[highlight_content]

Thirumozhi 9-6

பெரிய திருமொழி

ஒன்பதாம் பத்து

ஆறாம் திருமொழி

அக்கும் புலியின் அதளும் உடையார், அவரொருவர் *

பக்கம் நிற்க நின்ற, பண்பரூர் போலும் *

தக்க மரத்தின், தாழ்சினையேறித் * தாய் வாயில்

கொக்கின் பிள்ளை, வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே.       9.6.1      திருக்குறுங்குடி

துங்கா ரரவத், திரை வந்துலவத் * தொடுகடலுள்

பொங்கா ரரவில் துயிலும், புனிதரூர் போலும் *

செங்காலன்னம், திகழ் தண்பணையில் பெடையோடும் *

கொங்கார் கமலத் தலரில், சேருங் குறுங்குடியே.       9.6.2      திருக்குறுங்குடி,

திருப்பாற்கடல்

வாழக் கண்டோம், வந்து காண்மின் தொண்டீர்காள் !

கேழல் செங்கண், மாமுகில் வண்ணர் மருவுமூர் *

ஏழைச் செங்கால், இன்துணை நாரைக்கு இரை தேடிக் *

கூழைப் பார்வைக், கார் வயல் மேயும் குறுங்குடியே.             9.6.3      திருக்குறுங்குடி

சிரமுன் ஐந்து மைந்தும், சிந்தச் சென்று * அரக்கன்

உரமும் கரமும் துணித்த, உரவோனூர் போலும் *

இரவும் பகலும், ஈன்தேன் முரல * மன்றெல்லாம்

குரவின் பூவே தான், மணநாறும் குறுங்குடியே.       9.6.4      திருக்குறுங்குடி

கவ்வைக் களிற்று மன்னர் மாளக், கலிமான் தேர்

ஐவர்க்காய் * அன்று அமரில் உய்த்தான் ஊர் போலும் *

மைவைத்திலங்கு கண்ணார் தங்கள், மொழி யொப்பான் *

கொவ்வைக் கனிவாய்க், கிள்ளை பேசும் குறுங்குடியே.        9.6.5      திருக்குறுங்குடி

தீ நீர் வண்ண, மாமலர் கொண்டு விரையேந்தித் *

தூநீர் பரவித் தொழுமின் எழுமின், தொண்டீர்காள் ! *

மாநீர் வண்ணர், மருவி யுறையுமிடம் * வானில்

கூனீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே.       9.6.6      திருக்குறுங்குடி

வல்லிச் சிறு நுண்ணிடையா ரிடை, நீர் வைக்கின்ற *

அல்லல் சிந்தை தவிர, அடைமின் அடியீர்காள்! *

சொல்லில் திருவே யனையார், கனிவா யெயிறொப்பான் *

கொல்லை முல்லை மெல்லரும்பீனும் குறுங்குடியே.           9.6.7      திருக்குறுங்குடி

நாராரிண்டை, நாண்மலர் கொண்டு நந்தமர்காள் ! *

ஆரா அன்போடு, எம்பெருமானூ ரடைமின்கள் *

தாரா வாரும், வார் புனல் மேய்ந்து வயல் வாழும் *

கூர்வாய் நாரை, பேடையோடாடும் குறுங்குடியே.        9.6.8      திருக்குறுங்குடி

நின்ற வினையும் துயரும் கெட, மாமலரேந்திச் *

சென்று பணிமின் எழுமின் தொழுமின் தொண்டீர்காள் ! *

என்றும் இரவும் பகலும், வரிவண்டு இசை பாடக் *

குன்றின் முல்லை, மன்றிடை நாறும் குறுங்குடியே.               9.6.9      திருக்குறுங்குடி

சிலையால் இலங்கை செற்றான், மற்றோர் சினவேழம் * கொலையார் கொம்பு கொண்டான் மேய, குறுங்குடி மேல் *

கலையார் பனுவல் வல்லான், கலியனொலி மாலை *

நிலையார் பாடல் பாடப், பாவம் நில்லாவே.    9.6.10    திருக்குறுங்குடி

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.