[highlight_content]

Thiruvoymozhi 6-5

திருவாய்மொழி

ஆறாம் பத்து

ஐந்தாம் திருவாய்மொழி

துவளில் மாமணிமாடமோங்கு தொலைவில்லிமங்கலம் தொழும்

இவளை * நீர்இனி அன்னைமீர் ! உமக்காசை யில்லை விடுமினோ *

தவள வொண் சங்கு சக்கர மென்றும் தாமரைத் தடங்கணென்றும் *

குவளை யொண் மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.    6.5.1                தொலைவில்லிமங்கலம்

குமுறுமோசை விழவொலித் தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு *

அமுதமென் மொழியாளை நீர் உமக்கு ஆசையின்றி யகற்றினீர் *

திமிர் கொண்டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவதேவபிரானென்றே *

நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக்கொசிந்து கரையுமே.           6.5.2                தொலைவில்லிமங்கலம்

கரை கொள் பைம்பொழில் தண்பணைத், தொலை

வில்லிமங்கலம் கொண்டு புக்கு *

உரைகொளின் மொழியாளை, நீர் உமக்காசையின்றி யகற்றினீர் *

திரைகொள் பெளவத்துச் சேர்ந்ததும், திசைஞாலம் தாவியளந்ததும் *

நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர்மல்க நிற்குமே.    6.5.3                தொலைவில்லிமங்கலம்

நிற்கும் நான்மறை வாணர் வாழ் தொலைவில்லிமங்கலம் கண்ட பின் *

அற்கமொன்றும் அறவுறாள் மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர் !*

கற்கும் கல்வியெல்லாம் கருங்கடல் வண்ணன், கண்ணபிரானென்றே *

ஒற்க மொன்றுமிலள் உகந்துகந்து உள் மகிழ்ந்து குழையுமே.     6.5.4                தொலைவில்லிமங்கலம்

குழையும் வாள் முகத் தேழையைத்

தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு *

இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண் பிரான்

இருந்தமை காட்டினீர் *

மழை பெய்தா லொக்கும் கண்ண நீரினொடு

அன்று தொட்டும் மையாந்து இவள் *

நுழையும்சிந்தையள்அன்னைமீர் ! தொழும்

அத்திசை யுற்று நோக்கியே.     6.5.5      தொலைவில்லிமங்கலம்

நோக்கும் பக்கமெல்லாம், கரும்பொடு செந்நெலோங்கு செந்தாமரை *

வாய்க்கும் தண்பொருநல் வடகரை வண் தொலைவில்லிமங்கலம் *

நோக்குமேல் அத்திசையல்லால் மறுநோக்கிலள், வைகல் நாள்தொறும்*

வாய்க்கொள் வாசகமும் மணிவண்ணன் நாமமே, இவள்அன்னைமீர்!    6.5.6    தொலைவில்லிமங்கலம்

அன்னைமீர் ! அணி மாமயில், சிறுமானிவள் நம்மைக் கை வலிந்து *

என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலைவில்லிமங்கல மென்றல்லால்*

முன்னம்நோற்றவிதிகொலோ? முகில்வண்ணன் மாயங்கொலோ?*அவன்

சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே.    6.5.7      தொலைவில்லிமங்கலம்

திருந்து வேதமும் வேள்வியும் திருமா மகளிரும் தாம் * மலிந்

திருந்து வாழ் பொருநல் வடகரை, வண் தொலைவில்லி மங்கலம் *

கருந்தடங்கண்ணி கைதொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும் *

இருந்திருந்து அரவிந்த லோசன ! என்றென்றே நைந்திரங்குமே.        6.5.8       தொலைவில்லிமங்கலம்

இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ இவள் கண்ணநீர்கள் அலமர*

மரங்களும் இரங்கும் வகை மணிவண்ணவோ! என்று கூவுமால் *

துரங்கம் வாய் பிளந்தானுறை தொலைவில்லிமங்கலமென்று * தன்

கரங்கள் கூப்பித் தொழும், அவ்வூர்த்திருநாமம் கற்றதற்பின்னையே.   6.5.9     தொலைவில்லிமங்கலம்

பின்னை கொல் ? நிலமாமகள் கொல் ?

திருமகள் கொல் ? பிறந்திட்டாள் *

என்ன மாயங்கொலோ? இவள் நெடுமாலென்றே நின்று கூவுமால் *

முன்னி வந்தவன் நின்றிருந்துறையும் தொலைவில்லி மங்கலம்

சென்னியால் வணங்கும்* அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.  6.5.10      தொலைவில்லிமங்கலம்

சிந்தையாலும் சொல்லாலும்

செய்கையினாலும் தேவபிரானையே *

தந்தை தாயென்றடைந்த வண்குருகூரவர் சடகோபன் *

முந்தையாயிரத்துள், இவை தொலைவில்லிமங்கலத்தைச் சொன்ன *

செந்தமிழ்ப் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.         6.5.11          தொலைவில்லிமங்கலம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.