[highlight_content]

Thiruvoymozhi 5-8

திருவாய்மொழி

ஐந்தாம் பத்து

எட்டாம் திருவாய்மொழி

ஆராவமுதே !, அடியேனுடலம் நின்பா லன்பாயே *

நீராயலைந்து கரைய, உருக்குகின்ற நெடுமாலே ! *

சீரார் செந்நெல் கவரி வீசும், செழுநீர்த் திருக்குடந்தை *

ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் !, கண்டேன் எம்மானே !    5.8.1      திருக்குடந்தை (கும்பகோணம்)

எம்மானே! என் வெள்ளை மூர்த்தி!, என்னை யாள்வானே ! *

எம்மா வுருவும் வேண்டு மாற்றால் ஆவாய் ! எழிலேறே ! *

செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும், திருக்குடந்தை *

அம்மா மலர்க் கண் வளர்கின்றானே !, என் நான் செய்கேனே ?    5.8.2      திருக்குடந்தை (கும்பகோணம்)

என் நான் செய்கேன் ? யாரே களைகண்? என்னைஎன்செய்கின்றாய்?*

உன்னாலல்லால் யாவராலும், ஒன்றும் குறை வேண்டேன் *

கன்னார் மதிள் சூழ் குடந்தை கிடந்தாய்! அடியேனரு வாணாள் *

சென்னாள் எந்நாள்? அந்நாள் உனதாள் பிடித்தே செலக் காணே.         5.8.3                திருக்குடந்தை (கும்பகோணம்)

செலக் காண்கிற்பார் காணுமளவும், செல்லும் கீர்த்தியாய் ! *

உலப்பிலானே !, எல்லா உலகுமுடைய ஒரு மூர்த்தி ! *

நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்

அலப்பாய் * ஆகாசத்தை நோக்கி அழுவன், தொழுவனே.   5.8.4      திருக்குடந்தை (கும்பகோணம்)

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன், பாடி யலற்றுவன் *

தழுவல் வினையால் பக்கம் நோக்கி, நாணிக் கவிழ்ந்திருப்பன் *

செழுவொண் பழனக் குடந்தைக் கிடந்தாய் செந்தாமரைக் கண்ணா ! *

தொழுவனேனை, உனதாள் சேரும் வகையே சூழ் கண்டாய்.       5.8.5      திருக்குடந்தை (கும்பகோணம்)

சூழ்கண்டாய் என்தொல்லைவினையை யறுத்து, உன்னடி சேரும்

ஊழ்கண்டிருந்தே * தூராக்குழி தூர்த்து எனைநாள் அகன்றிருப்பன் ?*

வாழ்தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்!, வானோர் கோமானே ! *

யாழினிசையே ! அமுதே ! அறிவின் பயனே ! அரியேறே !       5.8.6      திருக்குடந்தை (கும்பகோணம்)

அரியேறே ! என்னம் பொற்சுடரே ! செங்கண் கருமுகிலே ! *

எரியேய் பவளக் குன்றே ! நால் தோளெந்தாய் ! உனதருளே *

பிரியா அடிமை என்னைக் கொண்டாய் ! குடந்தைத் திருமாலே ! *

தரியேனினி உன் சரணம் தந்து, என் சன்மம் களையாயே.          5.8.7      திருக்குடந்தை (கும்பகோணம்)

களைவாய்துன்பம் களையாதொழிவாய், களைகண் மற்றிலேன் *

வளைவாய் நேமிப் படையாய் ! குடந்தைக் கிடந்த மாமாயா ! *

தளரா வுடலம் எனதாவி, சரிந்து போம் போது *

இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப் போத, இசை நீயே.      5.8.8      திருக்குடந்தை (கும்பகோணம்)

இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்துமம்மானே ! *

அசைவில் அமரர் தலைவர் தலைவா!, ஆதிப் பெரு மூர்த்தி ! *

திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும், திருக்குடந்தை *

அசைவில் உலகம் பரவக் கிடந்தாய் !, காண வாராயே.      5.8.9      திருக்குடந்தை (கும்பகோணம்)

வாரா அருவாய் வருமென் மாயா ! மாயா மூர்த்தியாய் ! *

ஆராவமுதாய் அடியேனாவி அகமே தித்திப்பாய் *

தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் ! திருக்குடந்தை

ஊரா ! * உனக்காட் பட்டும், அடியேன் இன்னு முழல்வேனோ?   5.8.10    திருக்குடந்தை (கும்பகோணம்)

உழலையென்பின் பேய்ச்சிமுலையூடு அவளையுயிருண்டான் *

கழல்களவையே சரணாகக் கொண்ட, குருகூர்ச் சடகோபன் *

குழலின் மலியச் சொன்ன, ஓராயிரத்துள் இப்பத்தும் *

மழலை தீர வல்லார், காமர் மானேய் நோக்கியர்க்கே.       5.8.11    திருக்குடந்தை (கும்பகோணம்)

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.