[highlight_content]

Thirumozhi 1-5

பெரிய திருமொழி

முதல் பத்து

ஐந்தாம் திருமொழி

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்ச் *

சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து*

மலைகொண்டு அலைநீர் அணைகட்டி மதிள் நீரிலங்கை வாளரக்கர்

தலைவன்*தலைபத்து அறுத்துகந்தான் சாளக்கிராமம் அடைநெஞ்சே!     1.5.1                சாளக்கிராமம்

கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலிமாந் தேரும் காலாளும் *

உடன் சூழ்ந்தெழுந்த கடியிலங்கை பொடியா வடிவாய்ச்சரம் துரந்தான்*

இடம்சூழ்ந்து எங்கும் இருவிசும்பில் இமையோர் வணங்கமணங்கமழும்

தடம் சூழ்ந்து * எங்கும் அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே !               1.5.2                சாளக்கிராமம்

உலவு திரையும் குலவரையும் ஊழி முதலா எண்திக்கும் *

நிலவும் சுடரும் இருளுமாய், நின்றான் வென்றி விறலாழி

வலவன் * வானோர் தம் பெருமான் மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும்

சலவன் * சலம் சூழ்ந்தழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே !      1.5.3      சாளக்கிராமம்

ஊரான் குடந்தை உத்தமன் ஒருகால் இருகால் சிலைவளையத் *

தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான் * வற்றா வருபுனல் சூழ்

பேரான் * பேராயிரமுடையான் பிறங்கு சிறைவண்டு அறைகின்ற

தாரான் * தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே !      1.5.4      திருப்பேர்நகர்,

திருக்குடந்தை (கும்பகோணம்),

ஊரகம்,

சாளக்கிராமம்

அடுத்தார்த்தெழுந்தாள்பிலவாய்விட்டலற அவள்மூக்குஅயில்வாளால்

விடுத்தான்* விளங்கு சுடராழி விண்ணோர் பெருமான் * நண்ணார்முன்

கடுத்தார்த்தெழுந்த பெருமழையைக் கல்லொன்றேந்தி இனநிரைக்காத்

தடுத்தான் * தடம் சூழ்ந்தழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே !                1.5.5                சாளக்கிராமம்

தாயாய் வந்த பேயுயிரும் தயிரும் இழுதும் உடனுண்ட

வாயான் * தூய அரியுருவில் குறளாய்ச் சென்று மாவலியை

ஏயானிரப்ப * மூவடி மண் இன்றே தாவென்று, உலகேழும்

தாயான் * காயாமலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே !               1.5.6                சாளக்கிராமம்

ஏனோர் அஞ்ச வெஞ்சமத்துள் அரியாய்ப் பரிய இரணியனை *

ஊனாரகலம் பிளவெடுத்த ஒருவன் தானே * இருசுடராய்

வானாய்த் தீயாய் மாருதமாய், மலையாய் அலைநீர் உலகனைத்தும்

தானாய்த் * தானுமானான் தன் சாளக்கிராமம் அடை நெஞ்சே ! 1.5.7      சாளக்கிராமம்

வெந்தாரென்பும் சுடுநீறும் மெய்யில் பூசிக் கையகத்து, * ஓர்

சந்தார்தலைகொண்டு, உலகேழும் திரியும் பெரியோன்தான்சென்று*என்

எந்தாய் ! சாபம் தீரென்ன இலங்கு அமுது நீர் திருமார்வில்

தந்தான் * சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே !          1.5.8                சாளக்கிராமம்

தொண்டாமினமும் இமையோரும் துணைநூல்மார்வினந்தணரும்*

அண்டா ! எமக்கே அருளாயென்று அணையும் கோயிலருகெல்லாம் *

வண்டார் பொழிலின் பழனத்து வயலினயலே கயல் பாயத் *

தண்தாமரைகள் முகமலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே ! 1.5.9      சாளக்கிராமம்

தாரா ஆரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்து அடிகளைக் *

காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை *

ஆரார் உலகத் தறிவுடையார் அமரர் நல் நாட்டரசாளப் *

பேராயிரமும் ஓதுமின்கள் அன்றி இவையே பிதற்றுமினே.               1.5.10    சாளக்கிராமம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.