[highlight_content]

Thirumozhi 1-6

பெரிய திருமொழி

முதல் பத்து

ஆறாம் திருமொழி

வாள்நிலா முறுவல் சிறுநுதல் பெருந்தோள்

மாதரார் வனமுலைப் பயனே

பேணினேன் * அதனைப் பிழையெனக் கருதிப்

பேதையேன் பிறவி நோயறுப்பான் *

ஏணிலேன் இருந்தேன் எண்ணினேன், எண்ணி

இளையவர் கலவியின் திறத்தை

நாணினேன் * வந்து உன் திருவடி அடைந்தேன்

நைமிசாரணியத்துள் எந்தாய் ! 1.6.1  நைமிசாரணியம்

சிலம்படி யுருவிற் கருநெடுங் கண்ணார்

திறத்தனாய், அறத்தையே மறந்து *

புலம் படிந்துண்ணும் போகமே பெருக்கிப்

போக்கினேன் பொழுதினை வாளா *

அலம்புரி தடக்கை ஆயனே ! மாயா !

வானவர்க் கரசனே ! * வானோர்

நலம் புரிந்திறைஞ்சும் திருவடி அடைந்தேன்

நைமிசாரணியத்துள் எந்தாய் ! 1.6.2  நைமிசாரணியம்

சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து

சுரிகுழல் மடந்தையர் திறத்துக் *

காதலே மிகுத்துக் கண்டவா திரிந்த

தொண்டனேன் * நமன் தமர் செய்யும்

வேதனைக் கொடுங்கி நடுங்கினேன்,

வேலை வெண்திரை யலமரக் கடைந்த

நாதனே !,* வந்து உன் திருவடி அடைந்தேன்

நைமிசாரணியத்துள் எந்தாய் ! 1.6.3  நைமிசாரணியம்

வம்புலாம் கூந்தல் மனைவியைத் துறந்து

பிறர் பொருள் தாரம் என்றிவற்றை *

நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி

எற்றி வைத்து * எரியெழுகின்ற

செம்பினால் இயன்ற பாவையைப்

பாவீ ! தழுவென மொழிவதற்கு அஞ்சி *

நம்பனே ! வந்து உன் திருவடி அடைந்தேன்

நைமிசாரணியத்துள் எந்தாய் ! 1.6.4  நைமிசாரணியம்

இடும்பையா லடர்ப்புண்டு இடுமினோ துற்றென்று

இரந்தவர்க்கு இல்லையே என்று *

நெடுஞ்சொலால் மறுத்த நீசனேன் அந்தோ !

நினைக்கிலேன் வினைப் பயன் தன்னைக் *

கடுஞ்சொலார் கடியார் காலனார் தமரால்

படுவதோர் கொடுமிறைக்கு அஞ்சி *

நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்

நைமிசாரணியத்துள் எந்தாய் ! 1.6.5  நைமிசாரணியம்

கோடிய மனத்தால் சினத்தொழில் புரிந்து

திரிந்து நாயினத்தொடும் திளைத்திட்டு *

ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன்

உணர்விலேன் ஆதலால் * நமனார்

பாடியைப் பெரிதும் பரிசழித்திட்டேன்

பரமனே ! பாற்கடல் கிடந்தாய் ! *

நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்

நைமிசாரணியத்துள் எந்தாய் ! 1.6.6  நைமிசாரணியம்,

திருப்பாற்கடல்

நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும்

நீதியல்லாதன செய்தும் *

துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே

துளங்கினேன், விளங்கனி முனிந்தாய்! *

வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா

வானவா! தானவர்க்கென்றும்

நஞ்சனே ! * வந்து உன் திருவடி அடைந்தேன்

நைமிசாரணியத்துள் எந்தாய் ! 1.6.7  நைமிசாரணியம்

ஏவினார் கலியார் நலிக வென்று என்மேல்

எங்ஙனே வாழுமாறு ? * ஐவர்

கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்

குறுங்குடி நெடுங்கடல் வண்ணா ! *

பாவினாரின் சொல் பல்மலர் கொண்டு,

உன் பாதமே பரவி நான் பணிந்து, * என்

நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன்

நைமிசாரணியத்துள் எந்தாய் ! 1.6.8  திருக்குறுங்குடி,

நைமிசாரணியம்

ஊனு(னி)டைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி

உரோமம் வேய்ந்து, ஒன்பது வாசல் *

தானுடைக் குரம்பை பிரியும் போது,

உன்தன் சரணமே சரணமென்றிருந்தேன் *

தேனுடைக் கமலத் திருவினுக்கரசே !

திரைகொள் மாநெடுங் கடல் கிடந்தாய் !

நானுடைத் தவத்தால் திருவடி அடைந்தேன்

நைமிசாரணியத்துள் எந்தாய் ! 1.6.9  நைமிசாரணியம்,

திருப்பாற்கடல்

ஏதம் வந்தணுகா வண்ணம் நாம் எண்ணி

எழுமினோ தொழுதுமென்று, * இமையோர்

நாதன் வந்திறைஞ்சும் நைமிசாரணியத்து

எந்தையைச், சிந்தையுள் வைத்துக் *

காதலே மிகுத்த கலியன் வாயொலி செய்

மாலை, தான் கற்று வல்லார்கள் *

ஓதநீர் வையகம் ஆண்டு வெண்குடைக்கீழ்

உம்பருமாகுவர் தாமே. 1.6.10    நைமிசாரணியம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.