[highlight_content]

Thiruvoymozhi 5-1

திருவாய்மொழி

ஐந்தாம் பத்து

முதல் திருவாய்மொழி

கையார் சக்கரத்து என் கருமாணிக்கமே! என்றென்று *

பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே யாடி *

மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பாரார் ? *

ஐயோ! கண்ணபிரான் ! அறையோ! இனிப் போனாலே.      5.1.1

போனாய்! மாமருதின் நடுவே என் பொல்லா மணியே! *

தேனே! இன்னமுதே! என்றென்றே சில கூத்துச் சொல்லத் *

தானேல் எம்பெருமான் ! அவன் என்னாகி யொழிந்தான் *

வானே ! மாநிலமே ! மற்று முற்றும் என்னுள்ளனவே.    5.1.2

உள்ளன மற்றுளவாப் புறமே சில மாயம் சொல்லி *

வள்ளல் ! மணிவண்ணனே! என்றென்றே, உன்னையும் வஞ்சிக்கும் *

கன்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டுய்ந் தொழிந்தேன் *

வெள்ளத்தணைக்கிடந்தாய் ! இனி உன்னைவிட்டு என்கொள்வனே?       5.1.3

என்கொள்வன்? உன்னைவிட்டென்னும் வாசகங்கள் சொல்லியும்*

வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து *

நின்கண் நெருங்க வைத்தே எனதாவியை நீக்ககில்லேன் *

என் கண் மலினமறுத்து என்னைக் கூவியருளாய் கண்ணனே !           5.1.4

கண்ணபிரானை, விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை *

நண்ணியும் நண்ண கில்லேன், நடுவே யோருடம்பி லிட்டு *

திண்ண மழுந்தக் கட்டிப், பல செய்வினை வன் கயிற்றால் *

புண்ணை மறைய வரிந்து, என்னைப் போர வைத்தாய் புறமே.    5.1.5

புறமறக் கட்டிக் கொண்டு இருவல் வினையார் குமைக்கும் *

முறைமுறை யாக்கை புகலொழியக் கண்டு கொண்டொழிந்தேன் *

நிறமுடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண் *

அறமுயலாழி யங்கைக் கருமேனி யம்மான் தன்னையே.          5.1.6

அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் ? யான் ஆர் ?*

எம்மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் *

கைம்மா துன்பொழித்தாய் ! என்று கை தலை பூசலிட்டே *

மெய்ம்மாலா யொழிந்தேன் எம்பிரானும் என் மேலானே.      5.1.7

மேலாத் தேவர்களும், நிலத் தேவரும் மேவித் தொழும் *

மாலார் வந்து இன நாள், அடியேன் மனத்தே மன்னினார் *

சேலேய் கண்ணியரும், பெருஞ் செல்வமும் நன் மக்களும் *

மேலாத் தாய் தந்தையும் அவரே, இனி யாவாரே.     5.1.8

ஆவாரார் துணை ? என்று, அலைநீர்க் கடலுளழுந்தும்

நாவாய் போல் * பிறவிக் கடலுள், நின்று நான் துளங்கத் *

தேவார் கோலத்தொடும், திருச்சக்கரம் சங்கினொடும் *

ஆவா ! என்று அருள் செய்து, அடியேனொடும் ஆனானே.   5.1.9

ஆனா னாளுடையா னென்று அஃதே கொண்டு உகந்து வந்து *

தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான் *

மீனாய் ஆமையுமாய் நரசிங்கமுமாய்க் குறளாய்க் *

கானாரேனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார் வண்ணனே.          5.1.10

கார்வண்ணன் கண்ணபிரான் கமலத் தடங்கண்ணன் தன்னை *

ஏர்வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன *

சீர்வண்ண வொண் தமிழ்கள் இவையாயிரத்துள் இப்பத்தும் *

ஆர்வண்ணத்தால் உரைப்பார் அடிக்கீழ் புகுவார் பொலிந்தே.      5.1.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.