரங்கமே.      5.4.3      திருவரங்கம்

விளைத்த வெம்போர் விறல் வாளரக்கன் நகர், பாழ்பட *

வளைத்த வல்வில் தடக்கை யவனுக்கு, இடமென்பரால் *

துளைக்கை யானை, மருப்பும் அகிலும் கொணர்ந்துந்தி * முன்

திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ், தென்னரங்கமே.  5.4.4      திருவரங்கம்

வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான்புக *

அம்பு தன்னால் முனிந்த அழகனிட மென்பரால் *

உம்பர் கோனும் உலகேழும், வந்தீண்டி வணங்கும் * நல்

செம்பொனாரும் மதிள் சூழ்ந்து அழகார், தென்னரங்கமே.     5.4.5      திருவரங்கம்

கலையுடுத்த அகலல்குல், வன்பேய்மகள் * தாயென

முலை கொடுத்தாளுயிருண்டவன், வாழிட மென்பரால் *

குலை யெடுத்த கதலிப், பொழிலூடும் வந்து உந்தி * முன்

அலையெடுக்கும் புனல் காவிரிசூழ், தென்னரங்கமே.          5.4.6      திருவரங்கம்

கஞ்சன் நெஞ்சும் கடுமல்லரும், சகடமும், காலினால்

துஞ்ச * வென்ற சுடராழியான், வாழிட மென்பரால் *

மஞ்சுசேர் மாளிகை, நீடகில் புகையும் * மாமறையோர்

செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும், தென்னரங்கமே. 7 5.4.7      திருவரங்கம்

ஏனம் மீனாமையோடு, அரியும் சிறுகுறளுமாய் *

தானுமாய, தரணித் தலைவனிட மென்பரால் *

வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் * நல்

தேனும் பாலும் கலந்தன்னவர் சேர், தென்னரங்கமே.         5.4.8      திருவரங்கம்

சேயன் என்றும் மிகப்பெரியன், நுண்நேர்மையினாய * இம்

மாயையை யாரும் அறியா வகையான், இடமென்பரால் *

வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து ஆர்புனல் காவிரி *

ஆயபொன் மாமதிள் சூழ்ந்து அழகார், தென்னரங்கமே.        5.4.9      திருவரங்கம்

அல்லி மாதரமரும் திருமார்வன், அரங்கத்தைக் *

கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன், கலிகன்றி சொல்*

நல்லிசை மாலைகள், நாலிரண்டு மிரண்டும் * உடன்

வல்லவர் தாம் உலகாண்டு, பின் வானுலகாள்வரே.         5.4.10    திருவரங்கம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.