[highlight_content]

Thirumozhi 10-2

பெரிய திருமொழி

பத்தாம் பத்து

இரண்டாம் திருமொழி

இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை

இம்மையே எமக்கெய்திற்றுக் காணீர் *

பரக்க யாமின்றுரைத்து என் ? இராவணன்

பட்டனன், இனி யாவர்க்கு உரைக்கோம் ? *

குரக்கு நாயகர்காள் ! இளங்கோவே !

கோல வல்விலி ராமபிரானே ! *

அரக்கராடழைப்பாரில்லை, நாங்கள்

அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ.     10.2.1

பத்து நீள்முடியும் அவற்றிரட்டிப்

பாழித் தோளும் படைத்தவன் செல்வம் *

சித்தம் மங்கையர் பால் வைத்துக் கெட்டான்

செய்வதொன்றறியா அடியோங்கள் *

ஒத்த தோளிரண்டும் ஒரு முடியும்

ஒருவர் தந்திறத்தோமன்றி வாழ்ந்தோம் *

அத்த ! எம்பெருமான் ! எம்மைக் கொல்லேல்

அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ.     10.2.2

தண்டகாரணியம் புகுந்து, அன்று

தையலைத் தகவிலி எங்கோமான் *

கொண்டு போந்து கெட்டான் எமக்கு இங்கு ஓர்

குற்றமில்லை, கொல்லேல் குலவேந்தே ! *

பெண்டிரால் கெடும் இக்குடி தன்னைப்

பேசுகின்றதென் ? தாசரதீ ! * உன்

அண்ட வாணர் உகப்பதே செய்தாய்

அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ.     10.2.3

எஞ்சலில் இலங்கைக் கிறை, எங்கோன் தன்னை

முன் பணிந்து * எங்கள் கண்முகப்பே

நஞ்சு தான் அரக்கர் குடிக்கென்று

நங்கையை, அவன் தம்பியே சொன்னான் *

விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம்

வேரி வார் பொழில் மாமயிலன்ன *

அஞ்சலோதியைக் கொண்டு நடமின்

அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ.     10.2.4

செம்பொன் நீள்முடி எங்களிராவணன்

சீதை யென்பதோர் தெய்வம் கொணர்ந்து *

வம்புலாம் கடிகாவில் சிறையா

வைத்ததே, குற்றமாயிற்றுக் காணீர் *

கும்பனோடு நிகும்பனும் பட்டான்

கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி *

அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது

அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ.     10.2.5

ஓதமா கடலைக் கடந்தேறி

உயர் கொள்மாக் கடிகாவை யிறுத்துக் *

காதல் மக்களும் சுற்றமும் கொன்று

கடியிலங்கை மலங்க எரித்துத் *

தூது வந்த குரங்குக்கே, உங்கள்

தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே *

ஆதர் நின்று படுகின்றது அந்தோ !

அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ.     10.2.6

தாழமின்றி முந்நீரை அஞ்ஞான்று

தகைந்ததே கண்டு * வஞ்சி நுண்மருங்குல்

மாழை மான் மடநோக்கியை விட்டு

வாழகில்லா மதியில் மனத்தானை *

ஏழையை இலங்கைக் கிறை தன்னை

எங்களை யொழியக் கொலையவனைச்

சூழுமா நினை * மாமணிவண்ணா !

சொல்லினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ.              10.2.7

மனங் கொண்டேறும் மண்டோதரி முதலா

அங்கயற் கண்ணினார்கள் இருப்பத் *

தனங்கொள் மென்முலை நோக்கமொழிந்து

தஞ்சமே சில தாபத ரென்று *

புனங்கொள் மென்மயிலைச் சிறைவைத்த

புன்மையாளன் நெஞ்சில் புகவெய்த *

அனங்கனன்ன திண்தோளெம் மிராமற்கு

அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ.     10.2.8

புரங்கள் மூன்றும் ஓர் மாத்திரைப் போதில்

பொங்கெரிக்கு இரை கண்டவன் அம்பில் *

சரங்களே கொடிதாய் அடுகின்ற

சாம்பவான் உடன் நிற்கத் தொழுதோம் *

இரங்கு நீ எமக்கு எந்தை பிரானே !

இலங்கு வெங் கதிரோன் சிறுவா ! *’

குரங்குகட் கரசே ! எம்மைக் கொல்லேல்

கூறினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ.     10.2.9

அங்கு அவ்வானவர்க்கு ஆகுலம் தீர

அணியிலங்கை யழித்தவன் தன்னைப் *

பொங்குமா வலவன் கலிகன்றி

புகன்ற பொங்கத்தம் கொண்டு * இவ்வுலகில்

எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர் !

இம்மையே இடரில்லை * இறந்தால்

தங்குமூர் அண்டமே கண்டு கொண்மின்

சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ.  10.2.10

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.