[highlight_content]

Thirumozhi 3-3

பெரிய திருமொழி

மூன்றாம் பத்து

மூன்றாம் திருமொழி

வாட மருதிடை போகி மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு *

ஆடல் நன்மா உடைத்து ஆயரா நிரைக்கு அன்று இடர் தீர்ப்பான் *

கூடிய மாமழை காத்த கூத்தனென வருகின்றான் *

சேடுயர் பூம்பொழில் தில்லைச் சித்திரகூடத்துள்ளானே.     3.3.1      சித்திரகூடம்

பேய்மகள் கொங்கை நஞ்சுண்ட பிள்ளை பரிசு இதுவென்றால் *

மாநில மாமகள் மாதர் கேள்வன் இவனென்றும் * வண்டுண்

பூமகள் நாயகனென்றும் புலங்கெழு கோவியர் பாடித் *

தேமலர் தூவ வருவான் சித்திரகூடத்துள்ளானே.     3.3.2      சித்திரகூடம்

பண்டுஇவன் வெண்ணெயுண்டானென்று ஆய்ச்சியர்கூடி இழிப்ப*

எண்திசையோரும் வணங்க இணை மருதூடு நடந்திட்டு *

அண்டரும் வானத்தவரும் ஆயிர நாமங்களோடு *

திண்திறல் பாட வருவான் சித்திரகூடத்துள்ளானே.  3.3.3      சித்திரகூடம்

வளைக்கை நெடுங்கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்பத்*

தளைத்தவிழ் தாமரைப் பொய்கைத் தண்தடம்புக்கு அண்டர் காண *

முளைத்த எயிற்றழல் நாகத்து உச்சியில் நின்று அது வாடத் *

திளைத்தமர் செய்து வருவான் சித்திரகூடத்துள்ளானே.      3.3.4      சித்திரகூடம்

பருவக் கருமுகிலொத்து முத்துடை மாகடலொத்து *

அருவித் திரள் திகழ்கின்ற ஆயிரம் பொன்மலை யொத்து *

உருவக் கருங்குழல் ஆய்ச்சி திறத்து இனமால் விடை செற்றுத் *

தெருவில் திளைத்து வருவான் சித்திரகூடத்துள்ளானே.    3.3.5      சித்திரகூடம்

எய்யச் சிதைந்தது இலங்கை, மலங்க வருமழை காப்பான் *

உய்யப் பருவரை தாங்கி ஆநிரை காத்தானென்று ஏத்தி *

வையத் தேவரும் வணங்க அணங்கெழு மாமலை போலே *

தெய்வப் புள்ளேறி வருவான் சித்திரகூடத்துள்ளானே.        3.3.6      சித்திரகூடம்

ஆவர் இவை செய்தறிவார் ? அஞ்சன மாமலை போலே *

மேவு சினத்து அடல் வேழம் வீழ முனிந்து * அழகாய

காவி மலர் நெடுங் கண்ணார் கைதொழ வீதி வருவான் *

தேவர் வணங்கு, தண் தில்லைச் சித்திரகூடத்துள்ளானே.  3.3.7      சித்திரகூடம்

பொங்கி அமரில் ஒருகால் பொன் பெயரோனை வெருவ *

அங்கு அவனாகம் அளந்திட்டு ஆயிரம் தோள் எழுந்தாட *

பைங்கண் இரண்டு எரிகான்ற நீண்ட எயிற்றொடு பேழ்வாய் *

சிங்க வுருவின் வருவான் சித்திரகூடத்துள்ளானே.   3.3.8      சித்திரகூடம்

கருமுகில் போல்வதோர் மேனி கையன ஆழியும் சங்கும் *

பெருவிறல் வானவர் சூழ ஏழுலகும் தொழுதேத்த *

ஒரு மகள் ஆயர் மடந்தை ஒருத்தி நிலமகள் * மற்றைத்

திருமகளோடும் வருவான் சித்திரகூடத்துள்ளானே.  3.3.9      சித்திரகூடம்

தேனமர் பூம்பொழில், தில்லைச் சித்திரகூடம் அமர்ந்த *

வானவர் தங்கள் பிரானை மங்கையர் கோன் மருவார் *

ஊனமர் வேல் கலிகன்றி ஒண்தமிழ் ஒன்பதோடொன்றும் *

தானிவை கற்று வல்லார் மேல் சாரா தீவினை தானே.   3.3.10    சித்திரகூடம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.