[highlight_content]

Thirumozhi 11-7

பெரிய திருமொழி

பதினோராம் பத்து

ஏழாம் திருமொழி

நீணாகம் சுற்றி, நெடுவரை நட்டு * ஆழ்கடலைப்

பேணான் கடைந்து, அமுதம் கொண்டுகந்த பெம்மானைப் *

பூணார மார்வனைப், புள்ளூரும் பொன் மலையைக் *

காணாதார் கண் என்றும் கண்ணல்ல, கண்டாமே.        11.7.1

நீள்வான் குறளுருவாய், நின்று * இரந்து மாவலி மண்

தாளால் அளவிட்ட, தக்கணைக்கு மிக்கானைத் *

தோளாத மாமணியைத், தொண்டர்க் கினியானைக் *

கேளாச் செவிகள் செவியல்ல, கேட்டாமே.          11.7.2

தூயானைத், தூய மறையானைத் தென்னாலி

மேயானை * மேவாளுயிருண்டு அமுதுண்ட

வாயானை * மாலை வணங்கி, அவன் பெருமை

பேசாதார் * பேச்சு என்றும் பேச்சல்ல, கேட்டாமே.      11.7.3    திருவாலி

கூடா இரணியனைக், கூருகிரால் மார்விடந்த *

ஓடா அடலரியை, உம்பரார் கோமானைத் *

தோடார் நறுந்துழாய் மார்வனை, ஆர்வத்தால்

பாடாதார் * பாட்டு என்றும் பாட்டல்ல, கேட்டாமே.    11.7.4

மையார் கடலும், மணிவரையும் மாமுகிலும் *

கொய்யார் குவளையும் காயாவும் போன்று, இருண்ட

மெய்யானை * மெய்ய மலையானைச், சங்கேந்தும்

கையானைக் * கை தொழாக் கையல்ல, கண்டாமே.           11.7.5    திருமெய்யம்

கள்ளார் துழாயும், கணவலரும் கூவிளையும் *

முள்ளார் முளரியும், ஆம்பலும் முன் கண்டக்கால் *

புள்ளாய் ஓரேனமாய்ப், புக்கிடந்தான் பொன்னடிக் கென்று *

உள்ளாதா ருள்ளத்தை உள்ளமாக், கொள்ளோமே.       11.7.6

கனையார் கடலும், கருவிளையும் காயாவும்

அனையானை * அன்பினால், ஆர்வத்தால் * என்றும்

சுனையார் மலரிட்டுத், தொண்டராய் நின்று *

நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சல்ல, கண்டாமே.             11.7.7

வெறியார் கருங் கூந்தல், ஆய்ச்சியர் வைத்த *

உறியார் நறுவெண்ணெய், தானுகந்து உண்ட

சிறியானைச் * செங்கணெடியானைச், சிந்தித்து

அறியாதார் * என்றும் அறியாதார், கண்டாமே.  11.7.8

தேனொடு வண்டாலும், திருமாலிருஞ்சோலை *

தானிடமாக் கொண்டான் தடமலர்க் கண்ணிக்காய் *

ஆன்விடை யேழன்றடர்த்தாற்கு ஆளானா ரல்லாதார் *

மானிடவ ரல்லரென்று, என் மனத்தே வைத்தேனே.           11.7.9    திருமாலிருஞ்சோலை

மெய்ந்நின்ற பாவம், அகலத் * திருமாலைக்

கைந்நின்ற ஆழியான், சூழும் கழல் சூடிக் *

கைந்நின்ற வேற்கைக், கலியனொலி மாலை *

ஐயொன்று மைந்தும், இவை பாடி யாடுமினே.             11.7.10

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.