[highlight_content]

Thiruvoymozhi 6-7

திருவாய்மொழி

ஆறாம் பத்து

ஏழாம் திருவாய்மொழி

உண்ணும் சோறு பருகு நீர், தின்னும் வெற்றிலையு மெல்லாம் *

கண்ணன் எம்பெருமான், என்றென்றே கண்கள் நீர்மல்கி * மண்ணினுள் அவன் சீர், வளம் மிக்கவனூர் வினவித் *

திண்ணம் என் இளமான் புகுமூர், திருக்கோளூரே.    6.7.1      திருக்கோளூர்

ஊரும் நாடும் உலகமும், தன்னைப் போல் * அவனுடைய

பேரும் தார்களுமே பிதற்றக், கற்பு வானிடறிச் *

சேரும் நல் வளஞ்சேர், பழனத் திருக்கோளூர்க்கே *

போருங் கொல் ? உரையீர் ! கொடியேன் கொடி பூவைகளே !    6.7.2      திருக்கோளூர்

பூவை பைங்கிளிகள், பந்து தூதை பூம்புட்டில்கள் *

யாவையும், திருமால் திருநாமங்களே கூவியெழும் * என்

பாவை, போய் இனித் தண் பழனத் திருக்கோளூர்க்கே *

கோவை வாய் துடிப்ப, மழைக் கண்ணொடு என் செய்யுங்கொலோ?      6.7.3                திருக்கோளூர்

கொல்லை என்பர் கொலோ ? குணம் மிக்கன ளென்பர் கொலோ ? *

சில்லை வாய்ப் பெண்டுகள், அயற் சேரி யுள்ளாரும் எல்லே ! *

செல்வம் மல்கி அவன் கிடந்த, திருக்கோளூர்க்கே *

மெல்லிடை நுடங்க, இளமான் செல்ல மேவினளே.  6.7.4      திருக்கோளூர்

மேவி நைந்து நைந்து, விளையாடலுறாள், * என் சிறுத்

தேவி போய் இனித் தன் திருமால், திருக்கோளுரில் *

பூவியல் பொழிலும் தடமும், அவன் கோயிலும் கண்டு *

ஆவியுள் குளிர, எங்ஙனே உகக்குங் கொல் இன்றே?          6.7.5      திருக்கோளூர்

இன்று எனக்குதவாதகன்ற, இளமான் இனிப் போய்த் *

தென்திசைத் திலதமனைய, திருக்கோளூர்க்கே சென்று *

தன் திருமால் திருக்கண்ணும், செவ்வாயும் கண்டு *

நின்று நின்று நையும், நெடுங் கண்கள் பனி மல்கவே.      6.7.6      திருக்கோளூர்

மல்குநீர்க் கண்ணொடு, மையலுற்ற மனத்தனளாய் *

அல்லும் நன்பகலும் நெடுமாலென்றழைத்து, இனிப் போய்ச் *

செல்வம் மல்கி அவன் கிடந்த, திருக்கோளூர்க்கே *

ஒல்கி யொல்கி நடந்து, எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே ?    6.7.7      திருக்கோளூர்

ஒசிந்த நுண்ணிடை மேல் கையை வைத்து நொந்து நொந்து *

கசிந்த நெஞ்சினளாய்க், கண்ணநீர் துளும்பச் செல்லுங்கொல் ? *

ஒசிந்த ஒண் மலராள் கொழுநன், திருக்கோளூர்க்கே *

கசிந்த நெஞ்சினளாய், எம்மை நீத்த எம் காரிகையே.          6.7.8      திருக்கோளூர்

காரியம் நல்லனகளவை காணில், என் கண்ணனுக்கென்று *

ஈரியா யிருப்பாள், இதெல்லாம் கிடக்க இனிப் போய்ச்

சேரி பல் பழி தூயிரைப்பத், திருக்கோளூர்க்கே *

நேரிழை நடந்தாள், எம்மை யொன்றும் நினைத்திலளே.       6.7.9      திருக்கோளூர்

நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங்கணிளமான் இனிப்போய் *

அனைத்துலகு முடைய, அரவிந்த லோசனனைத் *

தினைத் தனையும் விடாள், அவன்சேர் திருக்கோளூர்க்கே *

மனைக்கு வான் பழியும் நினையாள், செல்ல வைத்தனளே.      6.7.10    திருக்கோளூர்

வைத்த மாநிதியாம், மதுசூதனையே யலற்றிக் *

கொத்தலர் பொழில் சூழ், குருகூர்ச் சடகோபன் சொன்ன *

பத்து நூற்றுள் இப்பத்து, அவன் சேர் திருக்கோளூர்க்கே *

சித்தம் வைத்துரைப்பார், திகழ் பொன்னுலகாள்வாரே.        6.7.11    திருக்கோளூர்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.