[highlight_content]

Thiruvoymozhi 7-7

திருவாய்மொழி

ஏழாம் பத்து

ஏழாம் திருவாய்மொழி

ஏழையராவி யுண்ணும் இணைக் கூற்றங் கொலோ ? அறியேன் *

ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ? அறியேன் *

சூழவும் தாமரை நாண்மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் *

தோழியர்காள் ! அன்னைமீர் ! என் செய்கேன் துயராட்டியேனே.         7.7.1

ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர் ! என்னை நீர் நலிந்து என் ?

மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ ? கொழுந்தோ ? அறியேன் *

ஈட்டிய வெண்ணெ யுண்டான் திருமூக்கு, எனதாவியுள்ளே *

மாட்டிய வல்விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே.       7.7.2

வாலியதோர் கனி கொல் ? வினையாட்டியேன் வல்வினை கொல் ? *

கோலந்திரள் பவளக் கொழுந் துண்டங் கொலோ? அறியேன் *

நீல நெடு முகில் போல் திருமேனி யம்மான் தொண்டை வாய் *

ஏலும் திசையுளெல்லாம் வந்து தோன்றும், என்னின்னுயிர்க்கே.           7.7.3

இன்னுயிர்க்கு ஏழையர்மேல் வளையும் இணைநீலவிற்கொல் ? *

மன்னிய சீர் மதனன், கருப்புச் சிலை கொல் ? * மதனன்

தன்னுயிர்த் தாதை, கண்ண பெருமான் புருவமவையே *

என்னுயிர் மேலனவாய், அடுகின்றன வென்று நின்றே.      7.7.4

என்று நின்றே திகழும் செய்யவீன்சுடர் வெண்மின்னுக்கொல் ? *

அன்றி என்னாவி யடும் அணிமுத்தங் கொலோ? அறியேன் *

குன்ற மெடுத்த பிரான் முறுவல் எனதாவி யடும் *

ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர் ! எனக்கு உய்விடமே.      7.7.5

உய்விடம் ஏழையர்க்கும், அசுரர்க்கும் அரக்கர்கட்கும் *

எவ்விடம் ? என்றிலங்கி, மகரம் தழைக்கும் தளிர் கொல் ? *

பைவிடப் பாம்பணையான், திருக்குண்டலக் காதுகளே *

கைவிடலொன்றுமின்றி, அடுகின்றன காண்மின்களே.       7.7.6

காண்மின்கள் அன்னையர்காள்! என்றுகாட்டும் வகையறியேன் *

நாள் மன்னு வெண்திங்கள் கொல்? நயந்தார்கட்கு நச்சிலை கொல் ?*

சேண் மன்னு நால் தடந்தோள் பெருமான் தன் திருநுதலே *

கோள் மன்னி ஆவியடும் கொடியேனுயிர் கோளிழைத்தே.       7.7.7

கோளிழைத் தாமரையும், கொடியும் பவளமும் வில்லும் *

கோளிழைத் தண் முத்தமும், தளிரும் குளிர்வான் பிறையும் *

கோளிழையா வுடைய, கொழுஞ் சோதி வட்டங்கொல் ? * கண்ணன்

கோளிழை வாண்முகமாய்க், கொடியேனுயிர் கொள்கின்றதே.        7.7.8

கொள்கின்ற கோளிருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ்சுருளின் * உள்கொண்ட

நீல நன்னூல் தழை கொல்? அன்று மாயன் குழல் *

விள்கின்ற பூந்தண் துழாய், விரைநாற வந்து என்னுயிரை *

கள்கின்றவாறு அறியீர், அன்னைமீர் ! கழறா நிற்றிரே.      7.7.9

நிற்றி முற்றத்துளென்று, நெரித்த கையராய் * என்னை நீர்

சுற்றியும் சூழ்ந்தும் வைதிர், சுடர்ச் சோதி மணிநிறமாய் *

முற்ற இம் மூவுலகும் விரிகின்ற, சுடர் முடிக்கே *

ஒற்றுமை கொண்டதுஉள்ளம், அன்னைமீர்! நசையென் நுங்கட்கே?       7.7.10

கட்கரிய பிரமன் சிவன், இந்திரனென்று இவர்க்கும் *

கட்கரிய கண்ணனைக், குருகூர்ச் சடகோபன் சொன்ன *

உட்குடை யாயிரத்துள், இவையுமொரு பத்தும் வல்லார் *

உட்குடை வானவரோடு, உடனாய் என்றும் மாயாரே.       7.7.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.