[highlight_content]

Thirumozhi 11-1

பெரிய திருமொழி

பதினோராம் பத்து

முதல் திருமொழி

குன்ற மொன்று எடுத்தேந்தி * மாமழை

அன்று காத்த, அம்மான் * அரக்கரை

வென்ற வில்லியார், வீரமே கொலோ ? *

தென்றல் வந்து தீ வீசும், என் செய்கேன் ?           11.1.1

காரும் வார்பனிக் கடலும், அன்னவன் *

தாரும் மார்வமும், கண்ட தண்டமோ ? *

சோரு மாமுகில், துளியினூடு வந்து *

ஈர வாடை தான், ஈரும் என்னையே.     11.1.2

சங்கும் மாமையும், தளரும் மேனி மேல் *

திங்கள் வெங்கதிர் சீறும், என் செய்கேன் ? *

பொங்கு வெண்திரைப், புணரி வண்ணனார் *

கொங்கலர்ந்ததார், கூவும் என்னையே.      11.1.3

அங்கோராய்க் குலத்துள், வளர்ந்து சென்று

அங்கோர் தாயுருவாகி, வந்தவள் *

கொங்கை நஞ்சுண்ட, கோயின்மை கொலோ ?

திங்கள் வெங்கதிர், சீறுகின்றதே,     11.1.4

அங்கு ஓராளரியாய், அவுணனைப்

பங்கமா * இரு கூறு செய்தவன் *

மங்குல் மாமதி, வாங்கவே கொலோ ? *

பொங்கு மா கடல், புலம்புகின்றதே.      11.1.5

சென்று, வார் சிலை வளைத்து * இலங்கையை

வென்ற வில்லியார், வீரமே கொலோ ? *

முன்றில் பெண்ணை மேல், முளரிக் கூட்டகத்து *

அன்றிலின் குரல், அடரும் என்னையே.  11.1.6

பூவை வண்ணனார், புள்ளின் மேல் வர *

மேவி நின்று நான், கண்ட தண்டமோ ? *

வீவி லைங்கணை, வில்லி அம்பு கோத்து *

ஆவியே, இலக்காக எய்வதே !       11.1.7

மால் இனம் துழாய் வரும், என் நெஞ்சகம் *

மாலின் அந்துழாய், வந்து என்னுள் புகக் *

கோல வாடையும் கொண்டு வந்தது, ஓர்

ஆலி வந்தது ஆல் * அரிது காவலே.     11.1.8

கெண்டை யொண்கணும், துயிலும் * என்னிறம்,

பண்டு பண்டு போலொக்கும் * மிக்க சீர்த்

தொண்ட ரிட்ட, பூந்துளவின் வாசமே *

வண்டு கொண்டு வந்து, ஊதுமாகிலே.      11.1.9

அன்று பாரதத்து, ஐவர் தூதனாய்ச் *

சென்ற மாயனைச், செங்கண் மாலினை *

மன்றிலார் புகழ், மங்கை வாள் கலி

கன்றி * சொல் வல்லார்க்கு, அல்லலில்லையே.       11.1.10

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.