[highlight_content]

Thirumozhi 7-6

பெரிய திருமொழி

ஏழாம் பத்து

ஆறாம் திருமொழி

சிங்கமதாய், அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த *

சங்கமிடத்தானைத் தழலாழி வலத்தானைச் *

செங்கமலத் தயனனையார், தென்னழுந்தையில் மன்னி நின்ற *

அங்கமலக் கண்ணனை, அடியேன் கண்டு கொண்டேனே.   7.6.1      திருவழுந்தூர்

கோவானார் மடியக், கொலையார் மழுக் கொண்டருளும் *

மூவா வானவனை, முழுநீர் வண்ணனை * அடியார்க்கு

ஆ ! ஆ ! என்றிரங்கித், தென்னழுந்தையில் மன்னி நின்ற *

தேவாதி தேவனை, யான் கண்டு கொண்டு திளைத்தேனே.           7.6.2      திருவழுந்தூர்

உடையானை, ஒலி நீருலகங்கள் படைத்தானை *

விடையானோட, அன்று விறலாழி விசைத்தானை *

அடையார் தென்னிலங்கை யழித்தானை, அணியழுந்தூர்

உடையானை * அடியேன், அடைந்துய்ந்து போனேனே.     7.6.3      திருவழுந்தூர்

குன்றால் மாரி தடுத்தவனைக், குலவேழம் அன்று

பொன்றாமை * அதனுக்கு அருள் செய்த போரேற்றை *

அன்று ஆவின் நறுநெய் யமர்ந்துண்ண, அணியழுந்தூர்

நின்றானை * அடியேன், கண்டு கொண்டு நிறைந்தேனே.    7.6.4      திருவழுந்தூர்

கஞ்சனைக் காய்ந்தானைக், கண்ணமங்கையுள் நின்றானை *

வஞ்சனப் பேய்முலையூடு, உயிர் வாய் மடுத்துண்டானைச் *

செஞ்சொல் நான்மறையோர் தென்னழுந்தையில் மன்னி நின்ற *

அஞ்சனக் குன்றந்தன்னை அடியேன் கண்டு கொண்டேனே.           7.6.5      திருவழுந்தூர்,

திருக்கண்ணமங்கை

பெரியானை, அமரர் தலைவற்கும் பிரமனுக்கும் *

உரியானை யுகந்தானவனுக்கும், உணர்வதனுக்கு

அரியானை * அழுந்தூர் மறையோர்கள், அடிபணியும்

கரியானை * அடியேன் கண்டு கொண்டு களித்தேனே.          7.6.6      திருவழுந்தூர்

திருவாழ் மார்வன் தன்னைத், திசைமண் நீர் எரிமுதலா *

உருவாய் நின்றவனை, ஒலி சேரும் மாருதத்தை *

அருவாய் நின்றவனைத், தென்னழுந்தையில் மன்னி நின்ற *

கருவார் கற்பகத்தைக், கண்டு கொண்டு களித்தேனே.        7.6.7      திருவழுந்தூர்

நிலையாளாக, என்னை யுகந்தானை * நிலமகள்தன்

முலையாள் வித்தகனை, முதுநான் மறை வீதி தொறும் *

அலையார் கடல் போல் முழங்கு தென்னழுந்தையில் மன்னி நின்ற *

கலையார் சொற்பொருளைக், கண்டு கொண்டு களித்தேனே.        7.6.8      திருவழுந்தூர்

பேரானைக், குடந்தைப் பெருமானை * இலங்கு ஒளி சேர்

வாரார் வனமுலையாள், மலர்மங்கை நாயகனை *

ஆரா வின்னமுதைத், தென்னழுந்தையில் மன்னி நின்ற *

காரார் கருமுகிலைக், கண்டு கொண்டு களித்தேனே.         7.6.9      கரம்பனூர் (உத்தமர் கோயில்),

திருப்பேர்நகர்,

திருவழுந்தூர்,

திருக்குடந்தை (கும்பகோணம்)

திறல் முருகனனையார், தென்னழுந்தையில் மன்னி நின்ற*

அறமுதல்வனவனை, அணியாலியர் கோன் மருவார் *

கறை நெடு வேல் வலவன், கலிகன்றி சொல் ஐயிரண்டும் *

முறை வழுவாமை வல்லார், முழுது ஆள்வர் வானுலகே.        7.6.10    திருவழுந்தூர்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.