[highlight_content]

Thiruvoymozhi 6-3

திருவாய்மொழி

ஆறாம் பத்து

மூன்றாம் திருவாய்மொழி

நல்குரவும் செல்வும், நரகும் சுவர்க்கமுமாய் *

வெல் பகையும் நட்பும், விடமும் அமுதமுமாய்ப் *

பல்வகையும் பரந்த பெருமான், என்னை யாள்வானைச் *

செல்வம் மல்கு குடித், திருவிண்ணகர்க் கண்டேனே.        6.3.1      திருவிண்ணகர்

கண்ட இன்பம் துன்பம், கலக்கங்களும் தேற்றமுமாய்த் *

தண்டமும் தண்மையும், தழலும் நிழலுமாய்க் *

கண்டு கொள்தற் கரிய பெருமான், என்னை யாள்வானூர் *

தெண் திரைப் புனல் சூழ், திருவிண்ணகர் நன்னகரே.        6.3.2      திருவிண்ணகர்

நகரமும் நாடுகளும், ஞானமும் மூடமுமாய் *

நிகரில் சூழ் சுடராய் இருளாய், நிலனாய் விசும்பாய்ச் *

சிகர மாடங்கள் சூழ், திருவிண்ணகர் சேர்ந்த பிரான் *

புகர் கொள் கீர்த்தி யல்லால், இல்லை யாவர்க்கும் புண்ணியமே.       6.3.3                திருவிண்ணகர்

புண்ணியம் பாவம், புணர்ச்சி பிரிவென்றிவையாய் *

எண்ணமாய் மறப்பாய், உண்மையாய் இன்மையாய் அல்லனாய்த் *

திண்ண மாடங்கள் சூழ், திருவிண்ணகர் சேர்ந்த பிரான்

கண்ணனின்னருளே, கண்டு கொண்மின்கள் கைதவமே.     6.3.4      திருவிண்ணகர்

கைதவம் செம்மை, கருமை வெளுமையுமாய் *

மெய் பொய் இளமை முதுமை, புதுமை பழமையுமாய்ச் *

செய்த திண் மதிள் சூழ், திருவிண்ணகர் சேர்ந்த பிரான் *

பெய்த காவு கண்டீர், பெருந் தேவுடை மூவுலகே.     6.3.5      திருவிண்ணகர்

மூவுலகங்களுமாய் அல்லனாய், உகப்பாய் முனிவாய்ப் *

பூவில் வாழ் மகளாய்த், தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய் *

தேவர் மேவித் தொழும், திருவிண்ணகர் சேர்ந்த பிரான் *

பாவியேன் மனத்தே உறைகின்ற, பரஞ்சுடரே.    6.3.6      திருவிண்ணகர்

பரஞ்சுடருடம்பாய், அழுக்குப் பதித்த வுடம்பாய்க் *

கரந்தும் தோன்றியும் நின்றும், கைதவங்கள் செய்தும் * விண்ணோர்

சிரங்களால் வணங்கும், திருவிண்ணகர் சேர்ந்த பிரான் *

வரங் கொள் பாதமல்லால், இல்லை யாவர்க்கும் வன் சரணே.    6.3.7      திருவிண்ணகர்

வன்சரண் சுரர்க்காய், அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த் *

தன் சரண் நிழற் கீழ், உலகம் வைத்தும் வையாதும் *

தென் சரண் திசைக்குத், திருவிண்ணகர் சேர்ந்த பிரான் *

என் சரண் என் கண்ணன், என்னையாளுடை என்னப்பனே.           6.3.8      திருவிண்ணகர்

என்னப்பன் எனக்காயிகுளாய், என்னைப் பெற்றவளாய்ப் *

பொன்னப்பன் மணியப்பன், முத்தப்பன் என்னப்பனுமாய் *

மின்னப் பொன்மதிள் சூழ், திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் *

தன்னொப்பா ரில்லப்பன், தந்தனன் தனதாள் நிழலே.        6.3.9      திருவிண்ணகர்

நிழல் வெய்யில் சிறுமை பெருமை, குறுமை நெடுமையுமாய்ச் *

சுழல்வன நிற்பன, மற்றுமாய் அவை யல்லனுமாய் *

மழலை வாய் வண்டு வாழ், திருவிண்ணகர் மன்னு பிரான்

கழல்களன்றி * மற்றோர் களைகணிலம் காண்மின்களே.      6.3.10    திருவிண்ணகர்

காண்மின்கள் உலகீர் ! என்று, கண்முகப்பே நிமிர்ந்த *

தாளிணையன் தன்னைக், குருகூர்ச் சடகோபன் சொன்ன *

ஆணையாயிரத்துத், திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார் *

கோணையின்றி விண்ணோர்க்கு, என்றுமாவர் குரவர்களே.        6.3.11    திருவிண்ணகர்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.