[highlight_content]

Thirumozhi 9-9

பெரிய திருமொழி

ஒன்பதாம் பத்து

ஒன்பதாம் திருமொழி

மூவரில் முன் முதல்வன், முழங்கார் கடலுள் கிடந்து *

பூவலருந்தி தன்னுள், புவனம் படைத்துண்டுமிழ்ந்த *

தேவர்கள் நாயகனைத், திருமாலிருஞ்சோலை நின்ற *

கோவலர் கோவிந்தனைக், கொடியேரிடை கூடுங்கொலோ ?          9.9.1                திருமாலிருஞ்சோலை,

திருப்பாற்கடல்

புனைவளர் பூம்பொழிலார், பொன்னி சூழரங்க நகருள்

முனைவனை * மூவுலகும் படைத்த முதல் மூர்த்தி தன்னைச் *

சினைவளர் பூம்பொழில் சூழ், திருமாலிருஞ்சோலை நின்றான் * கனைகழல் காணுங் கொலோ? கயற்கண்ணி எம் காரிகையே.     9.9.2      திருவரங்கம்,

திருமாலிருஞ்சோலை

உண்டு உலகேழினையும், ஒரு பாலகன் ஆலிலை மேல் *

கண்துயில் கொண்டுகந்த, கருமாணிக்க மாமலையைத் *

திண்திறல் மாகரி சேர் திருமாலிருஞ்சோலை நின்ற *

அண்டர் தம் கோவினை, இன்றணுகுங்கொல்? என்னாயிழையே.  9.9.3                திருமாலிருஞ்சோலை

சிங்கமதாய், அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த *

பங்கய மாமலர்க் கண் பரனை, எம் பரஞ்சுடரைத் *

திங்கள் நன்மா முகில்சேர், திருமாலிருஞ்சோலை நின்ற *

நங்கள் பிரானை இன்று நணுகுங்கொல் ? என் நன்னுதலே.       9.9.4                திருமாலிருஞ்சோலை

தானவன் வேள்வி தன்னில், தனியே குறளாய் நிமிர்ந்து *

வானமும் மண்ணகமும் அளந்த, திரிவிக்கிரமன் *

தேனமர் பூம்பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற

வானவர் கோனை * இன்று வணங்கித் தொழ வல்லள் கொலோ ?   9.9.5                திருமாலிருஞ்சோலை

நேசமிலாதவர்க்கும், நினையாதவர்க்கும் அரியான் *

வாசமலர்ப் பொழில் சூழ் வடமா மதுரைப் பிறந்தான் *

தேசமெல்லாம் வணங்கும் திருமாலிருஞ்சோலை நின்ற *

கேசவநம்பி தன்னைக், கெண்டையொண்கண்ணி காணுங்கொலோ ?       9.9.6                திருமாலிருஞ்சோலை,

வடமதுரை

புள்ளினை வாய் பிளந்து, பொருமாகரி கொம்பொசித்துக் *

கள்ளச் சகடுதைத்த, கருமாணிக்க மாமலையைத் *

தெள்ளருவி கொழிக்கும், திருமாலிருஞ்சோலை நின்ற *

வள்ளலை வாணுதலாள், வணங்கித் தொழ வல்லள் கொலோ?   9.9.7                திருமாலிருஞ்சோலை

பார்த்தனுக் கன்றருளிப், பாரதத்து ஒரு தேர் முன் நின்று *

காத்தவன் தன்னை, விண்ணோர் கருமாணிக்க மாமலையைத் *

தீர்த்தனைப் பூம்பொழில் சூழ், திருமாலிருஞ்சோலை நின்ற *

மூர்த்தியைக் கைதொழவும் முடியுங்கொல் ? என் மொய்குழற்கே.        9.9.8                திருமாலிருஞ்சோலை

வலம்புரி யாழியனை, வரையார் திரள் தோளன் தன்னைப் *

புலம்புரி நூலவனைப், பொழில் வேங்கட வேதியனைச் *

சிலம்பிய லாறுடைய, திருமாலிருஞ்சோலை நின்ற *

நலந்திகழ் நாரணனை, நணுகுங்கொல் ? என் நன்னுதலே.  9.9.9                திருமாலிருஞ்சோலை,

திருவேங்கடம் திருப்பதி

தேடற்கரியவனைத் திருமாலிருஞ்சோலை நின்ற *

ஆடற் பறவையனை, அணியாயிழை காணுமென்று *

மாடக் கொடி மதிள் சூழ், மங்கையார் கலிகன்றி சொன்ன *

பாடல் பனுவல் பத்தும், பயில்வார்க்கு இல்லை பாவங்களே.      9.9.10                திருமாலிருஞ்சோலை

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.