[highlight_content]

Thiruvoymozhi 7-3

திருவாய்மொழி

ஏழாம் பத்து

மூன்றாம் திருவாய்மொழி

வெள்ளைச் சுரிசங்கொடாழி யேந்தித்

தாமரைக் கண்ணன் என்னெஞ்சினூடே *

புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர்

என் சொல்லிச் சொல்லுகேன் ? அன்னைமீர்காள் !*

வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த

வேத வொலியும் விழா வொலியும் *

பிள்ளைக் குழா விளையாட்டொலியும் அறாத்

திருப்பேரையில் சேர்வன் நானே.  7.3.1      திருப்பேரை

நானக் கருங்குழல் தோழிமீர்காள் !

அன்னையர்காள் ! அயற்சேரியீர்காள் ! *

நான் இத்தனி நெஞ்சம் காக்க மாட்டேன்

என் வசமன்றிது இராப் பகல் போய் *

தேன் மொய்த்த பூம்பொழில் தண்பணை சூழ்

தென் திருப்பேரையில் வீற்றிருந்த *

வானப் பிரான் மணிவண்ணன் கண்ணன்

செங்கனி வாயின் திறத்ததுவே.     7.3.2      திருப்பேரை

செங்கனி வாயின் திறத்ததாயும்

செஞ்சுடர் நீள் முடித் தாழ்ந்ததாயும் *

சங்கொடு சக்கரம் கண்டுகந்தும்

தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும் *

திங்களும் நாளும் விழாவறாத

தென் திருப்பேரையில் வீற்றிருந்த *

நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ !

நாணும் நிறையும் இழந்ததுவே.      7.3.3      திருப்பேரை

இழந்த எம்மாமை திறத்துப் போன

என் நெஞ்சினாரும் அங்கே யொழிந்தார் *

உழந்து இனியாரைக் கொண்டு என் உசாகோ?

ஓதக் கடலொலி போல * எங்கும்

எழுந்த நல் வேதத்தொலி நின்றோங்கு

தென் திருப்பேரையில் வீற்றிருந்த *

முழங்கு சங்கக் கையன் மாயத் தாழ்ந்தேன்

அன்னையர்காள் ! என்னை என் முனிந்தே ?    7.3.4      திருப்பேரை

முனிந்து சகடமுதைத்து மாயப் பேய்

முலையுண்டு மருதிடை போய்க்*

கனிந்த விளவுக்குக் கன்றெறிந்த

கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன் *

முனிந்து இனியென் செய்தீர் ? அன்னைமீர்காள் !

முன்னி அவன் வந்து வீற்றிருந்த *

கனிந்த பொழில் திருப்பேரையிற்கே

காலம் பெற என்னைக் காட்டுமினே.         7.3.5      திருப்பேரை

காலம் பெற என்னைக் காட்டுமின்கள்

காதல் கடலின் மிகப் பெரிதால் *

நீலமுகில் வண்ணத் தெம்பெருமான்

நிற்கும் முன்னே வந்து என் கைக்கும் எய்தான் *

ஞாலத்து அவன் வந்து வீற்றிருந்த

நான்மறை யாளரும் வேள்வி யோவா *

கோலச் செந்நெற்கள் கவரி வீசும்

கூடு புனல் திருப்பேரையிற்கே.      7.3.6      திருப்பேரை

பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை

செற்ற பிரான், வந்து வீற்றிருந்த *

பேரையிற்கே புக்கு என்னெஞ்சம் நாடிப்

பேர்த்து வரவெங்கும் காண மாட்டேன் *

ஆரை இனி இங்குடையம் ? தோழி !

என்னெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை *

ஆரை இனிக் கொண்டு என் சாதிக்கின்றது ?

என்னெஞ்சம் கண்டதுவே கண்டேனே.    7.3.7      திருப்பேரை

கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக்

கார்க்கடல் வண்ணனோடு என்திறத்துக்

கொண்டு * அலர் தூற்றிற்றது முதலாக்

கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ ! *

மண்திணி ஞாலமும் ஏழ்கடலும்

நீள்விசும்பும் கழியப் பெரிதால் *

தெண்திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த

தென் திருப்பேரையில் சேர்வன் சென்றே.           7.3.8      திருப்பேரை

சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள் !

அன்னையர்காள் ! என்னைத் தேற்ற வேண்டா *

நீர்களுரைக்கின்றது என் இதற்கு ?

நெஞ்சும் நிறைவும் எனக்கிங்கில்லை *

கார் வண்ணன் கார்க்கடல் ஞாலமுண்ட

கண்ணபிரான் வந்து வீற்றிருந்த *

ஏர்வள வொண் கழனிப் பழனத்

தென் திருப்பேரையின் மாநகரே.   7.3.9      திருப்பேரை

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்

நானெனக்கில்லை என்தோழிமீர்காள்! *

சிகர மணி நெடு மாட நீடு

தென் திருப்பேரையில் வீற்றிருந்த *

மகர நெடுங் குழைக் காதன் மாயன்

நூற்றுவரை அன்று மங்க நூற்ற *

நிகரில் முகில் வண்ணன் நேமியான், என்

நெஞ்சம் கவர்ந்து எனையூழியானே ?      7.3.10    திருப்பேரை

ஊழி தோறூழி உருவும் பேரும்

செய்கையும், வேறவன் வையம் காக்கும் *

ஆழிநீர் வண்ணனை அச்சுதனை

அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன *

கேழிலந்தாதி ஓராயிரத்துள் இவை

திருப் பேரையில் மேய பத்தும் *

ஆழியங் கையனை ஏத்த வல்லாரவர்

அடிமைத் திறத்தாழியாரே.  7.3.11    திருப்பேரை

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.