[highlight_content]

Thirumozhi 8-9

பெரிய திருமொழி

எட்டாம் பத்து

ஒன்பதாம் திருமொழி

கைம்மான மதயானை இடர் தீர்த்த, கருமுகிலை *

மைம்மான மணியை, அணிகொள் மரதகத்தை *

எம்மானை எம்பிரானை ஈசனை, என் மனத்துள்

அம்மானை * அடியேன் அடைந்துய்ந்து போனேனே.       8.9.1      திருவரங்கம்,

திருக்கண்ணபுரம்

தருமான மழைமுகிலைப், பிரியாது தன்னடைந்தார் *

வருமானம் தவிர்க்கும் மணியை, அணியுருவில்

திருமாலை * அம்மானை அமுதத்தைக், கடல் கிடந்த

பெருமானை * அடியேன் அடைந்துய்ந்து பிழைத்தேனே.     8.9.2      திருவரங்கம்,

திருக்கண்ணபுரம்,

திருப்பாற்கடல்

விடையே ழன்றடர்த்து, வெகுண்டு * விலங்கலுறப்

படையால் ஆழிதட்டப், பரமன் பரஞ்சோதி *

மடையார் நீலம் மல்கும் வயல்சூழ், கண்ணபுர மொன்று

உடையானுக்கு அடியேன் * ஒருவர்க்கு உரியேனோ ?            8.9.3      திருவரங்கம்,

திருக்கண்ணபுரம்

மிக்கானை, மறையாய் விரிந்த விளக்கை * என்னுள்

புக்கானைப், புகழ்சேர் பொலிகின்ற பொன் மலையைத் *

தக்கானைக், கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த *

அக்காரக் கனியை, அடைந்துய்ந்து போனேனே.       8.9.4      திருவரங்கம்,

திருக்கண்ணபுரம்,

திருக்கடிகை (சோளசிங்கபுரம்)

வந்தாய் என் மனத்தே, வந்து நீ புகுந்த பின்னை *

எந்தாய் ! போயறியாய், இதுவே அமையாதோ ? *

கொந்தார் பைம்பொழில் சூழ், குடந்தைக் கிடந்துகந்த

மைந்தா ! * உன்னை என்றும், மறவாமை பெற்றேனே.         8.9.5      திருவரங்கம்,

திருக்குடந்தை (கும்பகோணம்),

திருக்கண்ணபுரம்

எஞ்சா வெந்நரகத்து, அழுந்தி நடுங்குகின்றேற்கு *

அஞ்சேலென் றடியேனை, ஆட்கொள்ள வல்லானை *

நெஞ்சே ! நீ நினையாது, இறைப் பொழுதும் இருத்தி கண்டாய் *

மஞ்சார் மாளிகை சூழ், வயலாலி மைந்தனையே.   8.9.6      திருவரங்கம்,

திருக்கண்ணபுரம்,

திருவாலி

பெற்றார் பெற்றொழிந்தார், பின்னும் நின்று அடியேனுக்கு

உற்றானாய் * வளர்த்து, என்னுயிராகி நின்றானை *

முற்றா மாமதி கோள் விடுத்தானை, எம்மானை *

எத்தால் யான் மறக்கேன்? இதுசொல் என் ஏழை நெஞ்சே !             8.9.7      திருவரங்கம்,

திருக்கண்ணபுரம்

கற்றார் பற்றறுக்கும், பிறவிப் பெருங்கடலே *

பற்றா வந்து அடியேன் பிறந்தேன், பிறந்த பின்னை *

வற்றாநீர் வயல்சூழ், வயலாலி யம்மானைப்

பெற்றேன் * பெற்றதுவும், பிறவாமை பெற்றேனே.    8.9.8      திருவரங்கம்,

திருக்கண்ணபுரம்,

திருவாலி

கண்ணார் கண்ணபுரம், கடிகை கடிகமழும் *

தண்ணார் தாமரைசூழ், தலைச்சங்க மேல் திசையுள் *

விண்ணோர் நாண்மதியை, விரிகின்ற வெஞ்சுடரைக் *

கண்ணாரக் கண்டு கொண்டு, களிக்கின்றது இங்கு என்று கொலோ?         8.9.9                திருவரங்கம்,

தலைச்சங்கநாண் மதியம்,

திருக்கண்ணபுரம்,

திருக்கடிகை (சோளசிங்கபுரம்)

செருநீர வேல் வலவன், கலிகன்றி மங்கையர் கோன் *

கருநீர் முகில் வண்ணன், கண்ணபுரத்தானை *

இருநீரின் தமிழ், இன்னிசை மாலைகள் கொண்டு தொண்டீர் *

வருநீர் வையம் உய்ய, இவை பாடியாடுமினே.       8.9.10    திருவரங்கம்,

திருக்கண்ணபுரம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.