[highlight_content]

Thiruvoymozhi 2-7

திருவாய்மொழி

இரண்டாம் பத்து

ஏழாம் திருவாய்மொழி

கேசவன் தமர், கீழ் மேலெம ரேழெழு பிறப்பும் *

மாசதிரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா ! *

ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன்

விண்ணோர் நாயகன் * எம்பிரான் எம்மான் நாராயணனாலே.        2.7.1

நாரணன் முழுவேழுலகுக்கும் நாதன், வேதமயன் *

காரணம் கிரிசை கருமம், இவை முதல்வன் எந்தை *

சீரணங்கு அமரர் பிறர் பலரும், தொழுதேத்த நின்று *

வாரணத்தை மருப்பொசித்த பிரான், என் மாதவனே.         2.7.2

மாதவ னென்றதே கொண்டு, என்னையினி இப்பால் பட்டது *

யாதவங்களும் சேர்கொடேனென்று என்னுள் புகுந்திருந்து *

தீதவங் கெடுக்கும் அமுதம், செந்தாமரைக் கண் குன்றம் *

கோதவமிலென் கன்னற் கட்டி, எம்மான் என் கோவிந்தனே.         2.7.3

கோவிந்தன் குடக்கூத்தன், கோவலனென்றென்றே குனித்துத் *

தேவும் தன்னையும், பாடியாடத் திருத்தி * என்னைக் கொண்டு என்

பாவந் தன்னையும் பாறக் கைத்து, எமரேழெழு பிறப்பும் *

மேவும் தன்மைய மாக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே.     2.7.4

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள் *

விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு *

விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி *

விட்டிலங்கு முடியம்மான் மதுசூதனன் தனக்கே.       2.7.5

மதுசூதனை யன்றி மற்றிலேனென்று எத்தாலும் கருமமின்றித் *

துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்று, ஊழியூழி தொறும் *

எதிர்சூழல் புக்கெனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய *

விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே.       2.7.6

திரிவிக்கிரமன் செந்தாமரைக்கண் எம்மான் என் செங்கனிவாய் *

உருவிற் பொலிந்த வெள்ளைப் பளிங்கு நிறத்தனனன் என்றென்று *

உள்ளிப் பரவிப் பணிந்து பல்லூழியூழி நின் பாத பங்கயமே *

மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே !      2.7.7

வாமனன் ! என் மரதக வண்ணன் ! தாமரைக் கண்ணினன் *

காமனைப் பயந்தாய்!* என்றென்று உன்கழல் பாடியே பணிந்து

தூமனத்தனனாய்ப் பிறவித் துழதி நீங்க என்னைத்

தீமனம் கெடுத்தாய், உனக்கு என் செய்கேன்?என் சிரீதரனே!          2.7.8

சிரீஇதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்றென்று இராப்பகல் வாய்

வெரீஇ * அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த் துயிர்த்து *

மரீஇய தீவினை மாள இன்பம் வளர வைகும் வைகல்

இரீஇ * உன்னை என்னுள் வைத்தனை என் இருடீகேசனே.        2.7.9

இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம் *

முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மானென்றென்று *

தெருடியாகில் நெஞ்சே ! வணங்கு திண்ணம் அறி * அறிந்து

மருடியேலும் விடேல் கண்டாய் நம்பி பற்பநாபனையே.     2.7.10

பற்பநாபன், உயர்வற உயரும் பெருந் திறலோன் *

எற்பரன், என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த

கற்பகம் * என் அமுதம் கார்முகில் போலும் வேங்கட நல்

வெற்பன் * விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே.       2.7.11    திருவேங்கடம் திருப்பதி

தாமோதரனைத் தனிமுதல்வனை, ஞாலமுண்டவனை *

ஆமோ தரமறிய ஒருவர்க்கென்றே, தொழுமவர்கள் *

தாமோதரனுருவாகிய, சிவற்கும் திசைமுகற்கும் *

ஆமோ தரமறிய ? எம்மானை என்னாழி வண்ணனையே.              2.7.12

வண்ணமாமணிச் சோதியை, அமரர் தலைமகனைக் *

கண்ணனை நெடுமாலைத், தென்குருகூர்ச் சடகோபன்

பண்ணிய தமிழ்மாலை ஆயிரத்துள், இவை பன்னிரண்டும் *

பண்ணிற் பன்னிருநாமப் பாட்டு, அண்ணல் தாள் அணைவிக்குமே.     2.7.13

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.