[highlight_content]

Thirumozhi 9-4

பெரிய திருமொழி

ஒன்பதாம் பத்து

நான்காம் திருமொழி

காவார் மடல் பெண்ணை, அன்றிலரி குரலும் *

ஏவாயினூ டியங்கும், எஃகின் கொடிதாலோ ! *

பூவார் மணம் கமழும், புல்லாணி கை தொழுதேன் *

பாவாய் ! இது நமக்கு, ஓர் பான்மையே யாகாதே.     9.4.1      திருப்புல்லாணி

முன்னம் குறளுருவாய், மூவடி மண் கொண்டளந்த *

மன்னன் சரிதைக்கே மாலாகிப், பொன் பயந்தேன் *

பொன்னங்கழிக் கானல் புள்ளினங்காள் ! புல்லாணி *

அன்னமாய் நூல் பயந்தாற்கு ஆங்கு இதனைச் செப்புமினே.         9.4.2      திருப்புல்லாணி

வவ்வித் துழாயதன் மேல் சென்ற, தனி நெஞ்சம் *

செவ்வி யறியாது, நிற்குங்கொல் ? * நித்திலங்கள்

பவ்வத் திரையுலவு, புல்லாணி கை தொழுதேன் *

தெய்வச் சிலையாற்கு, என் சிந்தை நோய் செப்புமினே.       9.4.3      திருப்புல்லாணி

பரிய இரணியனது ஆகம், அணியுகிரால் *

அரியுருவாய்க் கீண்டான், அருள் தந்தவா ? நமக்குப் *

பொரு திரைகள் போந்துலவு புல்லாணி, கை தொழுதேன் *

அரிமலர்க் கண் நீர் ததும்ப, அந்துகிலும் நில்லாவே.         9.4.4      திருப்புல்லாணி

வில்லால் இலங்கை மலங்கச், சரம் துரந்த *

வல்லாளன் பின்போன நெஞ்சம், வருமளவும் *

எல்லாரும் என் தன்னை, ஏசிலும் பேசிடினும் *

புல்லாணி யெம்பெருமான், பொய் கேட்டிருந்தேனே.  9.4.5      திருப்புல்லாணி

சுழன்றிலங்கு வெங்கதிரோன், தேரோடும் போய் மறைந்தான் *

அழன்று கொடிதாகி, அஞ்சுடரில் தானடுமால் *

செழுந்தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி, கை தொழுதேன் *

இழந்திருந்தேன் என் தன், எழில் நிறமும் சங்குமே.  9.4.6      திருப்புல்லாணி

கனையாரிடி குரலின், கார்மணியின் நாவாடல் *

தினையேனும் நில்லாது, தீயிற் கொடிதாலோ *

புனையார் மணிமாடப், புல்லாணி கை தொழுதேன் *

வினையேன் மேல், வேலையும் வெந்தழலே வீசுமே.          9.4.7      திருப்புல்லாணி

தூம்புடைக்கை வேழம், வெருவ மருப்பொசித்த *

பாம்பினணையான், அருள் தந்தவா ? நமக்குப் *

பூஞ்செருந்தி பொன் சொரியும் புல்லாணி, கை தொழுதேன் *

தேம்பல் இளம்பிறையும், என்தனக்கு ஓர் வெந்தழலே.          9.4.8      திருப்புல்லாணி

வேதமும் வேள்வியும், விண்ணும் இரு சுடரும் *

ஆதியுமானான் அருள் தந்தவா ! நமக்குப்

போதலரும் புன்னை சூழ் புல்லாணி, கை தொழுதேன் *

ஓதமும் நானும், உறங்காதிருந்தேனே.     9.4.9      திருப்புல்லாணி

பொன்னலரும் புன்னைசூழ், புல்லாணி யம்மானை *

மின்னிடையார் வேட்கை நோய் கூர, இருந்ததனைக்

கல்நவிலும் திண்தோள், கலியனொலி வல்லார் *

மன்னவராய் மண்ணாண்டு, வானாடும் உன்னுவரே.          9.4.10    திருப்புல்லாணி

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.