[highlight_content]

Thirumozhi 2-9

பெரிய திருமொழி

இரண்டாம் பத்து

ஒன்பதாம் திருமொழி

சொல்லுவன் சொற்பொருள் தானவையாய்ச்

சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமுமாய் *

நல்லரண் நான்முகன் நாரணனுக்கு இடம், தான்

தடம் சூழ்ந்து அழகாய கச்சி *

பல்லவன் வில்லவனென்று உலகில்

பலராய்ப் பலவேந்தர் வணங்கு கழல்

பல்லவன் * மல்லையர் கோன் பணிந்த

பரமேச்சுர விண்ணகரமதுவே.        2.9.1      பரமேச்சுர விண்ணகரம்

கார்மன்னு நீள் விசும்பும் கடலும்

சுடரும் நிலனும் மலையும் * தன் உந்தித்

தார்மன்னு தாமரைக் கண்ணனிடம்

தடமாமதிள் சூழ்ந்து அழகாய கச்சி *

தேர்மன்னு தென்னவனை முனையில் செருவில்

திறல் வாட்டிய திண்சிலையோன் *

பார்மன்னு பல்லவர் கோன் பணிந்த

பரமேச்சுரவிண்ணகரமதுவே.       2.9.2      பரமேச்சுர விண்ணகரம்

உரந்தரு மெல்லணைப் பள்ளி கொண்டான்

ஒருகால் முன்னம் மாவுருவாய்க் * கடலுள்

வரந்தரு மாமணி வண்ணனிடம்

மணிமாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி *

நிரந்தவர் மண்ணையில் புண்ணுகர் வேல்

நெடுவாயிலுகச் செருவில் முனநாள் *

பரந்தவன் பல்லவர் கோன் பணிந்த

பரமேச்சுரவிண்ணகரமதுவே.           2.9.3      பரமேச்சுர விண்ணகரம்

அண்டமும் எண்திசையும் நிலனும்

அலைநீரொடு வான் எரி கால் முதலா

உண்டவன் * எந்தை பிரானதிடம்

ஒளிமாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி *

விண்டவர் இண்டைக் குழாமுடனே

விரைந்தார் இரியச் செருவில் முனிந்து *

பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த

பரமேச்சுர விண்ணகரமதுவே.       2.9.4      பரமேச்சுர விண்ணகரம்

தூம்புடைத் திண் கை வன்தாள் களிற்றின்

துயர் தீர்த்து * அரவம் வெருவ முனநாள்

பூம்புனல் பொய்கை புக்கானவனுக்கு இடம், தான்

தடம் சூழ்ந்து அழகாய கச்சி *

தேம்பொழில் குன்றெயில் தென்னவனைத்

திசைப்பச் செருமேல் வியந்து அன்று சென்ற *

பாம்புடைப் பல்லவர் கோன் பணிந்த

பரமேச்சுரவிண்ணகரமதுவே.         2.9.5      பரமேச்சுர விண்ணகரம்

திண்படைக் கோளரியின் உருவாய்த்

திறலோனகலம் செருவில் முனநாள் *

புண்படப் போழ்ந்த பிரானதிடம்

பொருமாடங்கள் சூழ்ந்தழகாய கச்சி *

வெண்குடை நீழல் செங்கோல் நடப்ப

விடை வெல்கொடி வேற்படை முன் உயர்த்த *

பண்புடைப் பல்லவர் கோன் பணிந்த

பரமேச்சுரவிண்ணகரமதுவே.           2.9.6      பரமேச்சுர விண்ணகரம்

இலகிய நீள்முடி மாவலிதன் பெருவேள்வியில்

மாணுருவாய் முனநாள் *

சலமொடு மாநிலங் கொண்டவனுக்கு இடம், தான்

தடம் சூழ்ந்து அழகாய கச்சி *

உலகுடை மன்னவன் தென்னவனைக்

கன்னிமாமதிள் சூழ் கருவூர் வெருவப் *

பலபடை சாய வென்றான் பணிந்த

பரமேச்சுரவிண்ணகரமதுவே.           2.9.7      பரமேச்சுர விண்ணகரம்

குடைத்திறல் மன்னவனாய், ஒருகால்

குரங்கைப் படையா மலையால் கடலை

அடைத்தவன் * எந்தை பிரானதிடம்

மணிமாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி *

விடைத்திறல் வில்லவன் நென்மெலியில்

வெருவச் செருவேல் வலங்கைப் பிடித்த *

படைத்திறல் பல்லவர் கோன் பணிந்த

பரமேச்சுரவிண்ணகரமதுவே.            2.9.8      பரமேச்சுர விண்ணகரம்

பிறையுடை வாள் நுதல் பின்னை திறத்து, முன்னே

ஒருகால் செருவில் உருமின் *

மறையுடை மால்விடை ஏழடர்த்தாற்கு இடம், தான்

தடம் சூழ்ந்து அழகாய கச்சி *

கறையுடை வாள் மறமன்னர் கெடக்

கடல் போல் முழங்கும் குரல் கடுவாய் *

பறையுடைப் பல்லவர் கோன் பணிந்த

பரமேச்சுர விண்ணகரமதுவே.       2.9.9      பரமேச்சுர விண்ணகரம்

பார் மன்னு தொல்புகழ்ப் பல்லவர் கோன் பணிந்த

பரமேச்சுர விண்ணகர் மேல் *

கார்மன்னு நீள்வயல் மங்கையர்தம் தலைவன்

கலிகன்றி குன்றாது உரைத்த *

சீர்மன்னு செந்தமிழ் மாலை வல்லார்

திருமாமகள் தன்னருளால் * உலகில்

தேர்மன்னராய் ஒலிமா கடல்சூழ்

செழுநீர் உலகாண்டு திகழ்வர்களே.       2.9.10    பரமேச்சுர விண்ணகரம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.