[highlight_content]

Thirumozhi 8-4

பெரிய திருமொழி

எட்டாம் பத்து

நான்காம் திருமொழி

விண்ணவர் தங்கள் பெருமான், திருமார்வன் *

மண்ணவ ரெல்லாம் வணங்கும், மலிபுகழ் சேர் *

கண்ணபுரத்தெம்பெருமான், கதிர்முடி மேல் *

வண்ண நறுந்துழாய், வந்தூதாய் கோல்தும்பீ !           8.4.1      திருக்கண்ணபுரம்

வேத முதல்வன், விளங்கு புரிநூலன் *

பாதம் பரவிப், பலரும் பணிந்தேத்திக் *

காதன்மை செய்யும், கண்ணபுரத்தெம்பெருமான் *

தாது நறுந்துழாய், தாழ்ந்தூதாய் கோல்தும்பீ !  8.4.2      திருக்கண்ணபுரம்

விண்ட மலரெல்லாம் ஊதி, நீ என் பெறுதி ?

அண்ட முதல்வன், அமரர்களெல்லாரும் *

கண்டு வணங்கும், கண்ணபுரத்தெம்பெருமான் *

வண்டு நறுந்துழாய், வந்தூதாய் கோல்தும்பீ !   8.4.3      திருக்கண்ணபுரம்

நீர் மலிகின்றது ஓர் மீனாய், ஓராமையுமாய் *

சீர் மலிகின்றது, ஓர் சிங்கவுருவாகி *

கார்மலி வண்ணன், கண்ணபுரத்தெம்பெருமான் *

தார்மலி தண்துழாய், தாழ்ந்தூதாய் கோல்தும்பீ !          8.4.4      திருக்கண்ணபுரம்

ஏரார் மலரெல்லாம் ஊதி, நீ என் பெறுதி ? *

பாராருலகம் பரவப், பெருங்கடலுள் *

காராமையான, கண்ணபுரத்தெம்பெருமான் *

தாரார் நறுந்துழாய், தாழ்ந்தூதாய் கோல்தும்பீ !               8.4.5      திருக்கண்ணபுரம்

மார்வில் திருவன், வலனேந்து சக்கரத்தன் *

பாரைப் பிளந்த பரமன், பரஞ்சோதி *

காரில் திகழ் காயா வண்ணன், கதிர் முடிமேல் *

தாரில் நறுந்துழாய், தாழ்ந்தூதாய் கோல்தும்பீ !            8.4.6      திருக்கண்ணபுரம்

வாமனன் கற்கி, மதுசூதன் மாதவன் *

தார் மன்னு தாசரதியாய, தடமார்வன் *

காமன் தன் தாதை, கண்ணபுரத்தெம்பெருமான் *

தாம நறுந்துழாய், தாழ்ந்தூதாய் கோல்தும்பீ !   8.4.7      திருக்கண்ணபுரம்

நீல மலர்கள், நெடுநீர் வயல் மருங்கில் *

சால மலரெல்லாம், ஊதாதே * வாளரக்கர்

காலன், கண்ணபுரத்தெம்பெருமான் கதிர் முடிமேல் *

கோல நறுந்துழாய், கொண்டூதாய் கோல்தும்பீ !          8.4.8      திருக்கண்ணபுரம்

நந்தன் மதலை, நிலமங்கை நல் துணைவன் *

அந்த முதல்வன், அமரர்கள் தம்பெருமான் *

கந்தம் கமழ், காயா வண்ணன் கதிர் முடிமேல் *

கொந்து நறுந்துழாய், கொண்டூதாய் கோல்தும்பீ !        8.4.9      திருக்கண்ணபுரம்

வண்டமரும் சோலை, வயலாலி நல்நாடன் *

கண்டசீர் வென்றிக், கலியனொலி மாலை *

கொண்டல் நிறவண்ணன், கண்ணபுரத்தானைத் *

தொண்டரோம் பாட, நினைந்தூதாய் கோல்தும்பீ !    8.4.10    திருக்கண்ணபுரம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.