[highlight_content]

Thiruvoymozhi 7-9

திருவாய்மொழி

ஏழாம் பத்து

ஒன்பதாம் திருவாய்மொழி

என்றைக்கும், என்னை உய்யக் கொண்டு போகிய *

அன்றைக் கன்று என்னைத் தன்னாக்கி, என்னால் தன்னை *

இன் தமிழ் பாடிய ஈசனை, ஆதியாய்

நின்ற என் சோதியை * என்சொல்லி, நிற்பனோ ?         7.9.1

என் சொல்லி நிற்பன் ? என்னின்னுயி ரின்றொன்றாய் *

என் சொல்லால் யான் சொன்ன, இன் கவி யென்பித்துத் *

தன் சொல்லால் தான் தன்னைக், கீர்த்தித்த மாயன் * என்

முன் சொல்லும், மூவுருவாம் முதல்வனே.        7.9.2

ஆமுதல்வன் இவனென்று, தற்றேற்றி * என்

நாமுதல் வந்து புகுந்து, நல்லின் கவி *

தூமுதல் பத்தர்க்குத், தான் தன்னைச் சொன்ன * என்

வாய் முதலப்பனை, என்று மறப்பனோ ?            7.9.3

அப்பனை என்று மறப்பன் ?, என்னாகியே *

தப்புதலின்றித், தனைக் கவி தான் சொல்லி *

ஒப்பிலாத் தீவினையேனை, உய்யக் கொண்டு *

செப்பமே செய்து, திரிகின்ற சீர்கண்டே.    7.9.4

சீர் கண்டு கொண்டு, திருந்து நல்லின்கவி *

நேர்பட யான் சொல்லும், நீர்மை யிலாமையில் *

ஏர்விலா என்னைத் தன்னாக்கி, என்னால் தன்னைப் *

பார் பரவு இன் கவி பாடும், பரமரே.        7.9.5

இன்கவி பாடும், பரம கவிகளால் *

தன்கவி தான் தன்னைப் பாடுவியாது * இன்று

நன்கு உவந்து என்னுடனாக்கி, என்னால் தன்னை *

வன்கவி பாடும், என் வைகுந்த நாதனே.         7.9.6

வைகுந்த நாதன், என் வல்வினை மாய்ந்தறச் *

செய்குந்தன், தன்னை என்னாக்கி என்னால் தன்னை *

வைகுந்தனாகப், புகழ வண் தீன்கவி *

செய்குந்தன் தன்னை, எந்நாள் சிந்தித்தார்வனோ ?       7.9.7

ஆர்வனோ ? ஆழியங்கை, எம்பிரான் புகழ் *

பார் விண் நீர், முற்றும் கலந்து பருகிலும் *

ஏர்விலா என்னைத் தன்னாக்கி, என்னால் தன்னைச் *

சீர்பெற இன்கவி சொன்ன, திறத்துக்கே.  7.9.8

திறத்துக்கேய் துப்புரவாம், திருமால் இன் சீர் *

இறப்பு எதிர் காலம், பருகிலும் ஆர்வனோ ? *

மறப்பிலா என்னைத் தன்னாக்கி, என்னால் தன்னை *

உறப்பல இன் கவி சொன்ன, உதவிக்கே.       7.9.9

உதவிக் கைம்மாறு, என்னுயிர் என்ன உற்றெண்ணில் *

அதுவும் மற்றாங்கவன் தன்னது, என்னால் தன்னைப் *

பதவிய இன்கவி பாடிய, அப்பனுக்கு *

எதுவும் ஒன்றுமில்லை செய்வது, இங்குமங்கே.          7.9.10

இங்கும் அங்கும், திருமாலன்றி யின்மை கண்டு *

அங்ஙனே, வண்குருகூர்ச் சடகோபன் *

இங்ஙனே சொன்ன, ஓராயிரத்து இப்பத்தும் *

எங்ஙனே சொல்லினும், இன்பம் பயக்குமே.    7.9.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.