[highlight_content]

Thiruvoymozhi 2-4

திருவாய்மொழி

இரண்டாம் பத்து

நான்காம் திருவாய்மொழி

ஆடியாடி, அகம் கரைந்து * இசை

பாடிப் பாடிக், கண்ணீர் மல்கி * எங்கும்

நாடி நாடி நரசிங்கா ! என்று *

வாடி வாடும், இவ்வாணுதலே.          2.4.1

வாணுதல் இம்மடவரல் * உம்மைக்

காணும் ஆசையுள் நைகின்றாள் * விறல்

வாணன், ஆயிரம் தோள் துணித்தீர் * உம்மைக்

காண, நீர் இரக்கமிலீரே.           2.4.2

இரக்க மனத்தோடு எரியணை *

அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள் *

இரக்கமெழீர், இதற்கு என் செய்கேன் ? *

அரக்க னிலங்கை, செற்றீருக்கே.     2.4.3

இலங்கை செற்றவனே ! என்னும் * பின்னும்

வலங் கொள் புள்ளுயர்த்தாய் ! என்னும் * உள்ளம்

மலங்க வெவ்வுயிர்க்கும் * கண்ணீர் மிகக்

கலங்கிக், கை தொழும் நின்று இவளே.                 2.4.4

இவள் இராப் பகல் வாய் வெரீஇ * தன

குவளை யொண் கண்ண நீர் கொண்டாள் * வண்டு

திவளும் தண்ணந் துழாய் கொடீர் * என

தவள வண்ணர் தகவுகளே.      2.4.5

தகவுடையவனே! என்னும் * பின்னும்

மிக விரும்பும், பிரான் என்னும் * எனது

அகவுயிர்க்கு அமுதே ! என்னும் * உள்ளம்

உக உருகி நின்று உள்ளுளே.          2.4.6

உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து * என

வள்ளலே ! கண்ணனே ! என்னும் * பின்னும்

வெள்ள நீர்க் கிடந்தாய் ! என்னும் * என

கள்வி தான் பட்ட வஞ்சனையே !              2.4.7

வஞ்சனே ! என்னும், கை தொழும் * தன

நெஞ்சம் வேவ, நெடிதுயிர்க்கும் * விறல்

கஞ்சனை வஞ்சனை செய்தீர் ! * உம்மைத்

தஞ்சமென்று இவள் பட்டனவே.     2.4.8

பட்ட போது, எழு போதறியாள் * விரை

மட்டலர் தண்துழா யென்னும் * சுடர்

வட்ட வாய் நுதி நேமியீர் ! * நுமது

இட்டம் என் கொல், இவ்வேழைக்கே ?       2.4.9

ஏழை பேதை இராப் பகல் * தன

கேழில் ஒண் கண்ண நீர் கொண்டாள் * கிளர்

வாழ்வை வேவ இலங்கை செற்றீர் ! * இவள்

மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே.       2.4.10

வாட்டமில் புகழ் வாமனனை * இசை

கூட்டி, வண் சடகோபன் சொல் * அமை

பாட்டு ஓராயிரத்து, இப்பத்தால் * அடி

சூட்டலாகும், அந்தாமமே.      2.4.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.