[highlight_content]

Thiruvoymozhi 2-2

திருவாய்மொழி

இரண்டாம் பத்து

இரண்டாம் திருவாய்மொழி

திண்ணன், வீடு முதல் முழுதுமாய் *

எண்ணின் மீதியன், எம்பெருமான் *

மண்ணும் விண்ணுமெல்லாம், உடனுண்ட நம்

கண்ணன் * கண்ணல்லது, இல்லை ஓர் கண்ணே.       2.2.1

ஏ பாவம் ! பரமே ! * ஏழுலகும்

ஈபாவம் செய்து, அருளால் அளிப்பாரார் ? *

மாபாவம் விட, அரற்குப் பிச்சை பெய் *

கோபால கோளரி ஏறன்றியே.          2.2.2

ஏறனைப் பூவனைப், பூமகள் தன்னை *

வேறின்றி விண்தொழத், தன்னுள் வைத்து *

மேல் தன்னை, மீதிட நிமிர்ந்து மண்கொண்ட *

மால்தனில், மிக்கும் ஓர் தேவும் உளதே?           2.2.3

தேவும், எப்பொருளும் படைக்கப் *

பூவில், நான்முகனைப் படைத்த *

தேவன், எம்பெருமானுக்கல்லால் *

பூவும், பூசனையும் தகுமே ?     2.2.4

தகும் சீர்த், தன்தனி முதலினுள்ளே *

மிகும் தேவும், எப்பொருளும் படைக்கத் *

தகும் கோலத் தாமரைக் கண்ணன், எம்மான் *

மிகும் சோதி மேல், அறிவார் யவரே ?      2.2.5

யவரும் யாவையும், எல்லாப் பொருளும் *

கவர்வின்றித், தன்னுளொடுங்க நின்ற *

பவர் கொள் ஞான வெள்ளச், சுடர் மூர்த்தி *

அவர், எம்மாழி யம் பள்ளியாரே.     2.2.6

பள்ளி யாலிலை, ஏழுலகும் கொள்ளும் *

வள்ளல், வல்வயிற்றுப் பெருமான் *

உள்ளுள் ஆர் அறிவார் ? அவன் தன் *

கள்ள மாய, மனக் கருத்தே.     2.2.7

கருத்தில் தேவும், எல்லாப் பொருளும் *

வருத்தித்த, மாயப் பிரானை யன்றி * ஆரே

திருத்தித், திண்ணிலை மூவுலகும் * தம்முள்

இருத்திக், காக்கும் இயல்வினரே ?     2.2.8

காக்கும் இயல்வினன், கண்ண பெருமான் *

சேர்க்கை செய்து, தன்னுந்தியுள்ளே

வாய்த்த * திசைமுகன், இந்திரன் வானவர் *

ஆக்கினான், தெய்வ வுலகுகளே.    2.2.9

கள்வா ! எம்மையும் ஏழுலகும் * நின்

னுள்ளே தோற்றிய இறைவ ! என்று *

வெள்ளேறன் நான்முகன், இந்திரன் வானவர் *

புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே.        2.2.10

ஏத்த, ஏழுலகும் கொண்ட கோலக்

கூத்தனைக் * குருகூர்ச் சடகோபன் சொல் *

வாய்த்த ஆயிரத்துள், இவை பத்துடன் *

ஏத்த வல்லவர்க்கு, இல்லை ஓரூனமே.            2.2.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.