[highlight_content]

Thirumozhi 7-8

பெரிய திருமொழி

ஏழாம் பத்து

எட்டாம் திருமொழி

செங்கமலத் திருமகளும் புவியும்

செம்பொன் திருவடியினிணை வருட முனிவரேத்த *

வங்கமலி தடங்கடலுள் அநந்தனென்னும்

வரியரவினணைத் துயின்ற மாயோன் காண்மின் *

எங்குமலி நிறைபுகழ் நால்வேதம், ஐந்து

வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை *

அங்கமலத் தயனனையார் பயிலும் செல்வத்து

அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.         7.8.1      திருவழுந்தூர்,

திருப்பாற்கடல்

முன் இவ்வுலகேழும் இருள் மண்டியுண்ண

முனிவரொடு தானவர்கள் திசைப்ப வந்து *

பன்னு கலை நால்வேதப் பொருளை யெல்லாம்

பரிமுகமாய் அருளிய எம்பரமன் காண்மின் *

செந்நெல் மலிகதிர் கவரி வீசச்

சங்கமவை முரலச் செங்கமல மலரை யேறி *

அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து

அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.         7.8.2      திருவழுந்தூர்

குலத்தலைய மதவேழம் பொய்கை புக்குக்

கோள் முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று *

நிலத்திகழும் மலர்ச் சுடரேய் சோதீ ! என்ன

நெஞ்சிடர் தீர்த்தருளிய என் நிமலன் காண்மின் *

மலைத்திகழ் சந்தகில் கனகமணியும் கொண்டு

வந்துந்தி வயல்கள் தொறும் மடைகள் பாய *

அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து

அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.         7.8.3      திருவழுந்தூர்

சிலம்பு முதல் கலனணிந்து ஓர் செங்கண் குன்றம்

திகழ்ந்ததெனத் திருவுருவம் பன்றியாகி *

இலங்கு புவி மடந்தை தனை இடந்து புல்கி

எயிற்றிடை வைத்தருளிய எம்மீசன் காண்மின் *

புலம்பு சிறை வண்டொலிப்பப் பூகம் தொக்கப்

பொழில்கள் தொறும் குயில் கூவ மயில்களால *

அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகார் செல்வத்து

அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.         7.8.4      திருவழுந்தூர்

சினமேவும் அடலரியி னுருவமாகித்

திறல் மேவும் இரணியன தாகம் கீண்டு *

மனமேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி

மாள, உயிர் வெளவிய எம்மாயோன் காண்மின் *

இனமேவு வரிவளைக் கை யேந்தும், கோவை

யேய்வாய் மரதகம் போல் கிளியினின் சொல் *

அனமேவு நடை மடவார் பயிலும் செல்வத்து

அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.         7.8.5      திருவழுந்தூர்

வானவர் தம் துயர்தீர வந்து தோன்றி

மாணுருவாய் மூவடி மாவலியை வேண்டித் *

தானமர ஏழுலகும் அளந்த வென்றித்

தனிமுதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின் *

தேனமரும் பொழில் தழுவும் எழில் கொள் வீதிச்

செழுமாட மாளிகைகள் கூடந்தோறும் *

ஆன தொல்சீர் மறையாளர் பயிலும் செல்வத்து

அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.         7.8.6      திருவழுந்தூர்

பந்தணைந்த மெல்விரலாள் சீதைக்காகிப்

பகலவன் மீதியங்காத இலங்கை வேந்தன் *

அந்தமில் திண்கரம் சிரங்கள் புரண்டு வீழ

அடுகணையால் எய்துகந்த அம்மான் காண்மின் *

செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்

திசைமுகனை யனையவர்கள் செம்மை மிக்க *

அந்தணர் தம் ஆகுதியின் புகையார் செல்வத்து *

அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.         7.8.7      திருவழுந்தூர்

கும்பமிகு மதவேழம் குலையக் கொம்பு

பறித்து, மழவிடை யடர்த்துக் குரவை கோத்து *

வம்பவிழும் மலர்க் குழலாளாய்ச்சி வைத்த

தயிர் வெண்ணெ யுண்டுகந்த மாயோன் காண்மின் *

செம்பவள மரதகம் நன்முத்தம் காட்டத்

திகழ்பூகம் கதலி பலவளம் மிக்கு எங்கும் *

அம்பொன்மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகார் செல்வத்து

அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.         7.8.8      திருவழுந்தூர்

ஊடேறு கஞ்சனொடு மல்லும் வில்லும்

ஒண்கரியும் உருள் சகடும் உடையச் செற்ற *

நீடேறு பெருவலித் தோளுடைய, வென்றி

நிலவு புகழ் நேமியங்கை நெடியோன் காண்மின் *

சேடேறு பொழில் தழுவும் எழில் கொள் வீதித்

திருவிழவில் மணியணிந்த திண்ணை தோறும் *

ஆடேறு மலர்க் குழலார் பயிலும் செல்வத்து

அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.         7.8.9      திருவழுந்தூர்

பன்றியாய் மீனாகி அரியாய்ப் பாரைப்

படைத்துக் காத்துண்டுமிழ்ந்த பரமன் தன்னை *

அன்று அமரர்க்கதிபதியும் அயனும் சேயும்

அடிபணிய, அணியழுந்தூர் நின்ற கோவைக் *

கன்றி நெடுவேல் வலவன் ஆலிநாடன்

கலிகன்றி யொலிசெய்த இன்பப் பாடல் *

ஒன்றினொடு நான்கும் ஓரைந்தும் வல்லார்

ஒலிகடல் சூழுலகாளும் உம்பர் தாமே.        7.8.10    திருவழுந்தூர்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.