[highlight_content]

Thirumozhi 2-4

பெரிய திருமொழி

இரண்டாம் பத்து

நான்காம் திருமொழி

அன்றாயர் குலக் கொடியோடு

அணிமா மலர் மங்கையொடு அன்பளவி * அவுணர்க்கு

என்றானும் இரக்க மிலாதவனுக்கு

உறையுமிட மாவது * இரும்பொழில் சூழ்

நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை

தடம் திகழ் கோவல் நகர் *

நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம்

மாமலையாவது நீர்மலையே.           2.4.1      திருக்குடந்தை (கும்பகோணம்),

திருவாலி,

திருநறையூர்,

திருக்கோவலூர்,

திருநீர்மலை

காண்டாவன மென்பதோர் காடு

அமரர்க் கரையன்னது கண்டவன் நிற்க * முனே

மூண்டா ரழலுண்ண முனிந்ததுவும், அதுவன்றியும்

முன்னுலகம் பொறை தீர்த்து

ஆண்டான் * அவுணனவன் மார்பகலம்

உகிரால் வகிராக முனிந்து அரியாய்

நீண்டான் * குறளாகி நிமிர்ந்தவனுக்கு இடம்

மாமலையாவது நீர்மலையே.            2.4.2      திருநீர்மலை

அலம் மன்னும் அடல் சுரிசங்க மெடுத்து

அடலாழியினால் * அணியாருருவின்

புலமன்னு வடம் புனை கொங்கையினாள்

பொறை தீர முனாள் * அடுவாளமரில்

பலமன்னர் படச் சுடராழியினைப்

பகலோன் மறையப் பணி கொண்டு * அணிசேர்

நிலமன்னனுமாய் உலகாண்டவனுக்கு இடம்

மாமலையாவது நீர்மலையே.            2.4.3      திருநீர்மலை

தாங்காததோர் ஆளரியாய் அவுணன் தனை

வீட முனிந்து * அவனாலமரும்

பூங்கோதையர் பொங்கெரி மூழ்க விளைத்து

அதுவன்றியும் * வென்றி கொள் வாளமரில்

பாங்காக முன் ஐவரோடு அன்பளவிப்

பதிற்றைந்திரட்டிப் படை வேந்தர் பட *

நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்கு இடம்

மாமலையாவது நீர்மலையே.            2.4.4      திருநீர்மலை

மாலும் கடலார மலைக் குவடிட்டு, அணைகட்டி

வரம்புருவ * மதிசேர்

கோல மதிளாய இலங்கை கெடப்,

படை தொட்டு ஒருகால் அமரிலதிரக் *

காலமிது வென்று அயன் வாளியினால்

கதிர் நீள் முடிபத்தும் அறுத்து அமரும் *

நீலமுகில் வண்ணன் எமக்கிறைவற்கு இடம்

மாமலையாவது நீர்மலையே.            2.4.5      திருநீர்மலை

பாராருலகும் பனிமால் வரையும்

கடலும் சுடரும் இவை யுண்டும் * எனக்கு

ஆராதென நின்றவன் எம்பெருமான்

அலை நீருலகுக்கு அரசாகிய * அப்

பேரானை முனிந்த முனிக்கரையன் *

பிறரில்லை நுனக்கெனும் எல்லையினான் *

நீரார் பேரான் நெடுமாலவனுக்கு இடம்

மாமலையாவது நீர்மலையே.            2.4.6      திருநீர்மலை

புகராருருவாகி முனிந்தவனைப்

புகழ் வீட முனிந்து உயிருண்டு * அசுரன்

நகராயின பாழ்பட நாமம் எறிந்து, அதுவன்றியும்

வென்றி கொள் வாளவுணன் *

பகராதவ னாயிர நாமம் அடிப்

பணியாதவனைப், பணியால் அமரில் *

நிகராய வன் நெஞ்சிடந்தா னவனுக்கு இடம்

மாமலையாவது நீர்மலையே.            2.4.7      திருநீர்மலை

பிச்சச் சிறுபீலி பிடித்து உலகில்

பிணந்தின் மடவாரவர் போல் * அங்ஙனே

அச்சமிலர் நாணிலரா தன்மையால்

அவர்செய்கை வெறுத்து * அணிமாமலர் தூய்

நச்சி நமனார் அடையாமை நமக்கருள் செய்யென

உள்குழைந்து ஆர்வமொடு *

நிச்சம் நினைவார்க்கு அருள் செய்யுமவற்கு இடம்

மாமலையாவது நீர்மலையே.           2.4.8      திருநீர்மலை

பேசுமளவன்று இது வம்மின் நமர்!

பிறர் கேட்பதன் முன் * பணிவார் வினைகள்

நாசமது செய்திடுமா தன்மையால்

அதுவே நமது உய்விடம் * நாள்மலர் மேல்

வாசமணி வண்டறை பைம்புறவில்

மனமைந்தொடு நைந்துழல்வார் * மதியில்

நீசரவர் சென்றடையாதவனுக்கு இடம்

மாமலையாவது நீர்மலையே.        2.4.9      திருநீர்மலை

நெடுமாலவன் மேவிய நீர்மலைமேல்

நிலவும் புகழ் மங்கையர் கோன் * அமரில்

கடமா களியானை வல்லான்

கலியன் ஒலிசெய் தமிழ்மாலை வல்லார்க்கு * உடனே

விடுமால் வினை, வேண்டிடில் மேலுலகும்

எளிதாயிடும் * அன்றி இலங்கொலி சேர்

கொடுமா கடல் வையக மாண்டு, மதிக்

குடை மன்னவராய் அடி கூடுவரே.          2.4.10    திருநீர்மலை

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.