[highlight_content]

Thirumozhi 10-8

பெரிய திருமொழி

பத்தாம் பத்து

எட்டாம் திருமொழி

காதில் கடிப்பிட்டுக், கலிங்க முடுத்துத் *

தாது நல்ல தண்ணந் துழாய், கொடணிந்து *

போது மறுத்துப், புறமே வந்து நின்றீர் *

ஏதுக்கு இதுவென் ?, இதுவென் ? இதுவென்னோ ?     10.8.1

துவராடை யுடுத்து, ஒரு செண்டு சிலுப்பிக் *

கவராக முடித்துக், கலிக்கச்சுக் கட்டிக் *

சுவரார் கதவின் புறமே வந்து, நின்றீர் *

இவரார் ? இதுவென் ?, இதுவென் ? இதுவென்னோ ?   10.8.2

கருளக் கொடி யொன்றுடையீர் ! தனிப்பாகீர் ! *

உருளச் சகடமது உறக்கில், நிமிர்த்தீர் ! *

உருளைக் கொடு பாடி வந்து, இல்லம் புகுந்தீர் *

இருளத்து இதுவென் ?, இதுவென் ? இதுவென்னோ ?     10.8.3

நாமம் பலவுமுடை, நாரண நம்பீ ! *

தாமத் துளபம், மிக நாறிடுகின்றீர் *

காமனெனப் பாடி வந்து, இல்லம் புகுந்தீர் *

ஏமத்து இதுவென் ?, இதுவென் ? இதுவென்னோ ?     10.8.4

சுற்றும் குழல் தாழச், சுரிகை யணைத்து *

மற்றும் பல, மாமணி பொன் கொடணிந்து *

முற்றம் புகுந்து, முறுவல் செய்து நின்றீர் *

எற்றுக்கு இதுவென் ?, இதுவென் ? இதுவென்னோ ?    10.8.5

ஆனாயரும் ஆநிரையும், அங்கொழியக் *

கூனாயதோர், கொற்ற வில்லொன்று கையேந்திப் *

போனார் இருந்தாரையும், பார்த்துப் புகுந்தீர் *

ஏனோர்கள் முன்னென் ?, இதுவென் ? இதுவென்னோ ?           10.8.6

மல்லே பொருத திரள் தோள் மணவாளீர் ! *

அல்லே யறிந்தோம், நும் மனத்தின் கருத்தைச் *

சொல்லா தொழியீர், சொன்ன போதினால் வாரீர் *

எல்லே இதுவென் ?, இதுவென் ? இதுவென்னோ ?        10.8.7

புக்காடரவம், பிடித்தாட்டும் புனிதீர் ? *

இக்காலங்கள், யாம் உமக்கு ஏதொன்று மல்லோம் *

தக்கார் பலர், தேவிமார் சால வுடையீர் *

எக்கே ! இதுவென் ?, இதுவென் ? இதுவென்னோ ?       10.8.8

ஆடி யசைந்து, ஆய் மடவாரொடு நீ போய்க்,

கூடிக் குரவை பிணை, கோமளப் பிள்ளாய் ! *

தேடித் திருமாமகள், மண்மகள் நிற்ப

ஏடி ! இதுவென் ?, இதுவென் ? இதுவென்னோ ?           10.8.9

அல்லிக் கமலக் கண்ணனை, அங்கு ஓராய்ச்சி *

எல்லிப் பொழுதூடிய, ஊடல் திறத்தைக் *

கல்லின் மலிதோள், கலியன் சொன்ன மாலை *

சொல்லித் துதிப்பாரவர், துக்கமிலரே.      10.8.10

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.