[highlight_content]

Thirumozhi 8-5

பெரிய திருமொழி

எட்டாம் பத்து

ஐந்தாம் திருமொழி

தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய

தோன்றல் பின் * தமியேன் தன்

சிந்தை போயிற்றுத் திருவரு ளவனிடைப் பெறுமள விருந்தேனை *

அந்தி காவலன் அமுதுறு பசுங் கதிரவை சுட * அதனோடும்

மந்த மாருதம் வனமுலை தடவந்து வலி செய்வதொழியாதே.  8.5.1                திருக்கண்ணபுரம்

மாரிமாக்கடல் வளைவணற்கிளையவன் வரைபுரை திருமார்பில்*

தாரினாசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்தது ஓர்துணை காணேன் *

ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பியங்கும் *

தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன செய்வதொன்றறியேனே.               8.5.2                திருக்கண்ணபுரம்

ஆயன் மாயமே யன்றி மற்றென் கையில்

வளைகளும் இறை நில்லா *

பேயினாருயிருண்டிடும் பிள்ளை நம் பெண்ணுயிர்க்கு இரங்குமோ ? *

தூய மாமதிக் கதிர் சுடத் துணையில்லை இணைமுலை வேகின்றதால் *

ஆயன் வேயினுக் கழிகின்றது உள்ளமும்

அஞ்சே லென்பா ரில்லையே.      8.5.3      திருக்கண்ணபுரம்

கயங்கொள் புண்தலைக் களிறுந்து வெந்திறல்

கழல் மன்னர் பெரும் போரில்

மயங்க * வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும்

வந்திலன் * மறிகடல் நீர்

தயங்கு வெண்திரைத் திவலை நுண்பனி யென்னும்

தழல் முகந்து இளமுலை மேல் *

இயங்கு மாருதம் விலங்கில்

என்னாவியை எனக்கெனப் பெறலாமே.  8.5.4      திருக்கண்ணபுரம்

ஏழு மாமரம் துளை படச் சிலை வளைத்து

இலங்கையை மலங்குவித்த

ஆழியான் * நமக்கருளிய அருளொடும்

பகலெல்லை கழிகின்றதால் *

தோழி ! நாம் இதற்கென் செய்தும் ? துணையில்லை

சுடர்படு முதுநீரில் *

ஆழ ஆழ்கின்ற ஆவியை

அடுவதோர் அந்தி வந்தடைகின்றதே.      8.5.5      திருக்கண்ணபுரம்

முரியும் வெண்திரை முதுகயம் தீப்பட

முழங்கழ லெரியம்பின் *

வரிகொள் வெஞ்சிலை வளைவித்த

மைந்தனும் வந்திலன், என்செய்கேன் ? *

எரியும் வெங்கதிர் துயின்றது

பாவியேன் இணை நெடுங்கண் துயிலா *

கரிய நாழிகை ஊழியில் பெரியன

கழியுமாறு அறியேனே.      8.5.6      திருக்கண்ணபுரம்

கலங்க மாக்கடல் கடைந்தடைத்து

இலங்கையர் கோனது வரையாகம்

மலங்க * வெஞ்சமத்து அடுசரம் துரந்த

எம்மடிகளும் வாரானால் *

இலங்கு வெங்கதி ரிளமதி யதனொடும்

விடைமணி யடும் * ஆயன்

விலங்கல் வேயினது ஓசையுமாய்

இனி விளைவ தொன்றறியேனே.                 8.5.7      திருக்கண்ணபுரம்

முழுதிவ் வையகம் முறை கெட மறைதலும்

முனிவனும் முனிவெய்தி *

மழுவினால் மன்னராருயிர் வவ்விய

மைந்தனும் வாரானால் *

ஒழுகு நுண்பனிக் கொடுங்கிய பேடையை

அடங்க அஞ்சிறை கோலி *

தழுவு நள்ளிருள் தனிமையில் கடியது

ஓர் கொடுவினை யறியேனே.          8.5.8      திருக்கண்ணபுரம்

கனஞ்செய் மாமதிள் கணபுரத்தவனொடும்

கனவினில் அவன் தந்த *

மனஞ் செயின்பம் வந்து உள்புக வெள்கி

என் வளை நெக இருந்தேனைச் *

சினஞ்செய் மால்விடைச் சிறுமணி யோசை

என் சிந்தையைச் சிந்துவிக்கும் *

அனந்தல் அன்றிலினரி குரல்

பாவியே னாவியை அடுகின்றதே.                8.5.9      திருக்கண்ணபுரம்

வார் கொள் மென்முலை மடந்தையர்

தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து *

ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை

அறிந்து, முன் உரை செய்த *

கார்கொள் பைம்பொழில் மங்கையர் காவலன்

கலிகன்றி யொலி வல்லார் *

ஏர்கொள் வைகுந்த மாநகர் புக்கு

இமையவரோடும் கூடுவரே.       8.5.10    திருக்கண்ணபுரம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.