[highlight_content]

Thirumozhi 10-1

பெரிய திருமொழி

பத்தாம் பத்து

முதல் திருமொழி

ஒரு நல் சுற்றம், எனக்குயிர் ஒண் பொருள் *

வருநல் தொல்கதி, ஆகிய மைந்தனை *

நெருநல் கண்டது நீர்மலை, இன்று போய் *

கருநெல் சூழ், கண்ணமங்கையுள் காண்டுமே.  10.1.1    திருக்கண்ணமங்கை,

திருநீர்மலை

பொன்னை மாமணியை, அணியார்ந்ததோர்

மின்னை * வேங்கடத்து உச்சியில் கண்டு போய் *

என்னை யாளுடை ஈசனை, எம்பிரான்

தன்னை * யாம் சென்று காண்டும், தண்காவிலே.        10.1.2    திருத்தண்கா,

திருவேங்கடம் திருப்பதி

வேலை யாலிலைப் பள்ளி, விரும்பிய *

பாலை ஆரமுதத்தினைப், பைந்துழாய்

மாலை * ஆலியில் கண்டு, மகிழ்ந்து போய் *

ஞால முன்னியைக் காண்டும், நாங்கூரிலே.     10.1.3    திருவாலி,

திருப்பாற்கடல்

துளக்கமில் சுடரை * அவுணனுடல்

பிளக்கும் மைந்தனைப், பேரில் வணங்கிப் போய் *

அளப்பி லாரமுதை, அமரர்க்கு அருள்

விளக்கினைச் * சென்று, வெள்ளறைக் காண்டுமே.   10.1.4    திருவெள்ளறை,

திருப்பேர்நகர்

சுடலையில், சுடுநீற னமர்ந்தது * ஓர்

நடலை தீர்த்தவனை, நறையூர்க் கண்டு * என்

உடலையுள் புகுந்து, உள்ள முருக்கி * யுண்

விடலையைச் சென்று காண்டும், மெய்யத்துள்ளே.     10.1.5    திருநறையூர்,

திருமெய்யம்

வானை யாரமுதம் தந்த, வள்ளலைத் *

தேனை நீள் வயல், சேறையில் கண்டு போய் *

ஆனை வாட்டி யருளும், அமரர் தம்

கோனை * யாம் குடந்தைச் சென்று, காண்டுமே.           10.1.6    திருச்சேறை,

திருக்குடந்தை (கும்பகோணம்)

கூந்தலார் மகிழ், கோவலனாய் * வெண்ணெய்

மாந்தழுந்தையில் கண்டு, மகிழ்ந்து போய்ப் *

பாந்தள் பாழியில், பள்ளி விரும்பிய *

வேந்தனைச் சென்று காண்டும், வெஃகாவுளே.  10.1.7    திருவழுந்தூர்,

திருவெ:கா

பத்தராவியைப், பால்மதியை அணித்

தொத்தை * மாலிருஞ்சோலைத் தொழுது போய் *

முத்தினை மணியை, மணிமாணிக்க

வித்தினைச் * சென்று விண்ணகர்க் காண்டுமே.           10.1.8    திருவிண்ணகர்,

திருமாலிருஞ்சோலை

கம்பமா களிறு, அஞ்சிக் கலங்க * ஓர்

கொம்பு கொண்ட, குரை கழல் கூத்தனைக் *

கொம்புலாம் பொழில், கோட்டியூர்க் கண்டு போய் *

நம்பனைச் சென்று காண்டும், நாவாயுளே.    10.1.9    திருக்கோட்டியூர்,

திருநாவாய்

பெற்றம் ஆளியைப், பேரில் மணாளனைக் *

கற்ற நூல், கலிகன்றி உரை செய்த *

சொல் திறமிவை, சொல்லிய தொண்டர்கட்கு *

அற்றமில்லை, அண்டம் அவர்க்கு ஆட்சியே.  10.1.10  திருப்பேர்நகர்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.