[highlight_content]

Thiruvoymozhi 2-10

திருவாய்மொழி

இரண்டாம் பத்து

பத்தாம் திருவாய்மொழி

கிளரொளி யிளமை, கெடுவதன் முன்னம் *

வளரொளி மாயோன், மருவிய கோயில் *

வளரிளம் பொழில் சூழ், மாலிருஞ்சோலை *

தளர்விலராகில், சார்வது சதிரே.      2.10.1    திருமாலிருஞ்சோலை

சதிரிள மடவார் தாழ்ச்சியை, மதியாது *

அதிர் குரல் சங்கத்து, அழகர் தம் கோயில் *

மதி தவழ் குடுமி, மாலிருஞ்சோலைப்

பதியது * ஏத்தி எழுவது, பயனே.    2.10.2    திருமாலிருஞ்சோலை

பயனல்ல செய்து பயனில்லை, நெஞ்சே !*

புயல் மழை வண்ணர், புரிந்துறை கோயில் *

மயல்மிகு பொழில் சூழ், மாலிருஞ்சோலை *

அயல்மலை யடைவது, அது கருமமே.     2.10.3    திருமாலிருஞ்சோலை

கருமவன் பாசம் கழித்துழன்று, உய்யவே *

பெருமலை யெடுத்தான், பீடுறை கோயில் *

வருமழை தவழும், மாலிருஞ்சோலை *

திருமலை யதுவே, அடைவது திறமே.     2.10.4    திருமாலிருஞ்சோலை

திறமுடை வலத்தால், தீவினை பெருக்காது *

அறமுயலாழிப், படையவன் கோயில் *

மறுவில் வண்சுனை சூழ், மாலிருஞ்சோலை *

புறமலை சாரப், போவது கிறியே.      2.10.5    திருமாலிருஞ்சோலை

கிறியென நினைமின், கீழ்மை செய்யாதே *

உறியமர் வெண்ணெய், உண்டவன் கோயில் *

மறியொடு பிணைசேர் மாலிருஞ்சோலை *

நெறிபட, அதுவே நினைவது நலமே.    2.10.6    திருமாலிருஞ்சோலை

நலமென நினைமின், நரகழுந்தாதே *

நிலமுன மிடந்தான், நீடுறை கோயில் *

மலமறு மதி சேர், மாலிருஞ்சோலை *

வலமுறை யெய்தி, மருவுதல் வலமே.       2.10.7    திருமாலிருஞ்சோலை

வலஞ் செய்து, வைகல் வலங் கழியாதே *

வலஞ் செய்யும், ஆய மாயவன் கோயில் *

வலஞ் செய்யும் வானோர், மாலிருஞ்சோலை *

வலஞ் செய்து, நாளும் மருவுதல் வழக்கே.        2.10.8    திருமாலிருஞ்சோலை

வழக்கென நினைமின், வல்வினை மூழ்காது *

அழக்கொடி யட்டான் அமர் பெருங் கோயில் *

மழக் களிற்றினம் சேர், மாலிருஞ்சோலை *

தொழக் கருதுவதே, துணிவது சூதே.        2.10.9    திருமாலிருஞ்சோலை

சூதென்று, களவும் சூதும் செய்யாதே *

வேத முன் விரித்தான், விரும்பிய கோயில் *

மாதுறு மயில்சேர், மாலிருஞ்சோலை *

போதவிழ் மலையே, புகுவது பொருளே.          2.10.10  திருமாலிருஞ்சோலை

பொருளென்று, இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல் *

மருளில் வண் குருகூர், வண் சடகோபன் *

தெருள் கொள்ளச் சொன்ன, ஓராயிரத்துள் இப்பத்து *

அருளுடையவன் தாள், அணைவிக்கும் முடித்தே.    2.10.11  திருமாலிருஞ்சோலை

*************

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.