[highlight_content]

Thiruvoymozhi 7-8

திருவாய்மொழி

ஏழாம் பத்து

எட்டாம் திருவாய்மொழி

மாயா ! வாமனனே !, மதுசூதா ! நீயருளாய் *

தீயாய் நீராய் நிலனாய், விசும்பாய்க் காலாய்த் *

தாயாய்த் தந்தையாய், மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் *

நீயாய் நீ நின்றவாறு, இவையென்ன நியாயங்களே.  7.8.1

அங்கண் மலர்த் தண் துழாய் முடி, அச்சுதனே ! அருளாய் *

திங்களும் ஞாயிறுமாய்ச், செழும்பல் சுடராய் இருளாய்ப் *

பொங்கு பொழி மழையாய்ப், புகழாய்ப் பழியாய்ப் பின்னும் நீ *

வெங்கண் வெங்கூற்றமுமாய், இவையென்ன விசித்திரமே !          7.8.2

சித்திரத் தேர்வலவா! திருச்சக்கரத்தாய் ! அருளாய் *

எத்தனை யோருகமும் அவையாய், அவற்றுள் இயலும் *

ஒத்த வொண்பல் பொருள்கள், உலப்பில்லனவாய் வியவாய் *

வித்தகத்தாய் நிற்றி நீ, இவையென்ன விடமங்களே !        7.8.3

கள்ளவிழ் தாமரைக்கண், கண்ணனே! எனக்கு ஒன்றுஅருளாய் *

உள்ளதும் இல்லதுமாய், உலப்பில்லனவாய் வியவாய் *

வெள்ளத் தடங்கடலுள், விட நாகணை மேல் மருவி *

உள்ளப் பல் யோகு செய்தி, இவையென்ன உபாயங்களே !             7.8.4

பாசங்கள் நீக்கி, என்னை உனக்கே அறக் கொண்டிட்டு * நீ

வாச மலர்த் தண்துழாய் முடி மாயவனே ! அருளாய் *

காயமும் சீவனுமாய்க், கழிவாய்ப் பிறப்பாய்ப் * பின்னும் நீ

மாயங்கள் செய்து வைத்தி, இவை யென்ன மயக்குக்களே !            7.8.5

மயக்கா வாமனனே! மதியாம் வண்ணம் ஒன்று அருளாய் *

அயர்ப்பாய்த் தேற்றமுமாய், அழலாய்க் குளிராய் வியவாய் *

வியப்பாய், வென்றிகளாய் வினையாய்ப் பயனாய் * பின்னும் நீ

துயக்காய் நீ நின்றவாறு, இவை யென்ன துயரங்களே !      7.8.6

துயரங்கள் செய்யும் கண்ணா ! சுடர்நீள்முடியாய் ! அருளாய் *

துயரம் செய் மானங்களாய் மதனாகி உகவைகளாய்த் *

துயரம் செய் காமங்களாய்த் துலையாய் நிலையாய் நடையாய்த் *

துயரங்கள் செய்து வைத்தி இவை யென்ன சுண்டாயங்களே !    7.8.7

என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் ? என்னையாளும் கண்ணா ! *

இன்னதோர் தன்மையை யென்று உன்னை யாவர்க்கும் தேற்றரியை *

முன்னிய மூவுலகு மவையாய் அவற்றைப் படைத்துப் *

பின்னும் உள்ளாய் ! புறத்தாய் ! இவை யென்ன இயற்கைகளே !        7.8.8

என்ன இயற்கைகளால், எங்ஙனே நின்றிட்டாய் ? என் கண்ணா ! *

துன்னு கர சரணம் முதலாக, எல்லா வுறுப்பும் *

உன்னு சுவை யொளி, ஊறொலி நாற்றம் முற்றும் நீயே *

உன்னை யுணரவுறில், உலப்பில்லை நுணுக்கங்களே.       7.8.9

இல்லை நுணுக்கங்களே இதனிற் பிறிதென்னும் வண்ணம் *

தொல்லை நன்னூலில் சொன்ன உருவும் அருவும் நீயே *

அல்லித் துழாயலங்கல் அணிமார்ப ! என் அச்சுதனே ! *

வல்லதோர் வண்ணம்சொன்னால் அதுவேஉனக்கு ஆம்வண்ணமே.   7.8.10

ஆம்வண்ணம் இன்னதொன்றென்று அறிவதரிய அரியை *

ஆம்வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்துரைத்த *

ஆம்வண்ண வொண் தமிழ்கள் இவை யாயிரத்துள் இப்பத்தும் *

ஆம்வண்ணத்தாலுரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே.            7.8.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.