[highlight_content]

Thirumozhi 3-2

பெரிய திருமொழி

மூன்றாம் பத்து

இரண்டாம் திருமொழி

ஊன்வாட உண்ணாது உயிர் காவலிட்டு

உடலில் பிரியாப் புலனைந்தும் நொந்து *

தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா

தமதா இமையோ ருலகாள கிற்பீர் ! *

கானாட மஞ்ஞைக் கணமாட மாடே

கயலாடு கானீர்ப் பழனம் புடைபோய்த் *

தேனாட மாடக் கொடியாடு, தில்லைத்

திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.  3.2.1      சித்திரகூடம்

காயோடு நீடு கனியுண்டு, வீசு

கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் * ஐந்து

தீயொடு நின்று தவம் செய்ய வேண்டா

திருமார்பனைச் சிந்தையுள் வைத்துமென்பீர் ! *

வாயோது வேதம் மல்கின்ற தொல் சீர்

மறையாளர், நாளும் முறையால் வளர்த்த *

தீயோங்க வோங்கப் புகழோங்கு, தில்லைத்

திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.  3.2.2      சித்திரகூடம்

வெம்பும் சினத்துப் புனக் கேழலொன்றாய்

விரிநீர் முதுவெள்ளம் உள்புக்கழுந்த *

வம்புண் பொழில் சூழ் உலகன்றெடுத்தான்

அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர் ! *

பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து

படை மன்னவன் பல்லவர் கோன் பணிந்த *

செம்பொன் மணிமாடங்கள் சூழ்ந்த, தில்லைத்

திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.  3.2.3      சித்திரகூடம்

அருமாநிலம் அன்று அளப்பான் குறளாய்

அவுணன் பெருவேள்வியில் சென்றிரந்த *

பெருமான் திருநாமம் பிதற்றி, நுந்தம்

பிறவித்துயர் நீங்குது மென்ன கிற்பீர் ! *

கருமாகடலுள் கிடந்தான் உவந்து

கவைநா அரவினணைப் பள்ளியின் மேல் *

திருமால் திருமங்கையோடாடு, தில்லைத்

திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.  3.2.4      சித்திரகூடம்

கோமங்க வங்கக்கடல் வையம் உய்யக்

குலமன்னர் அங்கம் மழுவில் துணியத் *

தாம் அங்கு அமருள் படைதொட்ட, வென்றித்

தவமா முனியைத் தமக்காக்க கிற்பீர் ! *

பூமங்கை தங்கிப் புலமங்கை மன்னிப்

புகழ்மங்கை எங்கும் திகழப் * புகழ்சேர்

சேமம் கொள் பைம்பூம்பொழில் சூழ்ந்த, தில்லைத்

திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.  3.2.5      சித்திரகூடம்

நெய்வாயழலம்பு துரந்து, முந்நீர்

துணியப் பணி கொண்டு அணியார்ந்து இலங்கு *

மையார் மணிவண்ணனை எண்ணி, நுந்தம்

மனத்தே இருத்தும் படி வாழ வல்லீர் ! *

அவ்வாய் இளமங்கையர் பேசவும் தான்

அருமாமறை அந்தணர் சிந்தை புகச் *

செவ்வாய்க் கிளி நான்மறை பாடு, தில்லைத்

திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.   3.2.6      சித்திரகூடம்

மெளவல் குழலாய்ச்சி மென்தோள் நயந்து

மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த *

தெய்வத் திருமாமலர் மங்கை தங்கு

திருமார்பனைச் சிந்தையுள் வைத்துமென்பீர் ! *

கெளவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில்

கமழ் சந்தும் உந்தி நிவா வலங்கொள் *

தெய்வப் புனல் சூழ்ந்தழகாய, தில்லைத்

திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.   3.2.7      சித்திரகூடம்

மாவாயினங்கம் மதியாது கீறி

மழை மாமுது குன்றெடுத்து * ஆயர் தங்கள்

கோவாய் நிரை மேய்த்து உலகுண்ட மாயன்

குரைமாகழல் கூடும் குறிப்புடையீர் ! *

மூவாயிரம் நான்மறையாளர், நாளும்

முறையால் வணங்க அணங்காய சோதி *

தேவாதி தேவன் திகழ்கின்ற, தில்லைத்

திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.   3.2.8      சித்திரகூடம்

செருநீல வேல்கண் மடவார் திறத்துச்

சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும் *

அருநீல பாவம் அகலப் புகழ் சேர்

அமரர்க்கும் எய்தாத அண்டத்திருப்பீர் ! *

பெருநீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து

எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகளத் *

திருநீலம் நின்று திகழ்கின்ற, தில்லைத்

திருச்சித்ரகூடம் சென்றுசேர்மின்களே.      3.2.9      சித்திரகூடம்

சீரார் பொழில் சூழ்ந்து அழகாய, தில்லைத்

திருச்சித்ரகூடத்து உறை செங்கண்மாலுக்கு *

ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப

அலை நீருலகுக்கு அருளே புரியும் *

காரார் புயற்கைக் கலிகன்றி குன்றா வொலிமாலை

ஓரொன்பதோடு ஒன்றும் வல்லார் *

பாராருலக மளந்தான் அடிக்கீழ்ப்

பலகாலம் நிற்கும்படி வாழ்வர் தாமே.   3.2.10    சித்திரகூடம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.