[highlight_content]

Thirumozhi 10-9

பெரிய திருமொழி

பத்தாம் பத்து

ஒன்பதாம் திருமொழி

புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள * இலங்கை

ஒள்ளெரி மண்டியுண்ணப் பணித்த ஊக்கமதனை நினைந்தோ ? *

கள்ளவிழ் கோதை காதலும் எங்கள், காரிகை மாதர் கருத்தும் *

பிள்ளை தன்கையில் கிண்ணமேயொக்கப் பேசுவது எந்தை பிரானே!   10.9.1

 

மன்றில் மலிந்து கூத்து உவந்தாடி

மால்விடை யேழுமடர்த்து * ஆயர்

அன்று நடுங்க ஆனிரை காத்த

ஆண்மை கொலோ ? அறியேன் நான் *

நின்ற பிரானே ! நீள்கடல் வண்ணா !

நீ இவள் தன்னை * நின் கோயில்

முன்றிலெழுந்த முருங்கையில் தேனாம்

முன் கை வளை கவர்ந்தாயே.    10.9.2    திருவேங்கடம் திருப்பதி

ஆர் மலி ஆழி சங்கொடு பற்றி

ஆற்றலை ஆற்றல் மிகுத்துக் *

கார்முகில் வண்ணா ! கஞ்சனை முன்னம்

கடந்த, நின் கடும் திறல் தானோ? *

நேரிழை மாதை நித்திலத் தொத்தை

நெடுங்கடல் அமுது அனையாளை *

ஆரெழில் வண்ணா ! அங்கையில் வட்டாம்

இவளெனக் கருதுகின்றாயே.      10.9.3

மல்கிய தோளும் மானுரி அதளும்

உடையவர் தமக்கும் * ஓர் பாகம்

நல்கிய நலமோ ? நரகனைத் தொலைத்த

கரதலத்து அமைதியின் கருத்தோ ? *

அல்லியங் கோதை அணிநிறம் கொண்டு, வந்து

முன்னே நின்று போகாய் *

சொல்லி யென் ? நம்பி ! இவளை நீ

உங்கள் தொண்டர் கைத்தண் டென்றவாறே.  10.9.4

செரு வழியாத மன்னர்கள் மாளத்

தேர் வலங் கொண்டு * அவர் செல்லும்

அருவழி வானம் அதர்படக் கண்ட

ஆண்மை கொலோ ? அறியேன் நான் *

திருமொழி எங்கள் தேமலர்க் கோதை

சீர்மையை நினைந்திலை அந்தோ ! *

பெருவழி நாவற் கனியினும் எளியள்

இவளெனப் பேசுகின்றாயே.              10.9.5

அரக்கிய ராகம் புல்லென, வில்லால்

அணிமதி ளிலங்கையார் கோனைச்

செருக்கழித்து * அமரர் பணிய முன்னின்ற

சேவகமோ ?, செய்ததின்று *

முருக்கிதழ் வாய்ச்சி முன் கைவெண் சங்கம் கொண்டு

முன்னே நின்று போகாய் *

எருக்கிலைக்காக எரிமழு வோச்சல்

என் செய்வது ? எந்தை பிரானே !                 10.9.6

ஆழியந்திண் தேரரசர் வந்திறைஞ்ச

அலை கடலுலகம் முன்னாண்ட *

பாழியந் தோளோ ராயிரம் வீழப்

படை மழுப் பற்றிய வலியோ ? *

மாழை மென்னோக்கி மணிநிறம் கொண்டு வந்து

முன்னே நின்று போகாய் *

கோழி வெண் முட்டைக்கென் செய்வது ? எந்தாய் !

குறுந்தடி நெடுங்கடல் வண்ணா !                10.9.7

பொருந்தலன் ஆகம் புள் உவந்தேற

வள்ளுகிரால் பிளந்து * அன்று

பெருந்தகைக் கிரங்கி வாலியை முனிந்த

பெருமை கொலோ ? செய்தது இன்று *

பெருந்தடங் கண்ணி சுரும்புறுகோதை

பெருமையை நினைந்திலை * பேசில்

கருங்கடல் வண்ணா ! கவுள் கொண்ட நீராம்

இவளெனக் கருதுகின்றாயே.             10.9.8

நீரழல் வானாய் நெடுநிலம் காலாய்

நின்ற நின் நீர்மையை நினைந்தோ ? *

சீர்கெழு கோதை என்அலது இலளென்று

அன்னதோர் தேற்றன்மை தானோ ? *

பார்கெழு பவ்வத் தாரமுதனைய

பாவையைப் பாவம் செய்தேனுக்கு *

ஆரழலோம்பும் அந்தணன் தோட்டமாக

நின் மனத்து வைத்தாயே.   10.9.9

வேட்டத்தைக் கருதாது அடியிணை வணங்கி

மெய்ம்மை நின்று எம்பெருமானை *

வாள்திறல் தானை மங்கையர் தலைவன்

மானவேல் கலியன் வாயொலிகள் *

தோட்டலர் பைந்தார்ச் சுடர்முடியானைப்

பழமொழியால் பணிந்துரைத்த *

பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச்

சித்தமும் திருவொடு மிகுமே.      10.9.10

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.