[highlight_content]

Thirumozhi 11-6

பெரிய திருமொழி

பதினோராம் பத்து

ஆறாம் திருமொழி

மைந்நின்ற கருங்கடல் வாயுலகின்றி

வானவரும் யாமுமெல்லாம் *

நெய்ந்நின்ற சக்கரத்தன் திருவயிற்றில்

நெடுங்காலம் கிடந்தது ஓரீர் *

எந்நன்றி செய்தாரா

ஏதிலோர் தெய்வத்தை ஏத்துகின்றீர் ? *

செய்ந்நன்றி குன்றேன்மின்

தொண்டர்காள் ! அண்டனையே ஏத்தீர்களே.     11.6.1

நில்லாத பெருவெள்ளம்

நெடுவிசும்பின் மீதோடி நிமிர்ந்த காலம் *

மல்லாண்ட தடக்கையால்

பகிரண்ட மகப்படுத்த காலத்து * அன்று

எல்லாரும் அறியாரோ ?

எம்பெருமானுண்டுமிழ்ந்த * எச்சில் தேவர்

அல்லாதார் தாமுளரே !

அவனருளே உலகாவது அறியீர்களே ?    11.6.2

நெற்றி மேல் கண்ணானும் நிறை மொழி வாய்

நான் முகனும் * நீண்ட நால்வாய்

ஒற்றைக்கை வெண்பகட்டி னொருவனையும் உள்ளிட்ட அமரரோடும் *

வெற்றிப் போர்க் கடலரையன் விழுங்காமல்

தான் விழுங்கி உய்யக் கொண்ட *

கொற்றப்போராழியான் குணம்பரவாச் சிறுதொண்டர் கொடியவாறே!    11.6.3

பனிப் பரவைத் திரை ததும்பப்

பாரெல்லாம், நெடுங்கடலேயான காலம் *

இனிக் களைகண் இவர்க்கில்லை யென்று

உலகமேழினையும் ஊழில் வாங்கி *

முனித் தலைவன், முழங்கொளி சேர் திருவயிற்றில் வைத்து

உம்மை யுய்யக் கொண்ட *

கனிக்களவத் திருவுருவத் தொருவனையே

கழல் தொழுமா கல்லீர்களே.         11.6.4

பாராரும் காணாமே பரவைமா நெடுங்கடலே யான காலம் *

ஆரானும் அவனுடைய திருவயிற்றில் நெடுங்காலம் கிடந்தது *

உள்ளத் தோராத உணர்விலீர் ! உணருதிரேல் உலகளந்த உம்பர் கோமான் *

பேராளன் பேரான பேர்களாயிரங்களுமே பேசீர்களே.              11.6.5

பேயிருக்கும் நெடு வெள்ளம்

பெரு விசும்பின் மீதோடிப் பெருகு காலம் *

தாயிருக்கும் வண்ணமே

உம்மைத் தன் வயிற்றிருத்தி உய்யக் கொண்டான்

போயிருக்க * மற்றிங்கோர் புதுத் தெய்வம்

கொண்டாடும் தொண்டீர் ! * பெற்ற

தாயிருக்க மணை வெந்நீராட்டுதிரோ ?

மாட்டாத தகவற்றீரே.                 11.6.6

மண்ணாடும் விண்ணாடும்

வானவரும் தானவரும் மற்றுமெல்லாம் *

உண்ணாத பெருவெள்ளம்

உண்ணாமல், தான் விழுங்கி உய்யக் கொண்ட

கண்ணாளன் * கண்ணமங்கை நகராளன்

கழல்சூடி * அவனை உள்ளத்து

எண்ணாத மானிடத்தை

எண்ணாத போதெல்லாம் இனியவாறே.            11.6.7    திருக்கண்ணமங்கை

மறம் கிளர்ந்து கருங்கடல் நீர்

உரம் துரந்து, பரந்தேறி அண்டத்தப்பால் *

புறம் கிளர்ந்த காலத்துப்

பொன்னுலக மேழினையும் ஊழில் வாங்கி *

அறம் கிளர்ந்த திருவயிற்றின்

அகம் படியில் வைத்து, உம்மை உய்யக் கொண்ட *

நிறம் கிளர்ந்த கருஞ்சோதி நெடுந் தகையை

நினையாதார் நீசர் தாமே.       11.6.8

அண்டத்தின் முகடழுந்த

அலை முந்நீர்த் திரை ததும்ப ஆ ஆ! வென்று *

தொண்டர்க்கும் அமரர்க்கும்

முனிவர்க்கும் தானருளி * உலகமேழும்

உண்டொத்த திருவயிற்றின்

அகம் படியில் வைத்து, உம்மை உய்யக் கொண்ட *

கொண்டற்கை மணிவண்ணன்

தண் குடந்தை நகர் பாடி யாடீர்களே.      11.6.9    திருக்குடந்தை (கும்பகோணம்)

தேவரையும் அசுரரையும்

திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும் *

யாவரையும் ஒழியாமே

எம்பெருமானுண்டுமிழ்ந்ததறிந்து சொன்ன *

காவளரும் பொழில் மங்கைக்

கலிகன்றி யொலி மாலை கற்று வல்லார் *

பூவளரும் திருமகளாலருள் பெற்றுப்

பொன்னுலகிற் பொலிவர் தாமே.       11.6.10

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.