[highlight_content]

Thiruvoymozhi 8-9

திருவாய்மொழி

எட்டாம் பத்து

ஒன்பதாம் திருவாய்மொழி

கருமாணிக்க மலை மேல் மணித்தடம் தாமரைக் காடுகள் போல் *

திருமார்வு வாய் கண்கை உந்தி காலுடையாடைகள் செய்ய பிரான் *

திருமால் எம்மான் செழுநீர் வயல் குட்டநாட்டுத் திருப்புலியூர் *

அருமாயன்பேரன்றிப்பேச்சிலள் அன்னைமீர்! இதற்கென்செய்கேனோ?    8.9.1                திருப்புலியூர் குட்டநாடு

அன்னைமீர் ! இதற்கு என் செய்கேன்? அணிமேருவின் மீதுலவும் *

துன்னுசூழ் சுடர் ஞாயிறும் அன்றியும் பல் சுடர்களும் போல் *

மின்னு நீள் முடியாரம் பல்கலன் தானுடை எம்பெருமான் *

புன்னையம் பொழில் சூழ் திருப்புலியூர் புகழும் இவளே.   8.9.2      திருப்புலியூர் குட்டநாடு

புகழும் இவள் நின்று இராப்பகல் பொருநீர்க்கடல் தீப்பட்டு * எங்கும்

திகழு மெரியொடு செல்வ தொப்பச் செழுங் கதிராழி முதல் *

புகழும் பொருபடையேந்திப் போர்புக்கு, அசுரரைப் பொன்றுவித்தான்*

திகழு மணி நெடு மாட நீடு திருப்புலியூர் வளமே.   8.9.3      திருப்புலியூர் குட்டநாடு

ஊர் வளங்கிளர் சோலையும் கரும்பும் பெருஞ் செந்நெலும் சூழ்ந்து *

ஏர் வளங்கிளர் தண்பணைக் குட்டநாட்டுத் திருப்புலியூர்ச் *

சீர் வளங்கிளர் மூவுலகுண்டுமிழ் தேவ பிரான் *

பேர் வளங்கிளர்ந்தன்றிப் பேச்சிலள் இன்று, இப்புனையிழையே.       8.9.4        திருப்புலியூர் குட்டநாடு

புனையிழைகளணிவும் ஆடை யுடையும் புதுக் கணிப்பும் *

நினையும் நீர்மையதன்று இவட்கு இது நின்று நினைக்கப் புக்கால் *

சுனையினுள் தடந்தாமரை மலரும், தண் திருப்புலியூர் *

முனைவன் மூவுலகாளி அப்பன், திருவருள் மூழ்கினளே.           8.9.5      திருப்புலியூர் குட்டநாடு

திருவருள் மூழ்கி வைகலும், செழுநீர்நிறக் கண்ணபிரான் *

திருவருள்களும் சேர்ந்தமைக்கு, அடையாளம் திருந்தவுள *

திருவருளருளால், அவன் சென்று சேர் தண்திருப்புலியூர் *

திருவருள் கமுகொண் பழத்தது, மெல்லியல் செவ்விதழே.      8.9.6      திருப்புலியூர் குட்டநாடு

மெல்லிலைச் செல்வ வண்கொடிப்புல்க வீங்கிளந்தாள் கமுகின் *

மல்லிலை மடல் வாழை ஈன்கனி சூழ்ந்து, மணம் கமழ்ந்து * புல்லிலைத் தெங்கினூடு காலுலவும் தண் திருப்புலியூர் *

மல்லலஞ் செல்வக் கண்ணன் தாளடைந்தாள் இம் மடவரலே.  8.9.7      திருப்புலியூர் குட்டநாடு

மடவரலன்னைமீர்கட்கு என்சொல்லிச் சொல்லுகேன் ? மல்லைச்செல்வ

வடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய்யழல் வான்புகை போய்த் *

திடவிசும்பில் அமரர் நாட்டை மறைக்கும் தண் திருப்புலியூர்ப் *

படவர வணையான் தன் நாமமல்லால் பரவாள் இவளே.  8.9.8      திருப்புலியூர் குட்டநாடு

பரவாள்இவள்நின்று இராப்பகல் பனிநீர்நிறக் கண்ணபிரான் *

விரவாரிசை மறை வேதியரொலி வேலையில் நின்றொலிப்பக் *

கரவார் தடந்தொறும், தாமரைக் கயம் தீவிகை நின்றலரும் *

புரவார் கழனிகள் சூழ் திருப்புலியூர்ப் புகழன்றி மற்றே.      8.9.9      திருப்புலியூர் குட்டநாடு

அன்றி மற்றோ ருபாயமென் ? இவளந்தண் துழாய் கமழ்தல் *

குன்ற மாமணி மாட மாளிகைக், கோலக் குழாங்கள் மல்கி *

தென் திசைத் திலதம் புரை, குட்டநாட்டுத் திருப்புலியூர் *

நின்ற மாயப் பிரான் திருவருளாம், இவள் நேர் பட்டதே.  8.9.10    திருப்புலியூர் குட்டநாடு

நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் தன்னடிமை *

நேர்பட்டதொண்டர்தொண்டர்தொண்டர் தொண்டன்சடகோபன் *சொல்

நேர்பட்ட தமிழ்மாலை ஆயிரத்துள் இவை பத்தும் நேர்பட்டாரவர் *

நேர்பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே.  8.9.11    திருப்புலியூர் குட்டநாடு

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.