[highlight_content]

Thirumozhi 4-4

பெரிய திருமொழி

நான்காம் பத்து

நான்காம் திருமொழி

மாற்றரசர் மணிமுடியும் திறலும் தேசும்

மற்றவர்தம் காதலிமார் குழையும் * தந்தை

கால்தளையும் உடன்கழல வந்து தோன்றிக்

கதநாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர் *

நூற்றிதழ் கொளரவிந்தம் நுழைந்த பள்ளத்து

இளங்கமுகின் முதுபாளை பகுவாய் நண்டின் *

சேற்றளையில் வெண்முத்தம் சிந்தும் நாங்கூர்த்

திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே.  4.4.1      திருத்தெற்றியம்பலம்

பொற்றொடித்தோள் மடமகள் தன் வடிவு கொண்ட

பொல்லாத வன்பேய்ச்சி கொங்கை வாங்கிப் *

பெற்றெடுத்த தாய் போல மடுப்ப, ஆரும்

பேணா நஞ்சுண்டுகந்த பிள்ளை கண்டீர் *

நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல்

இருஞ்சிறைய வண்டொலியும் * நெடுங்கணார்தம்

சிற்றடி மேல் சிலம்பொலியும் மிழற்றும் நாங்கூர்த்

திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே.  4.4.2      திருத்தெற்றியம்பலம்

படலடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப்

பசுவெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும் *

அடலடர்த்த வேற்கண்ணார் தோக்கை பற்றி

அலந்தலைமை செய்துழலும் ஐயன் கண்டீர் *

மடலெடுத்த நெடுந்தெங்கின் பழங்கள் வீழ

மாங்கனிகள் திரட்டுருட்டா வருநீர்ப் பொன்னி *

திடலெடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர்த்

திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே.  4.4.3      திருத்தெற்றியம்பலம்

வாராரும் முலைமடவாள் பின்னைக்காகி

வளைமருப்பில் கடுஞ்சினத்து வன்தாளார்ந்த *

காரார் திண் விடையடர்த்து வதுவையாண்ட

கருமுகில் போல் திருநிறத்து என்கண்ணன் கண்டீர் *

ஏராரும் மலர்ப் பொழில்கள் தழுவி, எங்கும்

எழில்மதியைக் கால் தொடர விளங்கு சோதிச் *

சீராரும் மணிமாடம் திகழும் நாங்கூர்த்

திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே.  4.4.4      திருத்தெற்றியம்பலம்

கலையிலங்கும் அகலல்குல் கமலப்பாவை

கதிர்முத்த வெண்ணகையாள் கருங்கணாய்ச்சி *

முலையிலங்கும் ஒளிமணிப் பூண்வடமும் தேய்ப்ப

மூவாத வரை நெடுந்தோள் மூர்த்தி கண்டீர் *

மலையிலங்கு நிரைச் சந்தி மாடவீதி

ஆடவரை மடமொழியார் முகத்து * இரண்டு

சிலைவிலங்கி மனஞ்சிறை கொண்டிருக்கும் நாங்கூர்த்

திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே.  4.4.5      திருத்தெற்றியம்பலம்

தான்போலும் ஏன்றெழுந்தான் தரணியாளன்

அதுகண்டு தரித்திருப்பான் * அரக்கர் தங்கள்

கோன்போலும் ஏன்றெழுந்தான் குன்றமன்ன

இருபது தோளுடன் துணித்த ஒருவன் கண்டீர் *

மான் போலும் மென்னோக்கின் செய்ய வாயார்

மரகதம் போல் மடக்கிளியைக் கைமேல் கொண்டு *

தேன்போலும் மென்மழலை பயிற்றும் நாங்கூர்த்

திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே.  4.4.6      திருத்தெற்றியம்பலம்

பொங்கிலங்கு புரிநூலும் தோலும் தாழப்

பொல்லாத குறளுருவாய்ப் பொருந்தா வாணன் *

மங்கலம் சேர் மறை வேள்வி யதனுள் புக்கு

மண்ணகலம் குறையிரந்த மைந்தன் கண்டீர் *

கொங்கலர்ந்த மலர்க்குழலார் கொங்கை தோய்ந்த

குங்குமத்தின் குழம்பளைந்த கோலந்தன்னால் *

செங்கலங்கல் வெண்மணல்மேல் தவழும் நாங்கூர்த்

திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே.  4.4.7      திருத்தெற்றியம்பலம்

சிலம்பினிடைச் சிறுபரல் போல் பெரிய மேரு

திருக்குளம்பில் கணகணப்பத் திருவாகாரம்

குலுங்க * நிலமடந்தை தனை இடந்து புல்கிக்

கோட்டிடை வைத்தருளிய எங்கோமான் கண்டீர் *

இலங்கிய நான்மறை யனைத்தும் அங்கமாறும்

ஏழிசையும் கேள்விகளும் எண்திக்கெங்கும் *

சிலம்பிய நற்பெருஞ் செல்வம் திகழும் நாங்கூர்த்

திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே.  4.4.8      திருத்தெற்றியம்பலம்

ஏழுலகும் தாழ்வரையும் எங்கும் மூடி

எண்திசையும் மண்டலமும் மண்டி * அண்டம்

மோழை யெழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம்

முன்னகட்டி லொடுக்கிய எம் மூர்த்தி கண்டீர் *

ஊழிதொறும் ஊழிதொறும் உயர்ந்த செல்வத்து

ஓங்கிய நான்மறை யனைத்தும் தாங்கு நாவர் *

சேழுயர்ந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த்

திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே.  4.4.9      திருத்தெற்றியம்பலம்

சீரணிந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த்

திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலைக் *

கூரணிந்த வேல் வலவன் ஆலிநாடன்

கொடிமாட மங்கையர் கோன் குறையலாளி *

பாரணிந்த தொல்புகழான் கலியன் சொன்ன

பாமாலை இவை யைந்து மைந்தும் வல்லார் *

சீரணிந்த உலகத்து மன்னராகிச்

சேண்விசும்பில் வானவராய்த் திகழ்வர் தாமே.      4.4.10    திருத்தெற்றியம்பலம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.