[highlight_content]

Thirumozhi 7-2

பெரிய திருமொழி

ஏழாம் பத்து

இரண்டாம் திருமொழி

புள்ளாய் ஏனமுமாய்ப், புகுந்து என்னை யுள்ளங் கொண்ட

கள்வா ! என்றலும் * என் கண்கள், நீர்கள் சோர்தருமால் *

உள்ளே நின்றுருகி, நெஞ்சம் உன்னை யுள்ளியக்கால் *

நள்ளேன் உன்னை யல்லால், நறையூர் நின்ற நம்பீயோ !  7.2.1      திருநறையூர்

ஓடா வாளரியின், உருவாய் மருவி * என்தன்

மாடே வந்து, அடியேன் மனங்கொள்ள வல்ல மைந்தா ! *

பாடேன் தொண்டர் தம்மைக் கவிதைப் பனுவல் கொண்டு *

நாடேன் உன்னை யல்லால், நறையூர் நின்ற நம்பீயோ !  7.2.2      திருநறையூர்

எம்மானும் எம்மனையும், என்னைப் பெற்றொழிந்ததற்பின் *

அம்மானும் அம்மனையும், அடியேனுக்காகி நின்ற *

நன்மான வொண் சுடரே ! நறையூர் நின்ற நம்பி ! * உன்

மைம்மான வண்ணமல்லால், மகிழ்ந்து ஏத்த மாட்டேனே.  7.2.3      திருநறையூர்

சிறியாய் ஓர் பிள்ளையுமாய் உலகுண்டு, ஓராலிலை மேல்

உறைவாய் ! * என் நெஞ்சினுள்ளே உறைவாய் ! உறைந்தது தான் *

அறியாதிருந் தறியேன் அடியேன், அணி வண்டு கிண்டும் *

நறை வாரும் பொழில் சூழ், நறையூர் நின்ற நம்பீயோ !     7.2.4      திருநறையூர்

நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்திக் காண்பரிதால் *

ஆண்டாய் ! என்றாதரிக்கப் படுவாய்க்கு நானடிமை

பூண்டேன் * என்நெஞ்சினுள்ளே புகுந்தாயைப் போகலொட்டேன் *

நாண் தான் உனக்கொழிந்தேன், நறையூர் நின்ற நம்பீயோ !             7.2.5      திருநறையூர்

எந்தாதை தாதை, அப்பால் எழுவர் பழவடிமை

வந்தார் * எந்நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகலொட்டேன் *

அந்தோ ! என்னாருயிரே ! அரசே ! * அருள் எனக்கு

நந்தாமல் தந்த எந்தாய் ! நறையூர் நின்ற நம்பீயோ !       7.2.6      திருநறையூர்

மன்னஞ்ச ஆயிரந்தோள் மழுவில் துணித்த மைந்தா ! *

என்னெஞ்சத்துள்ளிருந்து, இங்கு இனிப்போய் * பிறரொருவர்

வன்னெஞ்சம் புக்கிருக்க வொட்டேன், வளைத்து வைத்தேன் *

நன்னெஞ்ச வன்னமன்னும், நறையூர் நின்ற நம்பீயோ !       7.2.7      திருநறையூர்

எப்போதும் பொன்மலரிட்டு இமையோர் தொழுது * தங்கள்

கைப்போது கொண்டிறைஞ்சிக் கழல்மேல் வணங்க நின்றாய் *

இப்போதென் நெஞ்சினுள்ளே புகுந்தாயைப் போகலொட்டேன்

நற்போது வண்டு கிண்டும், நறையூர் நின்ற நம்பீயோ !         7.2.8      திருநறையூர்

ஊனேராக்கை தன்னை, உழந்தோம்பி வைத்தமையால் *

யானாய் என்தனக்காய், அடியேன் மனம் புகுந்த

தேனே ! * தீங்கரும்பின் தெளிவே! என் சிந்தை தன்னால் *

நானே எய்தப் பெற்றேன், நறையூர் நின்ற நம்பீயோ!            7.2.9      திருநறையூர்

நன்னீர் வயல் புடைசூழ், நறையூர் நின்ற நம்பியை *

கன்னீர் மால் வரைத்தோள், கலிகன்றி மங்கையர் கோன் *

சொன்னீர் சொல்மாலை, சொல்லுவார்கள் * சூழ்விசும்பில்

நன்னீர்மையால் மகிழ்ந்து, நெடுங்காலம் வாழ்வாரே.       7.2.10    திருநறையூர்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.