[highlight_content]

Thiruvoymozhi 2-3

திருவாய்மொழி

இரண்டாம் பத்து

மூன்றாம் திருவாய்மொழி

ஊனில் வாழுயிரே! நல்லை! போ! உன்னைப் பெற்று *

வானுளார் பெருமான், மதுசூதன் என்னம்மான் *

தானும் யானுமெல்லாம், தன்னுள்ளே கலந்தொழிந்தோம் *

தேனும் பாலும் நெய்யும், கன்னலும் அமுது மொத்தே.         2.3.1

ஒத்தார் மிக்காரை இலையாய, மாமாயா ! *

ஒத்தாய் எப்பொருட்கும், உயிராய் * என்னைப் பெற்ற

அத்தாயாய்த் தந்தையாய், அறியாதன அறிவித்த *

அத்தா ! நீ செய்தன, அடியேன் அறியேனே.       2.3.2

அறியாக் காலத்துள்ளே, அடிமைக் கண் அன்பு செய்வித்து *

அறியா மாமாயத்து அடியேனை, வைத்தாய் ஆல் *

அறியாமைக் குறளாய், நிலம் மாவலி மூவடி யென்று *

அறியாமை வஞ்சித்தாய் ! எனதாவியுள் கலந்தே.     2.3.3

எனதாவியுள் கலந்த, பெரு நல்லுதவிக் கைம்மாறு *

எனதாவி தந்தொழிந்தேன், இனி மீள்வ தென்பதுண்டே ? *

எனதாவி யாவியும் நீ, பொழிலேழு முண்ட எந்தாய் ! *

எனதாவி யார்? யான் ஆர்?, தந்த நீ கொண்டாக்கினையே.   2.3.4

இனி, ஆர் ஞானங்களால் எடுக்கலெழாத எந்தாய் ! *

கனிவார் வீட்டின்பமே ! என் கடல்படா அமுதே ! *

தனியேன் வாழ் முதலே ! பொழிலேழும் ஏனமொன்றாய் *

நுனியார் கோட்டில் வைத்தாய் ! நுன பாதம் சேர்ந்தேனே.              2.3.5

சேர்ந்தார் தீவினைகட்கு அருநஞ்சைத், திண்மதியைத் *

தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாது, அவருயிரைச் *

சோர்ந்தே புகல் கொடாச் சுடரை, அரக்கியை மூக்கு

ஈர்ந்தாயை * அடியேன் அடைந்தேன், முதல் முன்னமே.    2.3.6

முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே ! *

பன்னலார் பயிலும் பரனே ! பவித்திரனே ! *

கன்னலே அமுதே! கார்முகிலே! என் கண்ணா ! *

நின்னலால் இலேன் காண், என்னை நீ குறிக் கொள்ளே.    2.3.7

குறிக்கொள் ஞானங்களால், எனையூழி செய் தவமும் *

கிறிக் கொண்டு இப்பிறப்பே, சில நாளில் எய்தினன் யான் *

உறிக் கொண்ட வெண்ணெய் பால், ஒளித்துண்ணு மம்மான் பின் *

நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே.        2.3.8

கடிவார் தண்ணந் துழாய்க் கண்ணன், விண்ணவர் பெருமான் *

படிவான மிறந்த பரமன், பவித்திரன் சீர்ச் *

செடியார் நோய்கள் கெடப், படிந்து குடைந்தாடி *

அடியேன் வாய் மடுத்துப் பருகிக், களித்தேனே.           2.3.9

களிப்பும் கவர்வும் அற்றுப், பிறப்புப் பிணி மூப்பிறப்பற்று *

ஒளிக்கொண்ட சோதியுமாய், உடன் கூடுவதென்று கொலோ *

துளிக்கின்ற வான் இந்நிலம், சுடராழி சங்கேந்தி *

அளிக்கின்ற மாயப் பிரான் அடியார்கள், குழாங்களையே.     2.3.10

குழாங்கொள் பேரரக்கன், குலம் வீய முனிந்தவனைக் *

குழாங்கொள் தென் குருகூர்ச், சடகோபன் தெரிந்துரைத்தக் *

குழாங்கொ ளாயிரத்துள், இவை பத்தும் உடன் பாடிக் *

குழாங்களாய் அடியீர் ! உடன் கூடி நின்றாடுமினே.            2.3.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.