[highlight_content]

Thirumozhi 4-2

பெரிய திருமொழி

நான்காம் பத்து

இரண்டாம் திருமொழி

கம்பமா கடலடைத்து

இலங்கைக்கு மன் கதிர்முடியவை பத்தும்

அம்பினாலறுத்து * அரசு அவன் தம்பிக்கு

அளித்தவனுறை கோயில் *

செம்பலா நிரை செண்பகம் மாதவி

சூதகம் வாழைகள் சூழ் *

வம்புலாம் கமுகோங்கிய நாங்கூர்

வண்புருடோத்தமமே.  4.2.1      வண்புருடோத்தமம்

பல்லவம் திகழ் பூங்கடம்பேறி

அக்காளியன் பணவரங்கில் *

ஒல்லை வந்திறப் பாய்ந்து அருநடஞ்செய்த

உம்பர் கோனுறை கோயில் *

நல்ல வெந்தழல் மூன்று நால் வேதம்

ஐவேள்வியோடு ஆறங்கம்

வல்ல * அந்தணர் மல்கிய நாங்கூர்

வண்புருடோத்தமமே.  4.2.2      வண்புருடோத்தமம்

அண்டரானவர் வானவர் கோனுக்கென்று

அமைத்த சோறதுவெல்லாம்

உண்டு * கோநிரை மேய்த்து அவை காத்தவன்

உகந்தினிதுறை கோயில் *

கொண்டலார் முழவிற் குளிர் வார்பொழில்

குலமயில் நடமாட *

வண்டு தானிசை பாடிடு நாங்கூர்

வண்புருடோத்தமமே.  4.2.3    வண்புருடோத்தமம்

பருங்கை யானையின் கொம்பினைப் பறித்து

அதன் பாகனைச் சாடிப் புக்கு *

ஒருங்க மல்லரைக் கொன்று

பின் கஞ்சனை உதைத்தவனுறை கோயில் *

கரும்பினூடுயர் சாலிகள் விளைதரு கழனியில் மலி வாவி *

மருங்கெலாம் பொழிலோங்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே.  4.2.4     வண்புருடோத்தமம்

சாடு போய் விழத் தாள் நிமிர்த்து

ஈசன் தன் படையோடும் கிளையோடும்

ஓட * வாணனை ஆயிரந்தோள்களும்

துணித்தவனுறை கோயில் *

ஆடுவான் கொடி அகல் விசும்பணவிப் போய்ப்

பகலவனொளி மறைக்கும் *

மாடமாளிகை சூழ்தரு நாங்கூர்

வண்புருடோத்தமமே.  4.2.5      வண்புருடோத்தமம்

அங்கையால் அடிமூன்று நீரேற்று

அயன் அலர்கொடு தொழுதேத்த *

கங்கை போதரக் கால் நிமிர்த்தருளிய

கண்ணன் வந்துறை கோயில் *

கொங்கை கோங்கவை காட்ட

வாய் குமுதங்கள் காட்ட * மாபதுமங்கள்

மங்கைமார் முகம் காட்டிடு நாங்கூர்

வண்புருடோத்தமமே.  4.2.6      வண்புருடோத்தமம்

உளைய ஒண்திறல் பொன் பெயரோன் தனது

உரம் பிளந்து உதிரத்தை

அளையும் * வெஞ்சினத்து அரி பரி கீறிய

அப்பன் வந்துறை கோயில் *

இளைய மங்கையர் இணையடிச் சிலம்பினொடு

எழில்கொள் பந்தடிப்போர் * கை

வளையினின்று ஒலி மல்கிய நாங்கூர்

வண்புருடோத்தமமே.  4.2.7      வண்புருடோத்தமம்

வாளையார் தடங்கண் உமை பங்கன்

வன் சாபமற்று அது நீங்க *

மூளைஆர் சிரத்து ஐயம் முன்னளித்த

எம் முகில் வண்ணனுறை கோயில் *

பாளை வான் கமுகூடுயர் தெங்கின்

வன் பழம் விழ வெருவிப் போய் *

வாளை பாய் தடம் சூழ் தரு நாங்கூர்

வண்புருடோத்தமமே.  4.2.8      வண்புருடோத்தமம்

இந்து வார்சடை ஈசனைப் பயந்த

நான்முகனைத் * தன்னெழிலாரும்

உந்தி மாமலர் மீமிசைப் படைத்தவன்

உகந்து இனிதுறை கோயில் *

குந்தி வாழையின் கொழுங்கனி நுகர்ந்து

தன் குருளையைத் தழுவிப் போய் *

மந்தி மாம்பணை மேல் வைகு நாங்கூர்

வண்புருடோத்தமமே.  4.2.9      வண்புருடோத்தமம்

மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர்

வண்புருடோத்தமத்துள் *

அண்ணல் சேவடிக் கீழடைந் துய்ந்தவன்

ஆலிமன் அருள்மாரி *

பண்ணுள் ஆர்தரப் பாடிய பாடல்

இப்பத்தும் வல்லார் * உலகில்

எண்ணிலாத பேரின்பமுற்று

இமையவரோடும் கூடுவரே.        4.2.10    வண்புருடோத்தமம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.