[highlight_content]

Thiruvoymozhi 5-7

திருவாய்மொழி

ஐந்தாம் பத்து

ஏழாம் திருவாய்மொழி

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும்

இனி உன்னை விட்டு * ஒன்றும்

ஆற்ற கிற்கின்றிலேன், அரவினணை யம்மானே ! *

சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவரமங்கலநகர் *

வீற்றிருந்த எந்தாய் ! உனக்கு மிகையல்லேனங்கே.         5.7.1      சிரீவரமங்கை

அங்குற்றேனல்லேன் இங்குற்றேனல்லேன், உன்னைக்

காணுமவாவில் வீழ்ந்து * நான்

எங்குற்றேனுமல்லேன், இலங்கை செற்ற அம்மானே ! *

திங்கள் சேர் மணிமாட நீடு, சிரீவரமங்கலநகருறை *

சங்கு சக்கரத்தாய் ! தமியேனுக் கருளாயே.    5.7.2      சிரீவரமங்கை

கருளப் புட்கொடி சக்கரப்படை வானநாட ! என்கார்முகில்வண்ணா !*

பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் ! *

தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ் சிரீவரமங்கலநகர்க்கு *

அருள் செய்து அங்கிருந்தாய்! அறியேன் ஒரு கைம்மாறே.        5.7.3      சிரீவரமங்கை

மாறு சேர் படை நூற்றுவர் மங்க,

ஓரைவர்க்கா யன்று மாயப் போர் பண்ணி *

நீறு செய்த எந்தாய் !, நிலங் கீண்ட அம்மானே ! *

தேறு ஞானத்தர் வேத வேள்வியறாச், சிரீவரமங்கல நகர் *

ஏறி வீற்றிருந்தாய் ! உன்னை எங்கெய்தக் கூவுவனே ?    5.7.4      சிரீவரமங்கை

எய்தக் கூவுதலாவதே எனக்கு? எவ்வதெவ்வத் துளாயுமாய் நின்று *

கைதவங்கள் செய்யும் கருமேனி யம்மானே ! *

செய்த வேள்வியர் வையத் தேவரறாச், சிரீவரமங்கல நகர் *

கை தொழ இருந்தாய், அது நானும் கண்டேனே.         5.7.5      சிரீவரமங்கை

ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே ! கண்ணா ! *

என்றும் என்னை யாளுடை

வான நாயகனே!, மணி மாணிக்கச் சுடரே ! *

தேனமாம் பொழில் தண், சிரீவர மங்கலத்தவர் கைதொழ வுறை *

வான மாமலையே! அடியேன் தொழ வந்தருளே.      5.7.6      சிரீவரமங்கை

வந்தருளி என்னெஞ்சிடங் கொண்ட, வானவர்

கொழுந்தே ! * உலகுக்கோர்

முந்தைத் தாய் தந்தையே ! முழு வேழுலகு முண்டாய் ! *

செந்தொழிலவர் வேத வேள்வியறாச், சிரீவரமங்கலநகர் *

அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே.   5.7.7      சிரீவரமங்கை

அகற்ற நீ வைத்த மாயவல் லைம்புலன்களா மவை நன்கறிந்தனன் *

அகற்றி என்னையும் நீ, அருஞ் சேற்றில் வீழ்த்தி கண்டாய் *

பகற்கதிர் மணிமாட நீடு, சிரீவரமங்கை வாணனே ! * என்றும்

புகற்கரிய எந்தாய் ! புள்ளின் வாய் பிளந்தானே !     5.7.8      சிரீவரமங்கை

புள்ளின் வாய் பிளந்தாய் ! மருதிடை போயினாய் !

எருதேழடர்த்த * என்

கள்ள மாயவனே ! கரு மாணிக்கச் சுடரே ! *

தெள்ளியார் திருநான் மறைகள் வல்லார் மலி, தண் சிரீவரமங்கை

யுள் இருந்த எந்தாய் ! * அருளாய் உய்யுமாறு எனக்கே.    5.7.9      சிரீவரமங்கை

ஆறெனக்கு நின் பாதமே, சரணாகத் தந்தொழிந்தாய் *

உனக்கு ஓர் கைம்

மாறு நானொன்றிலேன், எனதாவியும் உனதே *

சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி, தண் சிரீவரமங்கை *

நாறு பூந்தண் துழாய் முடியாய் ! தெய்வ நாயகனே !     5.7.10    சிரீவரமங்கை

தெய்வ நாயகன் நாரணன், திரிவிக்கிரம னடியிணை மிசைக் *

கொய் கொள் பூம்பொழில் சூழ், குருகூர்ச் சடகோபன் *

செய்த ஆயிரத்துள்ளிவை, தண் சிரீவரமங்கை மேய பத்துடன் *

வைகல் பாட வல்லார், வானோர்க்கு ஆராவமுதே.         5.7.11    சிரீவரமங்கை

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.