[highlight_content]

Thirumozhi 9-7

பெரிய திருமொழி

ஒன்பதாம் பத்து

ஏழாம் திருமொழி

தந்தை தாய் மக்களே சுற்றமென்று உற்றவர் பற்றி நின்ற *

பந்தமார் வாழ்க்கையை நொந்து நீ பிழையெனக் கருதினாயேல் *

அந்தமாய் ஆதியாய் ஆதிக்கு மாதியாய் ஆயனாய *

மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே !   9.7.1                திருவல்லவாழ்

மின்னுமா வல்லியும் வஞ்சியும் வென்ற நுண்ணிடை நுடங்கும் *

அன்ன மென்னடையினார் கலவியை அருவருத் தஞ்சினாயேல் *

துன்னு மாமணி முடிப் பஞ்சவர்க்காகி முன் தூது சென்ற *

மன்னனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே !     9.7.2                திருவல்லவாழ்

பூணுலா மென்முலைப் பாவைமார் பொய்யினை மெய்யிதென்று *

பேணுவார் பேசும் அப்பேச்சை நீ பிழையெனக் கருதினாயேல் *

நீணிலா வெண்குடை வாணனார் வேள்வியில் மண்ணிரந்த *

மாணியார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே !      9.7.3                திருவல்லவாழ்

பண்ணுலா மென்மொழிப் பாவைமார்

பணைமுலை யணைதும் நாமென்று *

எண்ணுவா ரெண்ணம தொழித்து

நீ பிழைத்துய்யக் கருதினாயேல் *

விண்ணுளார் விண்ணின் மீதியன்ற

வேங்கடத்துளார் * வளங்கொள் முந்நீர்

வண்ணனார் வல்லவாழ்

சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே !    9.7.4      திருவல்லவாழ்,

திருவேங்கடம் திருப்பதி

மஞ்சுதோய் வெண்குடை மன்னராய் வாரணம் சூழ வாழ்ந்தார் *

துஞ்சினா ரென்பதோர் சொல்லை நீ துயரெனக் கருதினாயேல் *

நஞ்சுதோய் கொங்கைமேல் அங்கைவாய் வைத்து அவள்நாளையுண்ட*

மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே !   9.7.5                திருவல்லவாழ்

உருவினார் பிறவி சேர்

ஊன் பொதி நரம்பு தோற் குரம்பையுள் புக்கு *

அருவி நோய் செய்து நின்று ஐவர்தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல் *

திருவினார் வேதம் நான்கு ஐந்து தீவேள்வியோடு அங்கமாறும் *

மருவினார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே !    9.7.6                திருவல்லவாழ்

நோயெலாம் பெய்ததோ ராக்கையை

மெய்யெனக் கொண்டு * வாளா

பேயர் தாம் பேசும் அப்பேச்சை நீ பிழையெனக் கருதினாயேல் *

தீயுலா வெங்கதிர்த் திங்களாய் மங்குல் வானாகி நின்ற *

மாயனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே !        9.7.7                திருவல்லவாழ்

மஞ்சுசேர் வானெரி நீர் நிலம் காலிவை மயங்கி நின்ற *

அஞ்சு சேராக்கையை அரண மன்றென்றுய்யக் கருதினாயேல் *

சந்து சேர் மென்முலைப் பொன்மலர்ப் பாவையும் தாமும் * நாளும்

வந்து சேர் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே !     9.7.8                திருவல்லவாழ்

வெள்ளியார் பிண்டியார் போதியா ரென்றிவர் ஓதுகின்ற *

கள்ள நூல் தன்னையும் கரும மன்றென்றுயக் கருதினாயேல் * தெள்ளியார் கைதொழும் தேவனார் மாமுநீ ரமுது தந்த *

வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே !    9.7.9                திருவல்லவாழ்

மறைவலார் குறைவிலாருறையுமூர் வல்லவாழடிகள் தம்மைச் *

சிறைகுலா வண்டறை சோலை சூழ் கோல நீளாலி நாடன் *

கறையுலா வேல் வல்ல கலியன் வாயொலி யிவை கற்று வல்லார் *

இறைவராய் இருநிலம் காவல் பூண்டு இன்பம் நன்கெய்துவாரே.        9.7.10                திருவல்லவாழ்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.